Facebook Twitter RSS

Saturday, August 24, 2013

Widgets

சிரியாவின் இரசாயன ஆயுதப் பிரயோகம் சொல்லும் செய்திகள்


         
 சிரியாவின் இரசாயன ஆயுதப் பிரயோகம் பசர் அல் அசாத்தின் உண்மை நிலையை  மீண்டுமொருமுறை தோலுரித்துக் காட்டியுள்ளது . அத்தோடு மேற்கின் பக்குவமான முதலைக் கண்ணீரும் அதன் மீடியாக்களால் இதன் விடயத்தில் வடிக்கப் பட்ட நிலையில் இந்த சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட இராணுவ அரசியல் பற்றிய பார்வைகள் இதன் மூலம் மறைந்து போகின்றது .

          பசர் அல் அசாதின் தரப்பு குறித்த ராக்கெட்டுகளை தான் ஏவவில்லை என மறுப்பதுடன் வேண்டுமானால் அதுபற்றி ஆய்வு செய்ய சர்வதேச சமூகத்தை வேண்டியுமுள்ளது  .சம்பவம் இடம்பெற்ற பகுதி தலைநகர் டமஸ்கசின் மாகாண எல்லையான Ghouta என்ற பகுதியே


          கடந்த புதன்கிழமை அதிகாலை இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதும் இன்னும் சில சந்தேகங்களை ஏற்படுத்தி நிற்கின்றது .பொதுவாக சிரியக்களம் அதன் புரட்சிப் போராளிகளால் மரபு + கெரில்லா உத்தி கொண்ட போராட்ட முன்னெடுப்புகளை கொண்டே நகர்த்தப்பட்டுள்ளது .பொதுவாகவே ஊடுருவித் தாக்குதல் போன்ற இராணுவ உத்திகளை கெரில்லா அணிகள் இருளோடு கூடிய அதிகாலை நேரத்திலேயே மேற்கொள்வர் . இதன் போது எதிரி அணியின் பலம் வாய்ந்த பாதுகாப்பு நிலைகள் உடைக்கப் படுவதோடு எதிரி வான் வழி உதவிகளை பெற்றுக் கொள்ள முடியாது போவதே அதற்கு காரணமாகும் .

                      பின்னர் சிதறிய எதிரிகளை 'கட் அவுட் ' போட்டு பிரித்து வேட்டையாடும் நிலை வரும்போது விடிந்து விடும் எதிரியோடு மிக நெருக்கமான சுடு தூரத்துக்குள் போராளிகள் வந்து விடுவர் இப்போதும் எதிரி ஆட்லறி உதவிகளையோ , வான் வழி உதவியையோ எதிர்பார்க்க முடியாது .அந்த வகையில் போராளிகள் குறித்த பகுதி ஊடாக  டமஸ்கஸ் நகரை நெருங்கும் ஒரு பாரிய தாக்குதலை தொடுத்த வேலை சிரிய இராணுவத்தின் offensive line ,மற்றும் defensive line தாண்டிய நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் .(கிடைத்த தகவல்களின் படி டமஸ்கஸ் நகரம் சிரியப் போராளிகளால் முற்றுகையிடப் பட்டுள்ளது .)

                        பசர் அல் அசாதின் அண்மைய அறிக்கைகள் இன்னும் ஒரு விடயத்தை குறித்துக் காட்டுகின்றது .அது சர்வதேச தலையீட்டின் தேவையை இப்போது அவர் சிரியாவில் எதிர் பார்க்கிறார் என்பதே ஆகும். . கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை இது சிரியாவின் உள்நாட்டுப் பிரச்சினையாகவும் இதில் வேறு தலையீடுகள் தேவையில்லை என்று காட்டமாக கூறிய அவர் இப்போது சர்வதேச  தலையீட்டை வேண்டி வருகிறார். எனவே   இந்த சில்லரைக் கடவுளின்  அல்லது முதலாளிக் கடவுள்களின் வேலையாக கூட இரசாயன ஆயுதப் பிரயோகம் இருக்கலாம். 

                                ஜனநாயக சிரியா மீதான புதிய package , U.N மற்றும் NATO இராணுவ சப்பாத்துக்கள் சிறிய மண்ணில் கால் பதிக்க அவசியம் வந்ததை காட்டும் நியாய அடையாளமாக கூட இந்த சம்பவம் இருக்கலாம். இஸ்ரேலின் தூக்குக் கயிற்றையும் , முதலாளித்துவத்தின் தோல்வி அரசியலையும் ,  உருவாக விட்டு பார்த்துக் கொண்டிருக்கவா முடியும்!? அழிந்து போவதை விட ஆழித்தாவது சற்று வாழ்வோம். எனும் நப்பாசை தான் இன்றைய சிரியா மற்றும் எகிப்து சொல்லும் செய்திகள் ஆகும்

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets