Facebook Twitter RSS

Friday, March 16, 2012

Widgets

2012-13ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் – முக்கிய அம்சங்கள்


Budget 2012 - India
டெல்லி:2012-13ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். காங்கிரஸின் சரிந்து கிடந்த ஓட்டு வங்கியை சரிசெய்யும் முயற்சியாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட்
விவசாயத்துறையைச் சேர்ந்த கூட்டுறவு வங்கிகளுக்கு உதவும் நபார்ட் வங்கிக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு.
விவசாய கடன்களுக்கான வட்டி தளர்த்தப்படும்.
விவசாயிகளுக்கு கடனுதவி வழங்க ரூ. 5.75 லட்சம் கோடி ஒதுக்கீடு
நீர்ப்பாசனத்துக்கு என தனி நிறுவனம்
ஒருங்கிணைந்த நீர்ப் பாசன திட்டங்களுக்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு
விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கிஸான் கடன் அட்டைகளை, ஏடிஎம்களிலும் பயன்படுத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

வருமான வரி உச்ச வரம்பு
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 1.8 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்வு
ரூ. 2 முதல் 5 லட்சம் வரையிலான ஆண்டு ஊதியத்துக்கு 10 சதவீதம் வரியும், ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு 20 சதவீதம் வரியும் விதிக்கப்படும். ரூ. 10 லட்சத்துக்கு மேலான ஆண்டு வருமானத்துக்கு 30 சதவீதமும் வருமான வரி விதிக்கப்படும்.
எல்சிடி,எல்இடி விலைகுறைவு ஏசி,பிரிட்ஜ் விலை ஏற்றம்
எல்சிடி, எல்இடி, சைக்கிள், சினிமா டிக்கெட், கேன்சர் மற்றும் எச்ஐவி மருந்துகள் ஆகியவற்றின் மீதான சுங்கவரி குறைக்கப்படும் இதனால் இவற்றின் விலை குறையும்.
மேலும் ஏசி, பிரிட்ஜ், மொபைல் போன் கட்டணம் மற்றும் சிகரெட் ஆகியவற்றின் மீது கூடுதல் வரி விதிக்கப்படும். இதனால் இவற்றின் விலை அதிகரிக்கும்.
தங்கம், பிளாட்டினம் மீதான சுங்க வரி 2 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்வு. வைரம் மீதான வரிகள் உயர்வு இதனால் இவற்றின் விலையும் கடுமையாக உயரும்.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:
எல்ஈடி, எல்சிடி மீதான சுங்க வரி ரத்து
பங்குகளை வாங்கி விற்க 20 சதவீத வரிவிலக்கு
சேவை வரி 10 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்வு
சிகரெட் மீதான கலால் வரி உயர்வு
அனல் மின் நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகளிக்கு சுங்க வரி ரத்து
உரத் தொழிற்சாலைகளுக்கான கருவிகளுக்கு 5 சதவீத சுங்க வரி ரத்து
சமையல் எரிவாயு மீதான சுங்க வரி (customs duty) நீக்கம்
நிலக்கரி இறக்குமதி மீதான சுங்க வரி முழுமையாக நீக்கம்
உயர் ரக கார்கள் மீதான வரி 27% உயர்வு
பள்ளிக் கல்விக்கு சேவை வரியிலிருந்து விலக்கு
அடிப்படை கலால் வரி (excise duty) 12% உயர்வு
மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ. 11,000 கோடி
12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 6000 புதிய பள்ளிகள்
பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 1.95 லட்சம் கோடியாக உயர்வு
அடிப்படைக் கல்விக்கான திட்ட ஒதுக்கீடு ரூ. 25,555 கோடி
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களுக்கு வட்டி குறைப்பு
ராஜிவ் காந்தி பெயரிலான முதலீட்டுத் திட்டத்தில் ரூ. 50,000 வரை வரி விலக்கு
பங்குகள் மூலமான புதிய சேமிப்புத் திட்டம் அறிமுகம்
பின்தங்கிய மாவட்டங்களை மேம்படுத்த ரூ 12040 கோடி
குடிமைப் பொருள் வழங்கல் முழுக்க முழுக்க கணிணிமயமாக்கப்படும்
ஊரக குடிநீர், கழிவு நீர் வெளியேற்ற திட்டங்களுக்கு ரூ. 14,000 கோடி ஒதுக்கீடு
கிராமப்புற வேலை வாய்ப்புக்கு ரூ 24000 கோடி
தேசிய அடையாள அட்டைத் திட்டத்துக்கு இந்த ஆண்டு மேலும் ரூ. 14,232 கோடி ஒதுக்கீடு
அனைத்துத் துறைகளிலும் தாராள தனியார் மயம் – அன்னிய முதலீட்டுக்கு அனுமதி!
மின்துறை, வீடுகள்-சாலை கட்டுமான நிறுவனங்கள் வெளிநாட்டு கடன்கள் வாங்க அனுமதி
பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ. 15,890 கோடி நிதியுதவி
கருப்புப் பணம், ஊழலை ஒழிக்க நடவடிக்கை
ஆகியவை இந்த பட்ஜெடின் முக்கிய அம்சங்களாகும்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets