உலகின் மிகப்பெரிய தகவல் ஒளிபரப்பு கோபுரம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கட்டப்பட்டுள்ளது. 'ஸ்கை ட்ரீ' என அழைக்கப்படும் இந்த கோபுரம் 2,080 அடி. அதாவது 634 மீட்டர் உயரம் கொண்டது. கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 14-ந்தேதி இதன் கட்டுமான பணிகள் தொடங்கின. இந்த கோபுரத்தின் அனைத்து கட்டுமான பணிகளும் முழுமையாக நிறைவடைந்தன.
ஒபாயஷகி கார்பரேசன் என்ற நிறுவனம் இக்கோபுரத்தை கட்டி முடித்துள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் இந்த கோபுரத்தை வடிவமைத்த டோபு டவர் ஸ்கை ட்ரீ நிறுவன தலைவர் மிட்சாசுசுகி உள்பட 70-க்கும் மேற்பட்ட கட்டுமான துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.
உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த கோபுரம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற மே மாதம் 22-ந்தேதி பொது மக்கள் பார்வைக்கு இக்கோபுரம் திறந்து விடப்படுகிறது.
No comments:
Post a Comment