மாஸ்கோ:ரஷ்ய அதிபர் தேர்தலில் விலாடிமீர் புடினின் கட்சியான யுனைடெட் ரஷ்ய பார்டி மிகப்பெரிய அளவில் முறைகேடுகளை தேர்தலில் மேற்கொண்டதாக குற்றம் சாட்டி மாஸ்கோவில் எதிர்கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். புடினின் தேர்தலை ரத்துச்செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று எதிர்கட்சிகளின் தலைவர் அலக்ஸி நவல்னி அறிவித்துள்ளார்.
திங்கள்கிழமை மாஸ்கோவில் புஷ்கின் சதுக்கத்தில் 20 ஆயிரம் பேர் பேரணியில் கலந்துகொண்டனர். அதே வேளையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட எதிர்கட்சி போராட்டக்காரர்களை போலீஸ் விடுதலைச் செய்தது.
சென்ட் பீட்டர்ஸ்பர்கில் இருந்து கைது செய்யப்பட்ட 300 நபர்களில் பெரும்பாலோரை போலீஸ் விடுதலைச் செய்துள்ளது.
No comments:
Post a Comment