Facebook Twitter RSS

Wednesday, March 14, 2012

Widgets

கஸ்மிக்கு ஆதரவாக இந்தியா கேட்டில் போராட்டம்


The crowd at India gate
புதுடெல்லி:இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதான பிரபல பத்திரிகையாளர் ஸய்யித் முஹம்மது அஹ்மது கஸ்மிக்கு நீதி கோரி டெல்லி இந்தியா கேட்டில் மெழுகு திரி ஏந்திய போராட்டம் நடைபெற்றது.
கஸ்மியின் குடும்பத்தினருடைய அழைப்பை ஏற்று நண்பர்களும், சமூக ஆர்வலர்களும் அடங்கிய நூற்றுக்கணக்கானோர் இந்தியா கேட்டில் ஒன்று திரண்டு தங்களது ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தினர். மாலை ஏழு மணிக்கு துவங்கிய போராட்டம் ஒன்றரை மணிநேரம் நீடித்தது.
இப்போராட்டத்தில பத்திரிகைத் துறையைச் சார்ந்த ஸயீத் நக்வி, அஸீஸ் பர்னி, ஜாவேத் நக்வி, எஸ்.கே.பாண்டே, சந்தீப் தீட்சித், டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் கான், பேராசிரியர் பி.கோயா(தேஜஸ் பத்திரிகை), இக்பால் அஹ்மத், ஹர்ஷ்தோபால் ஆகியோரும், ஷப்னம் ஹாஷ்மி, ஹிமான்சு குமார், நவைத் ஹாமித், ஹர்ஷ் கபூர், முஹம்மது அதீப்(எம்.பி) மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.
******************* ************************ ************************

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets