Facebook Twitter RSS

Monday, March 12, 2012

Widgets

யூத தேசியவாதத்தின் பெயரால் ரத்த ஆறு ஓட்டப்பட்டுள்ளது – யூத ரப்பி



YisroelDovidWeiss
தோஹா சியோனிசம் என்று அறியப்படும் யூத தேசியவாதத்தால் வரலாறு நெடுகிலும் ரத்த ஆறு ஒட்டப்பட்டுள்ளதாக யூத மத ரப்பியான (அறிஞர்) எஸ்ரோயில் டேவிட் விஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை யூத மத போதனைகளுக்கும் சியோனிச சித்தாந்தத்துக்கும் உள்ள வேறுபாடு என்ற தலைப்பில் அல்ஜசீரா தொலைகாட்சிக்கு பேட்டியளித்த போது இக்கருத்தை விஸ் தெரிவித்தார்.
கடந்த வாரம் அமெரிக்காவிற்கு பயணம் செய்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு  யூத மத வேதமான தோராவின் (பைபிளின் பழைய ஏற்பாடு) அதிகாரம் எஸ்தர் புத்தகத்தை ஒபாமாவிற்கு பரிசாக வழங்கினார். 2500 ஆண்டுகளுக்கு முன்பு பாரசீகர்கள் யூதர்களுடன் கொடூரமாக நடந்துக்கொண்டதை குறித்து அதில் கூறப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி இஸ்ரேலுக்கு சுய பாதுகாப்பிற்கான உரிமை இருப்பதாக விளக்கமளித்திருந்தார் நெதன்யாஹூ. ஆனால், வரலாற்றை தலைக்கீழாக நெதன்யாகு வாசிக்கிறார் என்று விஸ் கூறுகிறார். இந்த புத்தகத்தின் பெரும்பாலான பாகங்கள் கட்டுக்கதைகள் என்று அறிஞர்கள் தெளிவுப்படுத்தியுள்ளனர் என்று விஸ் கூறுகிறார்.
நெதன்யாஹு வரலாற்றை தவறாக விளக்குகிறார் என்றும் பாரசீக நாடான ஈரானை தாக்கும் தங்களது போர் முயற்சிக்கு அமெரிக்காவின் ஆதரவை பைபிள் வழியாக வலியுறுத்தவே நெதன்யாஹு இவ்வாறு கூறியுள்ளார் என்றார். பைபிளை திரிக்கும் நெதன்யாஹுவின் இச்செயல் இறைவனின் விருப்பத்திற்கு எதிரானதாகும் என்றார்.
‘சியோனிசதுக்கு எதிரான யூதர்கள்’ என்ற இயக்கத்தின் நிர்வாகியான யூத ரப்பி விஸ் யூதர்களுக்கான தனி நாடு என்ற பெயரில் இஸ்ரேல் ஃபலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ளதை கடுமையாக சாடினார்.
ஈரான் மற்றும் அஹமது நஜாத் குறித்து கூறும் போது; ஈரானில் வாழும் யூதர்களுக்கு அனைத்து உரிமைகளும் உதவிகளும் வழங்கும் அஹமது நஜாத் மூலம் யூதர்களுக்கு அபாயம் என்பதை மறுத்தார்.
ஈரான் அதிபர் அஹ்மதி நஜாத், யூத நாட்டை துடைத்தெறிவோம் என்று கூறியதை குறித்து கேள்வி எழுப்பிய வேளையில் விஸ் இவ்வாறு பதில் அளித்தார்; ஃபலஸ்தீன் மக்களை அடக்கி ஒடுக்கும் இஸ்ரேலின் நடவடிக்கையை நஜாத் எதிர்க்கிறார். இஸ்ரேல் நிகழ்த்தும் அட்டூழியங்கள் அதிக காலம் நீடிக்காது என்பதைத்தான் நஜாத் இவ்வாறு கூறினார். ஏதேனும் சமூகத்தினருக்கு அழிவை ஏற்படுத்த விரும்புவர் அல்ல நஜாத். சியோனிஷம் காரணமாக யூதர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறும் என்ற நஜாதின் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.
இன்னும் சொல்லப் போனால் சியோனிசத்தால் தான் யூதர்களுக்கு அபாயம். ஏனெனில் இவர்கள் சியோனிசத்தின் பெயரால் ரத்த ஆற்றை ஓட்டுகின்றனர். இது கடவுளுக்கு எதிரான போர் என்றும் இப்படி செய்வோர்களை கடவுள் பெரும் நாசத்தை கொண்டு அழிப்பார் என்று கூறும் யூத மத வேதமான தோராவை மேற்கோள்காட்டி விளக்கினார்.
******************* ******

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets