30 வயதான ஹனா ஷலபி 12 நாட்களாக சாப்பிடுவதற்கு மறுப்புத் தெரிவித்து வருகிறார். இஸ்ரேலிய சிறையில் தடுத்துவைக்கப்பட்டு உண்ணாவிரதம் இருக்கும் இரண்டாவது கைதி இவர் என அவரது சட்டத்தரணியும், பலஸ்தீன சிறைக் கைதிகளது அமைப்பும் தெரிவித்துள்ளமை கவனிக்கத்தக்கது.
ஹமாஸுடன் இஸ்ரேல் ஏற்படுத்திக் கொண்ட கைதிகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட பெண் ஒருவர், இஸ்ரேலினால் மீண்டும் இம்மாதம் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கெதிராக எந்தக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை. அப் பெண் உண்ணாவிரதத்தை இவருக்கு முன்னர் தொடங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
66 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் காதர் அத்னானை, ஏப்ரல் மாதம் விடுவிக்க இஸ்ரேலிய அதிகாரிகள் இணங்கியுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய சிறைகளில் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாமல் பல பலஸ்தீனர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனை அந்நாட்டிலுள்ள மனித உரிமை அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளன
No comments:
Post a Comment