Facebook Twitter RSS

Saturday, March 03, 2012

Widgets

ஹேமந்த் கர்கரே குறித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்.

மாலேகான் குண்டு வெடிப்பில் சங் பரிவாரத்தை சேர்ந்தவர்களை சிக்க வைக்க வேண்டும் என்று தனக்கு கூடுதல் அழுத்தம் தரப்படுவதாக ஹேமந்த் கார்கரே தன்னிடம் தெரிவித்ததாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் வழக்கமாக சிறுபான்மையினர் கைது செய்யப்படும் நிலைக்கு மாற்றமாக முதல் முறையாக ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங் பரிவாரங்களை கைது செய்தவர் ஹேமந்த் கர்கரே ஆவார். இந்த ஹேமந்த் கர்கரே 2006 மற்றும் 2008ல் நடந்த மலேகான், 2007 ல் நடந்த சம்ஜ்ஹதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு மற்றும் 2007 ல் நடந்த மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு விசாரணையில் ஆர்.எஸ்.எஸின் ஒத்துழைப்பை கோரி தன்னிடம் வந்ததாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருந்தார்.
அச்சந்திப்பின் போது ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங் பரிவாரங்களை சேர்ந்தவர்களை இவ்வழக்கில் குற்றவாளிகளாக்கி சிக்க வைக்க தனக்கு அழுத்தம் தரப்படுவதாக ஹேமந்த கர்கரே கூறியதாக மோகன் பகவத் கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே சுவாமி அசிமானந்தா கைது செய்யப்பட்டதாக கருதும் மோகன் உபி தேர்தலில் சிறுபான்மையினர் ஓட்டுகளை கைப்பற்ற காங்கிரஸ் செய்யும் தந்திரம் என்று கூறியதாக தெரிகிறது.
உச்சநீதிமன்றத்தில் மோகன் பகவத்தின் கருத்தை தேசிய புலனாய்வு அமைப்பின் வழக்கறிஞர் சுட்டி காட்டிய போது நீதிமன்றத்தில் இவ்வழக்கு இருக்கும் போது அதிலும் குறிப்பாக இவ்வழக்கின் குற்றவாளிகளின் ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வர உள்ள நிலையில் ஆர்.எஸ்.எஸ் தலைவரின் கருத்துக்கள் தேவையற்றவை என்றும் அதிகப்பிரசங்கிதனம் என்றும் உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets