Facebook Twitter RSS

Friday, March 30, 2012

Widgets

ஈரானுடன் உறவை துண்டிக்க மாட்டோம் – ப்ரிக்ஸ் நாடுகள்அறிவிப்பு!


ஈரானுடன் உறவை துண்டிக்க மாட்டோம் - ப்ரிக்ஸ் நாடுகள்அறிவிப்பு!
புதுடெல்லி:அமெரிக்காவும், ஐரோப்பாவும் தடை ஏற்படுத்தியுள்ளன என்ற காரணத்தால் ஈரானுடன் உறவை துண்டிக்கமாட்டோம் என்று ப்ரிக்ஸ் நாடுகள் அறிவித்துள்ளன.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ப்ரிக்ஸின் உச்சி மாநாட்டிற்கு முன்னோடியாக டெல்லியில் நேற்று நடந்த ப்ரிக்ஸ் நாடுகளின் வர்த்தக அமைச்சர்களின் கூட்டத்தில் இம்முடிவு அறிவிக்கப்பட்டது.
‘ஈரானின் தடை குறித்து நாங்கள் விவாதித்தோம். ப்ரிக்ஸில் அனைத்து நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் ஆகும். ஈரானுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்தை நாங்கள் மதிக்கிறோம்’ என்று இந்தியாவின் வர்த்தகதுறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறினார். கூட்டத்திற்கு பிறகு கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் அனைத்து ப்ரிக்ஸ் நாடுகளும் ஈரானுடன் வர்த்தகத்தை தொடருவோம் என்று அறிவித்துள்ளன.

ஏதேனும் உள்நாட்டு சட்டத்தையோ, நாடுகளின் சட்டத்தையோ பின் தொடர்வது எனது நாட்டின் கடமை அல்ல என்று சீனாவின் வர்த்தக அமைச்சர் பெண்டீமிங் கூறினார்.
அதனிடையே கடனில் சிக்கித் தவிக்கும் ஐரோப்பிய நாடுகளை காப்பாற்ற கூட்டு முயற்சி தேவை என்று ப்ரிக்ஸ் நாடுகள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets