Facebook Twitter RSS

Saturday, March 31, 2012

தமிழக மக்களுக்கு ஒரு வருடத்திற்​கான மின் அதிர்ச்சி அறிவிப்பு!


தமிழகத்தில் மின் கட்டணங்கள் அதிகரிப்பு - ஏப்ரல் முதல் அமுல் - அவதிக்குள்ளாகும் மக்கள்
சென்னை:மின் தடையால் இருண்ட மாநிலமாக மாறிவரும் தமிழகத்தில் புதிய மின்கட்டண உயர்வு மூலம் தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது ஆளும் அ.இ.அ.தி.மு.க அரசு. ஏற்கனவே பேருந்து கட்டணம், பால் விலை உயர்வு ஆகியவற்றால் அவதிக்குள்ளாகும் மக்களை வாட்டும் விதமாக வெளியாகியுள்ள இக்கட்டண உயர்வு ஒரு வருடத்திற்காம். இந்த கட்டண உயர்வு வரும், ஏப்ரல் 1- முதல் அமலுக்கு வருகிறது.
எவ்வளவுதான் மக்களை விரோத ஆட்சியை நடத்தினாலும் காசு கொடுத்தால் ஓட்டுக்கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆட்சிபுரியும் அ.இ.அ.தி.மு.க அரசின் தொடர் அராஜ போக்கை இம்மின்கட்டண உயர்வு உணர்த்துகிறது.

எகிப்து:அரசியல் சாசனத்தை உருவாக்கும் குழுவிற்கு அம்ர் மூஸா எதிர்ப்பு!


Amr Moussa
கெய்ரோ:புரட்சிக்கு பிந்தைய எகிப்தில் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்க தேர்வுச் செய்யப்பட்ட குழுவிற்கு அதிபர் வேட்பாளரும், அரபுலீக்கின் முன்னாள் பொதுச் செயலாளருமான அம்ர் மூஸா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேற்கத்திய ஆதரவாளர்களான மதசார்பற்ற கட்சிகள் குழுவில் இருந்து வாபஸ் பெற்றதற்கு பிறகு அம்ர் மூஸா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தை உருவாக்கும் குழுவில் அனைத்து தரப்பினரும் இடம்பெறவேண்டும் என அவர் கூறுகிறார்.
அரசியல் சாசனத்தை உருவாக்கும் குழுவில் 50 சதவீத உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்தும், மீதமுள்ளவர்கள் பொது சமூகத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை மேற்கத்திய ஆதரவாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபிடல் காஸ்ட்ரோவுடன் போப் சந்திப்பு!


Cuban leader Fidel Castro and Pope Benedict
ஹவானா:கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் தலைவரான ஃபிடல்காஸ்ட்ரோவுடன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பெனடிக்ட் சந்திப்பை நடத்தியுள்ளார்.
ஹவானாவில் புரட்சி சதுக்கத்தில் நடந்த திருபலிக்கு முன்னர் இந்த சந்திப்பு நடந்தது. சந்திப்பின் போது இருவரும் பரஸ்பரம் பரிசுகளையும் பரிமாறிக் கொண்டனர்.

Friday, March 30, 2012

ஈரானுடன் உறவை துண்டிக்க மாட்டோம் – ப்ரிக்ஸ் நாடுகள்அறிவிப்பு!


ஈரானுடன் உறவை துண்டிக்க மாட்டோம் - ப்ரிக்ஸ் நாடுகள்அறிவிப்பு!
புதுடெல்லி:அமெரிக்காவும், ஐரோப்பாவும் தடை ஏற்படுத்தியுள்ளன என்ற காரணத்தால் ஈரானுடன் உறவை துண்டிக்கமாட்டோம் என்று ப்ரிக்ஸ் நாடுகள் அறிவித்துள்ளன.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ப்ரிக்ஸின் உச்சி மாநாட்டிற்கு முன்னோடியாக டெல்லியில் நேற்று நடந்த ப்ரிக்ஸ் நாடுகளின் வர்த்தக அமைச்சர்களின் கூட்டத்தில் இம்முடிவு அறிவிக்கப்பட்டது.
‘ஈரானின் தடை குறித்து நாங்கள் விவாதித்தோம். ப்ரிக்ஸில் அனைத்து நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் ஆகும். ஈரானுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்தை நாங்கள் மதிக்கிறோம்’ என்று இந்தியாவின் வர்த்தகதுறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறினார். கூட்டத்திற்கு பிறகு கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் அனைத்து ப்ரிக்ஸ் நாடுகளும் ஈரானுடன் வர்த்தகத்தை தொடருவோம் என்று அறிவித்துள்ளன.

சதாம் ஹுஸைனின் அடக்கஸ்தலத்தை மூட உத்தரவு!



பாக்தாத்:ஈராக் முன்னாள் அதிபரும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இறுதிவரை போராடியவருமான சதாம் ஹுஸைனின் கப்ருஸ்தானை பூட்டிவிட்டு அவரது அடக்கஸ்தலத்தில்இருந்து மீதமுள்ளவற்றை வேறு இடத்தில் புதைக்க ஈராக் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை வாபஸ் பெறக்கோரி சதாமின் பிறந்த கிராமத்தைச் சார்ந்த பிரதிநிதிகளும் பழங்குடியினரும் அரசுடன் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

Thursday, March 29, 2012

அமெரிக்காவில் இஸ்ரேலிய எதிர்ப்பாளர்கள் இஸ்ரேலிய தயாரிப்புகளை புறக்கணிப்பு!


அமெரிக்காவில் இஸ்ரேலிய எதிர்ப்பாளர்கள் இஸ்ரேலிய தயாரிப்புகளை புறக்கணிப்பு
நியூயார்க்:அமெரிக்காவில் இஸ்ரேலிய எதிர்ப்பாளர்கள் இஸ்ரேலின் தயாரிப்புகளை புறக்கணிப்பார்கள். ஃபலஸ்தீனின் உரிமைகளை மறுக்கும் நடவடிக்கைகளை நிறுத்த இஸ்ரேல் அரசு மீது அழுத்தம் கொடுக்கவே இந்நடவடிக்கை.
நேற்று முன்தினம் ப்ரூக்ளின் டெக்னிக்கல் ஹைஸ்கூலில் ஒன்று திரண்ட பார்க் ஸ்லோப் கோ-ஆபரேசனில் உறுப்பினர்களான ஆயிரக்கணக்கானோர் இஸ்ரேலிய தயாரிப்புகளை புறக்கணிப்பதற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.

இந்தியாவில் புற்றுநோய்க்கு இளைஞர்கள் அதிகம் பேர் பலி!


Cancer killing younger people in India, tobacco main cause
புதுடெல்லி:இந்தியாவில் புற்றுநோயால் பலியானவர்களில் 70 சதவீதம்பேர் இளைஞர்கள் என்று தி லான்ஸெட் இதழில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் கடந்த 2010 ஆம் ஆண்டில் புற்றுநோய்க்கு பலியானவர்களில் 30-69 வயதுக்குள்ளானவர்கள் 70 சதவீதம்பேர் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. அதிலும் புகைப்பதால் ஏற்படும் புற்றுநோய் பாதித்து உயிரிழந்தவர்களே அதிகம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

கோஃபி அன்னனின் அமைதிக்கான பரிந்துரைகளை சிரியா அரசு ஏற்பு!


கோஃபி அன்னனின் அமைதிக்கான பரிந்துரைகளை சிரியா அரசு ஏற்பு!
பீஜிங்:சிரியாவில் நடந்துவரும் மோதலை முடிவுக்கு கொண்டுவர அரபு லீக்-ஐ.நா மத்தியஸ்தர் கோஃபி அன்னன் பரிந்துரைத்த ஆறு அம்ச திட்டத்தை சிரியா அரசு அங்கீகரித்துள்ளது.
ஒரு ஆண்டிற்கும் மேலாக சிரியாவில் நடந்து வரும் மோதலை முடிவுக்கு வரும் என கருதப்படும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை கோஃபி அன்னனின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்.
போர் நிறுத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை அங்கீகரிப்பதாக சிரியா அரசு எழுதிய கடிதம் கிடைத்துள்ளதாக கோஃபி அன்னனின் செய்தி தொடர்பாளர் அஹ்மத் ஃபவ்ஸி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனை சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோஃபி அன்னன் உறுதிச்செய்துள்ளார்.

ஷேக் கர்ளாவிக்கு விசா மறுப்பு: பிரான்சிற்கு கடும் எதிர்ப்பு!


French visa ban blow to Al Qaradawi
தோஹா:உலக புகழ்ப்பெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர் டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவிக்கு விசா மறுத்த பிரான்சின் நடவடிக்கைக்கு சர்வதேச இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தீவிர கருத்துக்களுக்கு எதிரான கொள்கையை உடைய கர்ளாவியை பிரான்சில் நுழைய அனுமதிக்காதது வருத்தத்திற்குரியது என்று இண்டர்நேசனல் யூனியன் ஆஃப் முஸ்லிம் ஸ்காலர்ஸ் பொதுச்செயலாளர் ஷேக் அலி அல் கரதாகி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

எகிப்து:இஸ்லாமிஸ்டுகள் VS ராணுவம் – பகிரங்க மோதலை நோக்கி!


Egyptian army chief Field Marshall Hussein Tantawi (L) and Brotherhood General Guide Mohammed Badei have not been able to make an alliance between the two groups work
கெய்ரோ:எகிப்தில் நெருக்கடி சூழலை உருவாக்கும் விதமாக இஸ்லாமியவாதிகளும், ராணுவமும் பகிரங்கமான மோதலுக்கு தயாராகி வருகின்றனர். நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவோம் என்ற இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அறிவிப்பு புகைந்து கொண்டிருந்த மோதலை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.
இஸ்லாமியவாதிகளுக்கு பெரும்பானமை கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம் பரிந்துரைத்த அமைச்சரவையை அங்கீகரிக்க ராணுவ கவுன்சில் மறுத்தது மற்றும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தவர்களை தங்களிடமிருந்து அகற்றிய ராணுவத்தின் செயல் ஆகியன இஃவானுல் முஸ்லிமீனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பட்கல் ஆர்.டி.எக்ஸ் பாதுகாப்பு கிடங்கு: டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பொய் செய்தி அம்பலம்!


டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பொய் செய்தி அம்பலம்
பெங்களூர்:வடக்கு கர்நாடகாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டமான பட்கலில் டன் கணக்கில் ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதாக அப்பட்டமான பொய் செய்தியை வெளியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா, இச்செய்தி பொய் என நிரூபணமானவுடன் சிறியதாக விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 23-ஆம் தேதி Delhi cops hunt for huge RDX stockpile in Bhatkal(பட்கலில் ஆர்.டி.எக்ஸ் குவியலை தேடும் வேட்டையில் டெல்லி போலீஸ்) என்ற தலைப்பில் மிகவும் முக்கியத்துவம் அளித்து ஒரு செய்தியை வெளியிட்டது. போலீஸ் வட்டாரங்களை இச்செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது.

மீண்டும் ஜெயாவின் ஹிந்துத்துவா பாசிசம்: ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டுமாம்!


jayalalitha
சென்னை:ராமர் பாலத்தை(?) தேசிய சின்னமாக அறிவிக்கவேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலில் பா.ஜ.கவினரையே அதிர்ச்சியடையச் செய்யும் வகையில் கரசேவைக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று பேசியவர் தமிழக முதல்வராக பதவி வகிக்கும் ஜெயலலிதா. குஜராத்தில் கோத்ரா ரெயில் எரிப்பை யார் நிகழ்த்தினார்கள் என்பதை கண்டுபிடிக்கும் முன்னரே முஸ்லிம்களின் பழியை போட்டார். குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்றுகுவித்த ஹிந்துத்துவா கோரத் தாண்டவத்திற்கு தலைமைத் தாங்கிய மோடியுடன் நெருங்கிய நட்பை பேணி வருபவர்.இவ்வாறு பல சூழல்களிலும் தனது ஹிந்துத்துவா பாசிச முகத்தை வெளிக்காட்டி வரும் ஜெயலலிதா, நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் பெரும் நன்மையை பெற்றுத்தரும் சேதுக் கால்வாய் திட்டத்தை கற்பனையான ராமர் பால கதை மூலம் முடக்குவதிலேயே குறியாக இருந்தார். தற்பொழுது உச்சநீதிமன்றம் இல்லாத ராமர்பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது குறித்த மத்திய அரசின் கருத்துக்களை தெரிவிக்குமாறு அரசின் வழக்குரைஞருக்கு உத்தரவிட்டுள்ளது.

Tuesday, March 27, 2012

ஷெய்க் கர்ளாவி பிரான்ஸினுள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார் – ஜனாதிபதி சார்கோசி


Qaradawiஷெய்க் யூஸுப் அல் கர்ளாவி பிரான்ஸ் நாட்டினுள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார் என அந்நாட்டின் ஜனாதிபதி நிகலஸ் சார்கோசி தெரிவித்துள்ளார்.
86 வயதான ஷெய்க் கர்ளாவி, பல அமைப்புகளின் கூட்டமைப்பான பிரான்ஸ் இஸ்லாமிய அமைப்புகளின் ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் அடுத்த மாதமளவில் அங்கு விஜயம் செய்ய இருந்தார்.
‘‘இந்த மனிதர் பிரான்ஸ் குடியரசின் எல்லைக்குள் வரவேற்கப்பட மாட்டார் என கட்டார் அமீரிடம் நானே நேரடியாகத் தெரிவித்துள்ளேன் என சார்கோசி தெரிவித்துள்ளார்.

ஷெய்க் கர்ளாவி பிரான்ஸினுள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார் – ஜனாதிபதி சார்கோசி


Qaradawiஷெய்க் யூஸுப் அல் கர்ளாவி பிரான்ஸ் நாட்டினுள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார் என அந்நாட்டின் ஜனாதிபதி நிகலஸ் சார்கோசி தெரிவித்துள்ளார்.
86 வயதான ஷெய்க் கர்ளாவி, பல அமைப்புகளின் கூட்டமைப்பான பிரான்ஸ் இஸ்லாமிய அமைப்புகளின் ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் அடுத்த மாதமளவில் அங்கு விஜயம் செய்ய இருந்தார்.
‘‘இந்த மனிதர் பிரான்ஸ் குடியரசின் எல்லைக்குள் வரவேற்கப்பட மாட்டார் என கட்டார் அமீரிடம் நானே நேரடியாகத் தெரிவித்துள்ளேன் என சார்கோசி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் குடியரசின் பெறுமானங்களை மதிக்காதவர்களை நாம் வரவேற்கப் போவதில்லை எனவும் சார்கோசி தெரிவித்துள்ளார். சார்கோசி இஸ்லாமிய எதிர்ப்புக்கு பேர் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘‘ஷெய்க் கர்ளாவியிடம் இராஜதந்திர கடவுச் சீட்டு உள்ளது. அவருக்கு வீஸா அவசியமில்லை. எனினும், அவர் பிரான்ஸினுள் நுழைவதை தடுக்கும் வகையில் நாம் நடவடிகை எடுப்போம் என சார்கோசியின் விசேட ஆலோசகர் குவைனோ தெரிவித்துள்ளார்.
அல் ஜெஸீரா இணையதளத்தில் ஷரீஆவும் வாழ்வும் என்ற பிரபல்யமிக்க வாராந்த நிகழ்ச்சியை கர்ளாவி நடத்தி வருகிறார். அத்துடன் தூனிஷியா, எகிப்து, லிபியா உள்ளிட்ட பல நாடுகளில் ஏற்பட்ட எழுச்சியை அவர் பலமாக ஆதரித்தார். அத்துடன் சிரிய எதிரணியினரின் நிதி திரட்டல் நடவடிக்கையையும் அவர் ஆரம்பித்து வைத்தார்.
அறபுப் வசந்தத்தை தீவிரமாக ஆதரிப்பதால் கர்ளாவி பலரது எதிர்ப்பை சம்பாதித்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை மீது பொருளாதாரத் தடையை ஏற்படுத்த முடியாது? – அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்


g.l.peris-and-mahinda-samarasingheஜெனீவா மாநாட்டில் அமெரிக்காவின் பிரேரணை வெற்றி பெற்றாலும் இலங்கைக்கு எதிராக பொருளதாரத்தடை விதிக்க முடியாது என அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கைக்கு எதிராக எவ்வித அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது எனவும் தெரிவித்தார்.
ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் பிரேரணை குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்று அமைச்சரால் வெளியிடப்பட்டது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

ஜெனீவா மாநாட்டில் இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர்இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படலாம் என்ற அச்சம் தற்போது பரவலாக காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். எனினும் இவ்வாறு யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் தெரிவித்தார்.

அரசைக் கவிழ்க்க சதி செய்ததன் பேரில் துருக்கியின் முன்னாள் இராணுவத் தளபதி மீது விசாரணை


ilker-basbugதுருக்கியின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் இல்கர் பாஸ்பக், உச்ச அரச பேரவையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். விசேட நீதிமன்றம் ஒன்றிற்கு பதிலாகவே இங்கு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இவர் மீதான விசாரணைகள் அவரது தொழிலுடன் தொடர்புபட்டவை அல்ல. மாறாக பயங்கரவாத குற்றச்சாட்டுடன் தொடர்புபட்டவை என மேன்முறையீட்டு நீதிமன்ற அலுவலகம் தெரிவித்துள்ளது.

தன்மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டை நகைச்சுவை என இவர் வர்ணித்துள்ள இவர், அதனை தான் மறுக்கப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

துருக்கி சிரியாவிலுள்ள தூதரகத்தை தற்காலிகமாக மூடியுள்ளது


turkey-syriaசிரியாவிலுள்ள தனது தூதரகத்தை துருக்கி தற்காலிகமாக மூடியுள்ளது. இது ஜனாதிபதி அஸதை மேலும் சர்வதேச ரீதியாக தனிமைப்படுத்த வழிவகுத்துள்ளது.
சிரியப் படையினர் ஹும்ஸ் நகரத்தை மோட்டார் தாக்குதலுக்கு உட்படுத்தி, எதிர்ப்பை அடக்க முற்பட்டு வருகின்றனர்.
‘‘ஒவ்வொரு நாளும் ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்று வருகிறது. அரசாங்கம் நகரத்தை துடைத்து வழித்துவிட்டது‘‘ என ஹும்ஸ் நகரில் வசிக்கும் செயற்பாட்டாளர் வலீத் பாரிஸ் தெரிவித்துள்ளார்.

எகிப்து:அரசியல் சாசன குழுவில் இருந்து லிபரல்கள் வாபஸ்!


Egypt liberals boycott constitution panel vote
கெய்ரோ:புரட்சிக்கு பிந்தைய எகிப்தில் புதிய அரசியல் சாசனத்தை தயாரிக்கும் குழுவில் இருந்து தீவிர மதசார்பற்ற கட்சியான லிபரல்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.
அரசியல் சாசனத்தை உருவாக்க முன்மொழியப்பட்டுள்ள நூறு உறுப்பினர்களை கொண்ட குழுவில் பெரும்பாலானோர் இஸ்லாமியவாதிகள் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி லிபரல்கள் பின்வாங்கியுள்ளனர்.

ஈரானில் 17 பிரமுகர்களுக்கு ஐரோப்பிய யூனியன் தடை!


EU names 17 Iranians sanctioned over human rights
டெஹ்ரான்:மனிதஉரிமை மீறல் குற்றம் சுமத்தி அமைச்சர் உள்பட ஈரானின் 17 பிரமுகர்களுக்கு ஐரோப்பிய யூனியன் தடை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி ஒலிபரப்பு அமைச்சர் ரிஸாதாகிபோர், செய்தி ஒலிபரப்புத்துறை தலைவர் இஸ்ஸத்துல்லாஹ் ஸார்காமி உள்ளிட்டோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சம்மட்டியால் தாக்குதல், கல் எறிந்து கொலைச் செய்தல், உறுப்புக்களை சேதப்படுத்தி கொலைச் செய்தல், கண்ணில் ஆசிட் ஊற்றுதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தினார் என்ற குற்றம் சுமத்தி சட்டத்துறை தலைவர் ஸாதிக் லாரிஜானிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்களை நடத்திய 78 ஈரானியர்களின் சொத்துக்களை முடக்கவும் முயற்சிகள் நடக்கின்றன.

அமெரிக்கா உலகை ஆண்ட காலம் முடிந்துவிட்டது – அஹ்மத் நஜாத்!


'You can no longer dictate to the world,' Ahmadinejad tells US
தெஹ்ரான்:அமெரிக்காவும், நேட்டோவும் உலக நாடுகளுக்கு கூடுதல் காலம் கட்டளை பிறப்பிக்க இயலாது என்று ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார். உலகை ஆண்ட அமெரிக்காவின் காலம் முடிந்துவிட்டது. தங்களது கொள்கையை மாற்ற அவர்கள் தயாராகவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வறுமை குறைந்துள்ளதாக மத்திய அரசின் பொய் பிரச்சாரம்


வறுமை
புதுடெல்லி:இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறும் அரசின் அறிவிப்புகளை பொய் என்று கூறியுள்ளார் தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினர் சக்ஸேனா.
நம் நாட்டின் 120 கோடி மக்கள் தொகையில் 37.5 சதவீதமாக இருந்த ஏழைகள் எண்ணிக்கை 30 சதவீதமாக குறைந்திருப்பதாக மத்திய திட்டக்குழு கடந்த வாரம் தெரிவித்தது. அதாவது, கிராமங்களில் தனி நபர் சராசரி வருமானமாக ஒரு நாளைக்கு ரூ.22க்கு கீழும், நகரங்களில் ரூ.28க்குக் கீழும் வருமானம் பெறுபவர்களை வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களாக (ஏழைகள்) கருதலாம் என சுரேஷ் டெண்டுல்கர் குழுவின் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக திட்டக்குழு மேற்கோள் காட்டியது.

Monday, March 26, 2012

மாணவர்களுக்காக சிலம்பாட்ட பயிற்சி



கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாணவர்களுக்கான சிலம்பாட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது இதில் மாணவர்கள் பலர் திரலாக கலந்துகொண்டனர்.


விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாணவர்களுக்கான சிறப்பு சிலம்பாட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி காலை 10.30 மணியளவில் துவங்கியது. இன்நிகழ்ச்சியை மதுரை மாவட்ட தலைவர் சுல்தான் அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாஸ்டர் திரு.உமர் அவர்கள் மாணவர்களுக்கு சிலம்பு பயிற்சி அளித்தார். மேலும் மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் களந்துகொண்டு சிலம்பு பயிற்சி பெற்றனர்.
Blogger Wordpress Gadgets