Facebook Twitter RSS

Thursday, March 22, 2012

Widgets

தேர்தல் பிரசார வாக்குறுதிப்படி முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.



 கூடங்குளம் அணு உலையை திறக்க தமிழக அரசு எடுத்த முடிவு ஏமாற்றம் அளிக்கிறது. விபத்து ஏற்பட்டால் இழப்பீடு எவ்வாறு கொடுப்பார்கள் என்ற தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை. அணு உலையால் விபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை என்று யாரும் கூறமுடியாது. உலகில் உள்ள அணு உலைகளில் மனித தவறுகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் நிபுணர்குழு மக்களின் கருத்தை கேட்கவில்லை. அணு உலையால் பாதிப்பு இல்லை என்ற அப்துல்கலாமின் கருத்தை வேதவாக்காக கருதமுடியாது. அணு உலையால் அந்த பகுதி மக்கள் மட்டுமல்லாமல் வருங்கால சந்ததியினரே பாதிக்கப்படுவார்கள். கல்பாக்கம் அணு மின்நிலைய பகுதி மக்கள் மெல்ல மெல்ல கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மறுபரிசீலனை செய்க.
மத்திய அரசு காங்கிரஸ் ஆளும் கேரளா போன்ற மாநிலங்களில் அணு மின்நிலையம் தொடங்காதது ஏன்? தமிழக மின்தடையை போக்க நெய்வேலி மின்நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மத்திய அரசு முழுமையாக தரவேண்டும். மக்களை பாதிக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ரெயில்வே நிர்வாகம் ராமநாதபுரம் மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணிப்பதை கண்டிக்கிறோம். மதுரை-ராமேசுவரம் இடையேயான பாசஞ்சர் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும். சென்னை-ராமேசுவரம் ரெயில்கள் இரண்டும் ராமநாதபுரத்தில் காலை 5 மணி முதல் 9 மணிக்குள் வந்து செல்லும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். இந்த ரெயில் உச்சிபுளி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்.இதை வலியுறுத்தி வரும் 24-ந்தேதி ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதன்பிறகும் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.
அமெரிக்கா கொண்டு வரும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதை வரவேற்கிறோம்.
தேர்தல் பிரசார வாக்குறுதிப்படி முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்.
காரைக்குடி-கன்னியாகுமரி இடையே ராமநாதபுரம் வழியாக புதிய ரெயில்பாதை அமைக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்ட ரெயில் திட்டங்களுக்காக இந்த தொகுதி எம்.பி. எதுவும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட செயலாளர் தஸ்பீக் அலி, மாவட்ட பொருளாளர் சித்திக், ஒன்றிய செயலாளர் அன்வர்அலி, தேவிபட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் ஜாகிர் உசேன் மற்றும் செய்தி தொடர்பாளர் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets