Facebook Twitter RSS

Friday, June 29, 2012

தோழர்கள் - 6 - ஹபீப் பின் ஸைத் பின் ஆஸிம் அல்-அன்ஸாரீ - حَبِيبِ بْنِ زَيْد بْن عَاصِم الأنْصَارِيّ வரலாறு - தோழர்கள்

0வெட்ட ... வெட்ட
ஹபீப் பின் ஸைத் பின் ஆஸிம் அல்-அன்ஸாரீ
حَبِيبِ بْنِ زَيْد بْن عَاصِم الأنْصَارِيّ
யத்ரிப் நகரில் ஒரு குடும்பம் வசித்து வந்தது. தந்தை, தாய், இரு மகன்கள் என்ற அளவான குடும்பம். அந்தக் குடும்பம் ஒரு குழுவுடன் மக்காவிற்கு யாத்திரை சென்றது. மொத்தம் 73 ஆண்களும், 2 பெண்களும் கொண்ட குழு அது.

மக்காவிற்குச் சென்று புனித யாத்திரை முடித்த அந்தக் குழுவினர் இரண்டாம்நாள் ஊர் உறங்கிய நள்ளிரவு நேரத்தில் அகபா பள்ளத்தாக்கில் முகம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஓர் இரகசிய சந்திப்பு நிகழ்த்தினர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு அது. அதன் முடிவில் நபியவர்களுக்கும் அந்த யத்ரிப் குழுவினருக்கும் இடையில் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. தங்களது "உயிர், பொருள், செல்வம்" அனைத்திற்கும் மேலாய் நபியை ஏற்றுக் கொள்வதாகவும், காப்பாற்றுவதாகவும் அவர்கள் அனைவரும் சத்தியப் பிரமாணம் செய்து கொடுத்தனர்.
அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த அந்தக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் அந்த சத்தியப் பிரமாணத்தில் கலந்து கொண்டனர். ஸைத் இப்னு ஆஸிம், அவரின் மனைவி உம்மு உமாரா (أُمّ عُمَارَةَ)எனும் நுஸைபா பின்த் கஅப் அல்-மாஸினிய்யா, அவர்களின் இரு மகன்கள் அப்துல்லாஹ் இப்னு ஸைத் மற்றும் ஹபீப் இப்னு ஸைத் (ரலியல்லாஹு அன்ஹும்). அப்பொழுது ஹபீப் இப்னு ஸைத் இளவயதுச் சிறுவர்.

Tuesday, June 26, 2012

பள்ளீவாசல் வரண்ம் புசபடுகிரது

இது மினரா சாரம்

வரணம் புசபடுகிரது


இது பலைய  வற்ண்ம்
அஸ்ஸாலாமு அலைக்கும்
மஞச்க்கொல்லை பள்ள்வாசலில்   வருடம் வருடம் வற்ண்ம்  புசபடும் அதைப்போல் இந்த ஆண்டும்  வற்ண்ம் புசபடுகிரது   

Monday, June 25, 2012

இந்தியாவிலேயே அதிக குற்றங்கள் நடைபெறும் மாநிலம் கேரளா-தேசிய குற்றவியல் பதிவுத்துறை அறிக்கை!


Kerala is country's most crime-prone state, NCRB statistics show
புதுடெல்லி:மக்கள் தொகைக்கு ஏற்ப இந்தியாவிலேயே அதிகமான குற்றங்கள்  ’தெய்வத்தின் சொந்த நாடாக’ பெருமைப் பேசப்படும் கேரளா மாநிலத்தில் நடைபெறுவதாக தேசிய குற்றவியல் பதிவு துறை(NCRB) அறிக்கை கூறுகிறது.
கல்வியிலும், சுகாதாரத்திலும் சிறந்து விளங்கும் மாநிலமாக கருதப்படும் கேரளாவில் தான் இந்தியாவிலேயே அதிக ஆபத்து நிறைந்த நகரமான கொச்சி அமைந்துள்ளது.
2010-ஆம் ஆண்டு தகவல்களின் அடிப்படையில் என்.சி.ஆர்.பி இவ்வறிக்கையை தயார் செய்துள்ளது. லட்சம் மக்கள் தொகைக்கு ஏற்ப குற்றச்செயல்கள் கணக்கிடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் கேரளாவில் நடைபெறும் குற்றங்களின் சராசரி தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
இந்தியாவில் வருடந்தோறும் நடக்கும் குற்றங்களின் சராசரி 187.6 சதவீதமாகும். ஆனால் கேரளாவில் 424.1 சதவீதம் ஆகும். 2009-ஆம் ஆண்டைத் தவிர கேரள மாநிலத்தின் முக்கிய நகரமான கொச்சியில் குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவில் பல்கிப் பெருகியதாக என்.சி.ஆர்.பி அறிக்கை கூறுகிறது. முந்தைய ஆண்டுகளை விட கொச்சியில் 193 சதவீத குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.
குற்றச்செயல்களில் 2-வது இடத்தை வகிக்கும் மத்தியபிரதேச மாநிலத்தில் கேரளாவை விட மிக குறைந்த அளவிலேயே குற்றங்கள் நடைபெற்றுள்ளன. மத்திய பிரதேச மாநிலத்தின் குற்றங்களின் சராசரி 297.2 சதவீதம் ஆகும். 279.8 சதவீத குற்றங்களின் சராசரியைப் பெற்று இந்தியாவின் தலைநகரமான டெல்லி 3-வது இடத்தை வகிக்கிறது.
கலவரங்கள், தீவைப்பு சம்பவங்களின் எண்ணிக்கையிலும் கேரளா முதலிடத்தைப் பெற்றுள்ளது. இவற்றில் இந்தியாவின் மொத்த சராசரி 6.4 சதவீதம் என்றால் கேரளாவின் சராசரி 26 ஆகும். பெண்களுக்கு எதிரான கொடுமைகளிலும் கேரளாவே முதலிடத்தைப் பெற்றுள்ளது. கேரளாவின் சராசரி 27 ஆகும். டெல்லிக்கு 24.6 சதவீதம் ஆகும்.
உயர்கல்வி, சிறந்த சுகாதாரம், நீண்ட ஆயுள் என பெருமைப் பேசப்படும் கேரளா மாநிலம், டெல்லி, உ.பி மாநிலங்களை கூட தோற்கடிக்கும் வகையில் குற்றச்செயல்களில் முன்னணி வகிப்பதாக என்.சி.ஆர்.பி அறிக்கை கூறுகிறது.

டாக்டர்.மு​ஹம்மது முர்ஸி எகிப்திய குடியரசின் முதல் அதிபராக தேர்வு! – மகிழ்ச்சி வெள்ளத்தில் எகிப்து!

Celebrations in Egypt as Mursi wins presidency.
கெய்ரோ:எகிப்திய குடியரசின் அதிபர் தேர்தலில் இஃவானுல் முஸ்லிமீனின் ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சியின் வேட்பாளரான டாக்டர்.முஹம்மது முர்ஸி வெற்றிப் பெற்றதாக எகிப்து தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நான்கு தினங்களாக நிலவிய சந்தேகங்களுக்கும், புதிருக்கும் இறுதியில் இன்று மதியம் 3.30 மணிக்கு(எகிப்திய நேரம்) தேர்தல் கமிஷனின் தலைமையகத்தில் எகிப்து அதிபர் தேர்தலுக்கான முடிவு அறிவிக்கப்பட்டது.
முஹம்மது முர்ஸி 13.2 மில்லியன் வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் அஹ்மத் ஷஃபீக் 12.3 மில்லியன் வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதன் மூலம் முஹம்மது முர்ஸி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 8 லட்சம் வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

Saturday, June 16, 2012

கோடைகால பயிர்ச்சி முகாம் பரிசளிப்பு விழா

அல்ஹம்துலில்லாஹ் .............
சிறப்பு பயான் செய்யும் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

பள்ளியின் தலைவர் அவர்கள் பரிசளிக்கும் போது 

சகோதரர் "விஜய்"  அவர்கள் பரிசளிக்கும் போது 
                          இந்த  வருட கோடை  கால பயிர்ச்சி முகாம் நமது தௌஹீத் பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.அதை தொடர்ந்து பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது .அது சமயம் "சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி" அவர்கள் சிறப்பு பயான் நிகழ்த்தினார்கள்.அதை பரிசளிப்பு விழா நம் பள்ளி தலைவர் "நைனா முகம்மது" தலைமையில் இனிதாய் நடைபெற்று முடிந்தது    

Thursday, June 07, 2012

கோவா குண்டுவெடிப்பு:ஹிந்துத்துவா தீவிரவாதி தமிழகத்தில் தலைமறைவு!

NIA hunts for Goa blast suspects in South
சென்னை:மர்கோவா குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவரும் குற்றவாளிகளான நான்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தலைமறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர்களை கைதுச்செய்ய தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) சிறப்புக்குழுவை உருவாக்கியுள்ளது.
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட நான்குபேர் தலைமறைவாக உள்ளனர். கோவா மாநிலம் மர்கோவா குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தென்னிந்திய மாநிலங்களில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தேசிய புலனாய்வு ஏஜன்சி தேடுதல் வேட்டையை துவக்கியுள்ளது.
கோவா குண்டுவெடிப்பு வழக்கில் தலைமறைவு குற்றவாளியான ஜெயப்பிரகாஷை(ஜெய் அன்னா என்ற ஜே.பி) தமிழகத்தின் கூடலூரிலும், கேரள மாநிலம் காஸர்கோட்டிலும் கண்டதாக புலனாய்வு ஏஜன்சிக்கு தகவல் கிடைத்தது. இவ்வழக்கில் தொடர்புடைய இதர 3 ஹிந்துத்துவா தீவிரவாதிகளான ருத்ராபாட்டீல், டி.சாரங் அங்கோல்கர், ஆர்.பிரவீண் லிங்கர் ஆகியோர் கேரளா மற்றும் கர்நாடகாவில் தலைமறைவாக இருப்பதாக இன்னொரு தகவல் என்.ஐ.ஏவுக்கு கிடைத்துள்ளது.
2009 அக்டோபர் 16-ஆம் தேதி தீபாவளிக்கு முந்தைய தினம் கோவா மாநிலம் மர்கோவாவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. குண்டுகளை வைக்க பைக்கில் கொண்டு செல்லும்போது ஒரு குண்டுவெடித்து சிதறியது. மற்றொரு குண்டை போலீஸ் செயலிழக்கச் செய்தது.
தீவிர ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தானைச் சார்ந்த 12 தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நடத்தியதாக புலனாய்வுக் குழு கண்டுபிடித்தது. இதில் 2 பேர் வெடிக்குண்டை கொண்டு செல்லும்போது குண்டுவெடித்ததில் இறந்தனர். ஆறுபேர் கைது செய்யப்பட்டனர். நான்கு பேர் தலைமறைவாக உள்ளனர்.
நான்குபேரைக் குறித்து தகவல் கிடைப்பவர்கள் தேசிய புலனாய்வு ஏஜன்சியின் ஹைதராபாத் கட்டுப்பாட்டு அறைக்கு கீழ்க் கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்:
040-277 64488/ 094937 99335/094937 99363/094937 99354 source thoothu online.com

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் கமிஷனராக வி.எஸ்.சம்பத் நியமனம்!

VS Sampath to be new Chief Election Commissioner
புதுடெல்லி:இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் கமிஷனராக வி.எஸ்.சம்பத் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 62.
தற்பொழுது தேர்தல் கமிஷனராக பணியாற்றி வரும் சம்பத், தற்போதைய தலைமை கமிஷனர் எஸ்.ஒய்.குரைஷி வருகிற 10-ஆம் தேதி ஓய்வு பெறுவதையொட்டி தலைமை தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசின் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஒப்புதல் அளித்துவிட்டதாக அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
16.01.1950-ல் பிறந்த சம்பத், ஆந்திரப் பிரதேசப் பிரிவில் 1973-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றார். அந்த மாநிலத்தில் நிதித்துறை முதன்மைச் செயலர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறார். 2009-ம் ஆண்டு ஏப்ரலில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக மத்திய அரசின் மின் துறைச் செயலராகப் பணியாற்றினார்.

உ.பி கலவரம்:பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்கள் கைது!

kosi kalan riot
கோஸிகாலான்:உ.பி மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள கோஸிகாலான் நகரில் அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரத்தின் பின்னணியில் செயல்பட்ட பா.ஜ.க, பகுஜன்சமாஜ் கட்சியின் முக்கிய தலைவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், கலவரத்தில் நேரடி தொடர்புடைய ஆளும் சமாஜ்வாதி கட்சியின் மாவட்டத் தலைவரை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை.
முன்னாள் அமைச்சரும், பகுஜன்சமாஜ் கட்சி தலைவர்களில் ஒருவருமான சவுதரி லட்சுமி நாராயணன்சிங், அவருடைய சகோதரரும், எம்.எல்.சியுமான சவுதரி லெக்ராஜ், மருமகன் நரதேவ் மற்றும் பா.ஜ.க தலைவர் ஹரி பட்டேல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களுடன் கலவரத்தில் பங்கேற்ற சமாஜ்வாதிக் கட்சியின் மாவட்ட தலைவர் கோவிந்த் சிங்கின் பெயர் எஃப்.ஐ.ஆரில்(முதல் தகவல்அறிக்கை) இடம்பெற்ற பிறகு அவரை போலீசார் கைது செய்யவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மாயாவதி அரசில் விவசாய அமைச்சராக பதவி வகித்தவர் லட்சுமி நாராயணன் சிங். கலவரத்தை தூண்டுதல், கொலை மற்றும் சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக இவர் மீது வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. கொலைச் செய்யப்பட்ட நபர்களில் ஒருவரான முஹம்மது ஸலீமின் சகோதரர் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீஸ் லட்சுமி நாராயணனை கைது செய்தது என கூடுதல் எஸ்.பி பிரமோத் குமார் திவாரி தெரிவித்துள்ளார்.
கலவரம் தொடர்பாக இதுவரை ஏழு எஃப்.ஐ.ஆர்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. 71 பெயர்கள் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளன. 1000 பேர் கலவரத்தில் பங்கேற்றதாகவும் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது.

ஃபலஸ்தீன் கைதிகளை விடுதலைச்செய்ய இஸ்ரேலுக்கு ஆம்னஸ்டி கோரிக்கை!

Amnesty calls on Israel to end 'administrative detention' of Palestinians

லண்டன்:விசாரணை இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து ஃபலஸ்தீன் பிரஜைகளை உடனடியாக விடுதலைச் செய்யவோ அல்லது நீதியான விசாரணயை உறுதிச்செய்யவோ நடவடிக்கை மேற்கொள்ள இஸ்ரேல் அரசுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி கோரிக்கை விடுத்துள்ளது.

ஃபஸீஹ் எங்கள் கஸ்டடியில் இல்லை – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு!

Fasih Mahmood
புதுடெல்லி:சவூதி அரேபியாவின் ஜுபைலில் இருந்து சவூதி-இந்திய புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பொறியாளர் ஃபஸீஹ் மஹ்மூத் இந்தியாவின் கஸ்டடியில் இல்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால், ஃபஸீஹ் இந்தியாவின் கஸ்டடியில்தான் இருக்கிறார் என்று அவரது மனைவி நிகாத் பர்வீன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Friday, June 01, 2012

எகிப்து தேர்தல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: முர்ஸி- 58 லட்சம் வாக்குகள், ஷஃபீக்- 55 லட்சம் வாக்குகள்!

Egypt Electoral commission confirms set for mursi-shafiq run-off
கெய்ரோ:புரட்சிக்கு பிந்தைய எகிப்தில் நடந்த முதல் அதிபர் தேர்தலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நாட்டு தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.
இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான எஃப்.ஜே.பியின் வேட்பாளர் டாக்டர்.முஹம்மது முர்ஸி முதலிடத்தையும், முபாரக் ஆட்சியின் இறுதிக் காலக்கட்டத்தில் பிரதமர் பதவி வகித்த அஹ்மத் ஷஃபீக் 2-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதன் மூலம் 2-வது கட்ட அதிபர் தேர்தலில் இருவரும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

துபாயில் இன்று புகைப்பிடிக்க தடை!

One-day ban on cigarette sales across Dubai
துபாய்:ஐக்கிய அரபு அமீரகத்தின் மாகாணங்களில் ஒன்றான துபாயில் இன்று புகைப்பிடிக்கவும், சிகரெட் தயாரிப்புகளை விற்பனை செய்வதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக புகையிலை ஒழிப்பு தினத்தை கொண்டாடும் விதமாக துபாய் மாநகராட்சி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
புகைப் பிடிப்பதால் ஏற்படும் அபாயத்தைக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,

‘பாரத் பந்த்’ தமிழகத்தில் தோல்வி!

'பாரத் பந்த்' தமிழகத்தில் தோல்வி!
சென்னை:பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து நேற்று நாடு முழுவதும் இடதுசாரிகள் மற்றும் பாஜக அழைப்பு விடுத்த பாரத் பந்த் தமிழகத்தில் தோல்வியடைந்தது.
பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து நேற்று பாஜக மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் நாடு தழுவிய பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. வட மாநிலங்களில் பந்துக்கு ஆதரவு இருந்த போதிலும் தமிழகத்தில் இயல்பு நிலை பாதிக்கப்படவில்லை.

மணிப்பூர் முஸ்லிம் மாணவர் சாதனை – சி.பி.எஸ்.இ – 12-ஆம் வகுப்பு தேர்வில் இந்தியாவில் முதலிடம்!

Manipur boy Mohammad Ismat tops CBSE Class 12 Exam
இம்பால்:மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ)-2012 ஆம் ஆண்டிற்கான 12-வகுப்பு தேர்வில் இந்தியாவிலேயே முதலிடத்தை மணிப்பூரைச் சார்ந்த முஸ்லிம் மாணவன் முஹம்மது இஸ்மத் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
வடகிழக்கு மாநிலத்தில் இருந்து ஒரு மாணவர் இந்திய அளவிலான சி.பி.எஸ்.இ 12-ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெறுவது இதுவே முதன் முறையாகும்.

ரோமிங் கட்டணம் ரத்து: புதிய தொலைத் தொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

       Cabinet approves roaming-free telecom policy
புதுடெல்லி இந்தியா முழுவதும் செல்போன் ரோமிங் கட்டணம் ரத்து செய்யும் வழிமுறைகளைக் கொண்ட புதிய தொலை தொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்படி, இந்தியாவின் எந்த மாநிலத்துக்கு சென்றாலும் இனி ரோமிங் கட்டணம் கிடையாது. வேறு மாநிலத்திற்கு சென்றாலும் அதே செல்போன் எண்ணை வைத்து கொள்ள அனுமதி அளிக்கப்படும்.
Blogger Wordpress Gadgets