கெய்ரோ:புரட்சிக்கு பிந்தைய எகிப்தில் புதிய அரசியல் சாசனத்தை தயாரிக்கும் குழுவில் இருந்து தீவிர மதசார்பற்ற கட்சியான லிபரல்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.
அரசியல் சாசனத்தை உருவாக்க முன்மொழியப்பட்டுள்ள நூறு உறுப்பினர்களை கொண்ட குழுவில் பெரும்பாலானோர் இஸ்லாமியவாதிகள் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி லிபரல்கள் பின்வாங்கியுள்ளனர்.
நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் அரசியல் சாசன குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை என்று வாபஸ் பெற்ற லிபரலான மஹ்மூத் அப்துல் ரஹீம் கூறினார். காப்டிக் கிறிஸ்தவ பிரிவைச் சார்ந்த பெண்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் குழுவில் கிடைக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
ஹுஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்கு பிறகு எகிப்தை ஜனநாயக பாதையில் கொண்டுவருவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக புதிய அரசியல் சாசனச் சட்டம் தயாராகிறது.
No comments:
Post a Comment