Facebook Twitter RSS

Wednesday, October 31, 2012

ஈரானுக்கு எதிரான தடையை ஆதரிக்கமாட்டோம்: சுவிட்சர்லாந்து!


switzerland and iran
மாஸ்கோ:ஈரானுக்கு எதிராக ஒருதலைபட்சமாக அறிவிக்கும் தடைகளை ஆதரிக்கமாட்டோம் என்று சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் கட்டமைப்பிற்கு வெளியே இருந்துகொண்டு ஏதேனும் நாடு அல்லது கூட்டணி அறிவிக்கும் தடைகளை ஆதரிக்க கூடாது என்பதே தங்களின் முடிவு என்று சுவிட்சர்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிடியர் பூல்கார்டர் மாஸ்கோவில் தெரிவித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் அந்நாட்டின் மீதான தடையை வலுப்படுத்த சில தினங்களுக்கு முன்பு தீர்மானித்தன. ஈரானுக்கு எதிரான தடையை அங்கீகரிக்க இயலாது என்று சுவிஸ் நாட்டின் அதிபர் எவிலைன் விட்மெர் ஏற்கனவே அறிவித்துவிட்டார். ஈரானுடனான வர்த்தக உறவு தொடரும் என்றும் அவர் அறிவித்துள்ளார். சர்வதேச அளவில் முக்கிய எண்ணெய் வர்த்தக மையமாக திகழும் சுவிட்சர்லாந்தில் நேசனல் ஈரான் ஆயில் நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது.

கனமழை எதிரொலி : தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

    நீலம் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிக மழையை எதிர்நோக்கி இருக்கும் 20 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை,  திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர்,  நாகை, திருவாரூர், தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல், கரூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. சேலம் மற்றும் திண்டுக்கல்லில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவங்கையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. கிருஷ்ணகிரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்று திறனாளி : பார்வையற்ற போராளி.!


நபித்தோழர்கள் வரலாறு : அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம்.
உலகின் முதல் இஸ்லாமிய அரசு (யத்ரிப்) மதீனாவில் நிறுவப்பட்டது. தூய்மையான, நன்மை மிகுந்த, அமைதியான சமூகம் நிலைபெற்றது...! பள்ளிவாசல், மார்க்கெட் என எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக நிறுவிய அண்ணலார் (ஸல்) அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூமுக்குத் தனிச் சிறப்பு வாய்ந்த பொறுப்பை வழங்கினார். என்னதெரியுமா? நாள்தோறும் ஐவேளையும் இறைவனின் புகழ்பாடி,

Sunday, October 28, 2012

Surat Al-Fātiĥah (The Opener)-سورة الفاتحة


1:1 لا يوجد In the name of Allah , the Entirely Merciful, the Especially Merciful. அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். 1:2 { الحمد لله } جملة خبرية قصد بها الثناء على الله بمضمونها من أنه تعالى : مالك لجميع الحمد من الخلق أو مستحق لأن يحمدوه، والله علم على المعبود بحق { ربِّ العالمين } أي مالك جميع الخلق من الإنس والجن والملائكة والدواب وغيرهم، وكل منها يُطلق عليه عالم، يقال عالم الإنس وعالم الجن إلى غير ذلك، وغلب في جمعه بالياء والنون أولي العلم على غيرهم، وهو من العلامة لأنه علامة على موجده. [All] praise is [due] to Allah , Lord of the worlds - (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். 1:3 { الرحمن الرحيم } أي ذي الرحمة وهي إرادة الخير لأهله. The Entirely Merciful, the Especially Merciful, (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்). 1:4 أي الجزاء وهو يوم القيامة ، وخص بالذكر لأنه لا ملك ظاهرًا فيه لأحد إلا الله تعالى بدليل {لمن الملك اليوم؟ لله} ومن قرأ مالك فمعناه الأمر كله في يوم القيامة أو هو موصوف بذلك دائمًا {كغافر الذنب} فصح وقوعه صفة لمعرفة. Sovereign of the Day of Recompense. (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். 1:5 { إيَّاك نعبد وإياك نستعين } أي نخصك بالعبادة من توحيد وغيره ونطلب المعونة على العبادة وغيرها. It is You we worship and You we ask for help. நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக! 1:6 { اهدنا الصراط المستقيم } أي أرشدنا إليه، ويبدَل منه: Guide us to the straight path - (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. 1:7 { صراط الَّذين أنعمت عليهم } بالهداية ويبدل من الذين بصلته {غير المغضوب عليهم} وهم اليهود { ولا } وغير { الضالِّين } وهم النصارى ونكتة البدل إفادة أن المهتدين ليسوا يهوداً ولا نصارى . والله أعلم بالصواب، وإليه المرجع والمآب، وصلى الله على سيدنا محمد وعلى اَله وصحبه وسلم تسليما كثيراً دائما أبداً، وحسبنا الله ونعم الوكيل، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. The path of those upon whom You have bestowed favor, not of those who have evoked [Your] anger or of those who are astray.

(அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.

Wednesday, October 10, 2012

குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க நினைத்து இஸ்லாத்தை ஏற்ற( டாக்டர் ஜாரி மில்லர் )



கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்தவ பிரசார பீரங்கி டாக்டர் ஜாரி மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார். இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்கநினைத்தார். அவரது எண்ணமெல்லாம் குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்; முஸ்லிம்களைக் கிறித்தவ ம
தத்திற்கு அழைக்க இத்தவறுகள் தனக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்துவிடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக
இருந்தது

ஆனால், என்ன ஆச்சரியம்! உலகத்தில் வேறு எந்த நூலிலும் காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களை குர்ஆனில் கண்ட மில்லர், திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். நபி(ஸல்) அவர்களின்துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச் செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது.

Monday, October 01, 2012

பாஸ்போர்ட் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!


Hike In Indian Passport Fee
டெல்லி: நிர்வாகம், முதலீட்டு செலவு, கருவிகள் வாங்குதல், போலீசாருக்கு வழங்கப்படும் ஈட்டுத் தொகை, தபால் துறைக்கான கட்டணம், அச்சக செலவு, தகவல் தொழில்நுட்ப செலவு போன்றவை பெருமளவு அதிகரித்ததால், பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.  இதன்படி அப்புதிய விண்ணப் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
புதிய கட்டண விபரம்
பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தட்கல் முறையில் விண்ணப்பம் செய்வதற்கான கட்டணம் 2500 ரூபாயில் இருந்து 3500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக, வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி, கடைசியாக பாஸ்போர்ட் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கான பாஸ்போர்ட் கட்டணம் 40 அமெரிக்க டாலர்களில் இருந்து 75 அமெரிக்க டாலர்களாகவும், 48 யுரோவில் இருந்து 60 யுரோக்களாகவும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. source thoothu online

ஆஃப்கான்:10 ஆண்டுகளில் 2000 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி!


US military deaths in Afghanistan hit 2000
காபூல்:ஆஃப்கானிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தினருக்கும், தாலிபான் போராளிகளுக்கும் இடையேயான போரில் இதுவரை 2 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் பாலியாகியுள்ளதாக அமெரிக்க அதிகாரி கூறுகிறார்.
அண்மையில் ஆஃப்கான் பாதுகாப்பு படை வீரரால் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தாக்குதல் ஒன்றில் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரும், சிவிலியன் காண்ட்ராக்டர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
2012ஆம் ஆண்டில் மட்டுமே ஆஃப்கானிய பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஐம்பதுக்கும் அதிகமான அந்நிய ஆக்கிரமிப்பு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆஃப்கான் பாதுகாப்பு படையினரிடமிருந்து ஆபத்துக்கள் அதிகரிப்பதை தொடர்ந்து நேட்டோ படை அவர்களுடன் ரோந்து பணியில் ஈடுபடுவதை பயந்துபோய் நிறுத்தியுள்ளது.

கூகுளுக்கு மாற்றீடாக புதிய தேடுதல் பொறியை உருவாக்கும் ஈரான்!


Iran seeks alternatives to Google, Gmail
டெஹ்ரான்:இணையதள தேடுதல் பொறியான கூகுள் மற்றும் அதன் மின்னஞ்சல் சேவையான ஜி-மெயிலுக்கு மாற்றீடாக புதிய இணையதளத்தை உருவாக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளது.
ஃபக்ர் என்ற பெயரில் தேடுதல் பொறியையும், ஃபஜ்ர் என்ற பெயரில் மின்னஞ்சல் சேவையையும் துவக்கும் முயற்சியில் ஈரான் உள்ளது. இஸ்லாத்திற்கு எதிரான திரைபடத்தின் ட்ரைலரை யூ ட்யூபில் இருந்து நீக்கம் செய்ய கூகுள் மறுத்ததை தொடர்ந்து ஜி-மெயிலை ஈரான் முடக்கியது. ஈரானில் 50 சதவீதம் பேர் இணையதளத்தை உபயோகிக்கின்றனர்.
இந்நிலையில் ஜிமெயிலை முடக்கியது பயனீட்டாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை கவனத்தில் கொண்டு புதிய தேடுதல் பொறி மற்றும் மின்னஞ்சல் சேவையை உருவாக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளது.
Blogger Wordpress Gadgets