புதுடெல்லி:இஸ்ரேல் பயங்கரவாதத்திற்கு எதிராகவும், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் இஸ்ரேலின் தலையீட்டிற்கு எதிராகவும் தேசிய அளவில் பிரச்சாரம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைமை தீர்மானித்துள்ளது. இஸ்ரேலுடன் அனைத்துவிதமான தொடர்புகளையும் துண்டிக்க கோரி பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தவும் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர்கள் கூட்டம் முடிவு எடுத்துள்ளது.
சர்வதேச பயங்கரவாதத்தின் உறைவிடமான இஸ்ரேலிய ஏஜன்சிகளை துணைக்கு அழைத்துக்கொண்டு இந்தியாவில் தீவிரவாதத்தை துடைத்தெறிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடத்தும் முயற்சிகள் கேலிக்குரியது. தீவிரவாத நாடான இஸ்ரேலும், ரவுடி நாடான அமெரிக்காவும் ஈரான், ஃபலஸ்தீனுக்கு எதிரான தங்களது அழிவு செயல் திட்டங்களுக்காக இறையாண்மை மிக்க இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
ஃபலஸ்தீன் மக்களுக்காக அழுவதும், தீவிரவாத இஸ்ரேலை தழுவிக்கொள்வதுமான நயவஞ்சக வேடம் இந்தியாவின் பாரம்பரியத்திற்கு எதிரானதாகும். என்ன விலையை கொடுத்தாவது இஸ்ரேலை மகிழ்விக்க மத்திய அரசு நடத்தும் முயற்சி இந்தியாவுடன் நல்லிணக்கத்துடன் நடந்துகொள்ளும் மேற்காசியா நாடுகளின் அதிருப்தியை பெற்றுத்தருவதாகும்.
ஈரானுடனான வர்த்தக உறவுகளையும், ஃபலஸ்தீனுடனான ஜனநாயகம் மற்றும் மனிதநேய ரீதியிலான ஆதரவையும் இந்தியாவிடம் நிறுத்தக்கோரும் அமெரிக்க-இஸ்ரேல் கோரிக்கையை நிராகரிக்கவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர்களின் கூட்டம் வலியுறுத்தியது.
இக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் அறிக்கையை தாக்கல் செய்தார். தேசிய செயற்குழு உறுப்பினர்களான பேராசிரியர் பி.கோயா, ஹாமித் முஹம்மது, யா முஹ்யத்தீன், முஹம்மது ரோஷன், வழக்கறிஞர் கே.பி.முஹம்மது ஷெரீஃப், உஸ்மான் பேக், ஒ.எம்.எ.ஸலாம், மாநில தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment