Latest News
Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts
Tuesday, October 08, 2013
டாலரை காக்கும் செளதி அரேபியா!!!
அமெரிக்க மிரட்டலை நிராகரித்து ஈரானிடம் இருந்து இன்னும் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு ரூ. 57,000 கோடி மிச்சமாகும் என்று நேற்று கூறியிருந்தேன்.ஆனால், அதைச் செய்வது சாத்தியமா?கச்சா எண்ணெய் வர்த்தகம் என்பது உலகளவில் டாலரில் மட்டுமே நடக்கும் ஒரு வியாபாரம். கச்சா எண்ணெய்யை வளைகுடா நாடுகளே மிக அதிக அளவில் உற்பத்தி செய்தாலும் கூட அதன் விலையை நிர்ணயிப்பது லண்டன் பங்குச் சந்தை தான். இங்கு தான் சர்வதேச அளவிலான காரணிகளை வைத்து கச்சா எண்ணெய்க்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலகில் பல்வேறு நாடுகள் தங்களுக்கு இடையிலான ஏற்றுமதி, இறக்குமதிக்கு டாலரையே பொது கரன்சியாக பயன்படுத்தி வருகின்றன.
Tuesday, February 19, 2013
அப்சல் குருவின் தூக்கு - மக்களாட்சிக்கு ஓர் உன்னதமான நாள்

[ வெகு அரிதாகத்தான் இந்த நாடோ அல்லது நாட்டின் பெரிய கட்சிகளான காங்கிரசு, பாசக, மார்க்சியப் பொதுவுடமைக் கட்சி(CPM) ஆகியவ ஒருமைப்பாடுடன் இருக்கின்றன. அப்படி ஓர் அரிதான இத்தருணத்தில்தான், தண்டனையின் கால நீட்டிப்பு, நேரம் தொடர்பான சிறு பூசல்கள் இருந்தாலும், இக்கட்சிகள் சட்டம் ஒழுங்கின் வெற்றி(!!!)யைக் கொண்டாட ஒன்று கூடியிருக்கின்றன.
இந்நாட்களில் தேசத்தின் மனசாட்சி தொலைக்காட்சிகளின் படப்பிடிப்புக் கூடங்களிலிருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. வழக்கம்போல் இத்தொலைக்காட்சிகள் இராச விசுவாசத்தையும் சிறிதளவு உண்மையும் கலந்து நம் மீது கொட்டித் தீர்த்தன.
அப்சல் குரு இறந்து விட்டார். ஆனால் கூட்டமாக வேட்டையாடும் கோழைகளைப் போல, தங்கள் தைரியத்தை அதிகப்படுத்திக் கொள்ள ஒவ்வொருவருக்கும் மற்றவர் தேவைப்பட்டனர் எனத் தோன்றியது.இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்த மிகப்பெரிய தவறின் காரணமாக ஏற்பட்ட ஒரு உள்ளார்ந்த குற்ற உணர்ச்சி இதற்குக் காரணமாக இருக்கலாம்.]
அப்சல் குருவின் தூக்கு - மக்களாட்சிக்கு ஓர் உன்னதமான நாள்
9/2/2013 அன்று மக்களாட்சிக்கு ஓர் உன்னதமான நாள் இல்லையா? (கட்டுரையின் ஆங்கில மூலம் 10/2/2013 அன்று எழுதப்பட்டது). தில்லியில் இளவேனிற்காலம் தொடங்கிவிட்டது. கதிரவன் உதித்தவுடன் சட்டமும் தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது. 2011 நாடாளுமன்றத் தாக்குதலில் முக்கிய குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட்ட அப்சல் குரு காலைச் சிற்றுண்டிக்கு சற்று முன்பாக, கமுக்கமாகத் தூக்கிலிடப்பட்டார். அவரது உடல் திகார் சிறையிலேயே புதைக்கப்பட்டது. ஒருவேளை மக்பூல் பட் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே அப்சல் குரு புதைக்கப்பட்டிருப்பாரோ? (மக்பூல் பட் காசுமீரைச் சேர்ந்தவர். 1984இல் திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டவர். 11/2/2013 அன்று காசுமீர் மக்கள் அவரது நினைவு தினத்தை அனுசரிக்க இருக்கிறார்கள்).
அப்சல் குருவைத் தூக்கிலிடப் போவது அவரது மனைவிக்கோ மகனுக்கோ தெரியப்படுத்தப்படவில்லை. "அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட செய்தியை அப்சல் குருவின் குடும்பத்திற்கு பதிவஞ்சல்(Registered post) மூலமாகவும் விரைவு அஞ்சல்(speed post) மூலமாகவும் அதிகாரிகள் அனுப்பி இருக்கிறார்கள். அஞ்சல் சென்று சேர்ந்ததா இல்லையா என்று உறுதி செய்யுமாறு சம்மு காசுமீர் காவல்துறைத் தலைவருக்கு(DGP) உத்தரவிடப்பட்டுள்ளது" என்று உள்துறைச் செயலாளர் (Home Secretary) ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அதைப் பற்றி யாருக்குக் கவலை? கேவலம் அவர்கள் ஒரு தீவிரவாதியின் குடும்பத்தினர் தானே.
வெகு அரிதாகத்தான் இந்த நாடோ அல்லது நாட்டின் பெரிய கட்சிகளான காங்கிரசு, பாசக, மார்க்சியப் பொதுவுடமைக் கட்சி(CPM) ஆகியவ ஒருமைப்பாடுடன் இருக்கின்றன. அப்படி ஓர் அரிதான இத்தருணத்தில்தான், தண்டனையின் கால நீட்டிப்பு, நேரம் தொடர்பான சிறு பூசல்கள் இருந்தாலும், இக்கட்சிகள் சட்டம் ஒழுங்கின் வெற்றியைக் கொண்டாட ஒன்று கூடியிருக்கின்றன.
இந்நாட்களில் தேசத்தின் மனசாட்சி தொலைக்காட்சிகளின் படப்பிடிப்புக் கூடங்களிலிருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. வழக்கம்போல் இத்தொலைக்காட்சிகள் இராச விசுவாசத்தையும் சிறிதளவு உண்மையும் கலந்து நம் மீது கொட்டித் தீர்த்தன.
அப்சல் குரு இறந்து விட்டார். ஆனால் கூட்டமாக வேட்டையாடும் கோழைகளைப் போல, தங்கள் தைரியத்தை அதிகப்படுத்திக் கொள்ள ஒவ்வொருவருக்கும் மற்றவர் தேவைப்பட்டனர் எனத் தோன்றியது. இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்த மிகப்பெரிய தவறின் காரணமாக ஏற்பட்ட ஒரு உள்ளார்ந்த குற்ற உணர்ச்சி இதற்குக் காரணமாக இருக்கலாம்.
உண்மை என்ன?
2001 திசம்பர் 13 அன்று ஆயுதம் தாங்கிய ஐவர் ஒரு வெள்ளை நிற அம்பாசடர் மகிழுந்தில் வாயில் வழியாக பாரளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்தனர். அவர்களிடம் உயர்தர வெடிகருவிகள் இருந்தன. அவர்கள் பாதுகாப்புப்படை வீரர்களால் எதிர்கொள்ளப்பட்ட போது, துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்தனர். அவர்கள் எட்டு பாதுகாப்புப் படை வீரர்களையும் ஒரு தோட்டக்காரரையும் கொன்றனர். அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஐவரும் கொல்லப்பட்டனர். காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபோது அப்சல் குரு பல வாக்குமூலங்கள் அளித்திருந்தார். அதில் ஒன்றில் தாக்குதல் நடத்திய ஐவரின் பெயர்களாக முகம்மது, இராணா, இராஜா, ஹம்சா, ஹெய்டர் எனும் பெயர்களைக் குறிப்பிட்டிருந்தார். இன்றுவரை அந்த ஐவரைப் பற்றி நமக்குத் தெரிந்த ஒரே தகவல் இதுதான்!
உள்துறை அமைச்சாராக இருந்த அத்வானி அவர்கள் ஐவரும் பாகிசுதானியர்களைப் போல் தோற்றமளித்ததாகக் கூறினார். ஒரு சிந்தியான அவருக்கு பாகிசுதானியர்கள் எப்படி இருப்பார்கள் என்று தெரிந்திருக்கக்கூடும் இல்லையா? அப்சலின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்திய அரசு தனது தூதரை பாகிசுதானிலிருந்து திரும்ப அழைத்தது. ஐந்து இலட்சம் வீரர்களை பாகிசுதான் எல்லைக்கு அனுப்பியது இந்தியா. அணுஆயுதப் போர் மூளக் கூடும் என்றெல்லாம் பேச்சுகள் வந்தன. வெளிநாட்டுத் தூதரகங்கள் தங்கள் அலுவலர்களுக்குப் பயண அறிவுரைகளையெல்லாம் கூறி தில்லியிலிருந்து வெளியேற்றின. ஆறு மாதங்கள் வரை நீடித்த இந்நிலையால் இந்தியாவிற்கு பல்லாயிரம் கோடிகள் செலவாயின. ஆனால் இவ்வளவிற்கும் அடிப்படையான அப்சலின் வாக்குமூலத்தை விசாரணையின் தவறுகளையும், விதிமுறை மீறல்களையும் காரணம் காட்டி, பின்னர் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
திசம்பர் 14 அன்று தில்லி சிறப்பு காவல் குழு இவ்வழக்கில் துப்பு துலங்கியதாக அறிவித்தது. திசம்பர் 15 அன்று, இத்தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்பட்ட பேராசிரியர் எசு.ஏ.ஆர் கிலானி தில்லியிலும், சௌகத் குருவும், அப்சல் குருவும் சிறீநகரிலுள்ள பழச்சந்தையிலும் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து சௌகத்தின் மனைவியான அப்சன் குருவையும் கைது செய்தனர். ஊடகங்கள் வெகு ஆர்வமாக சிறப்புக் காவல் குழுவின் கூற்றுகளை வெளியிட்டன. "தில்லி பல்கலைக்கழக விரிவுரையாளர் தீவிரவாதத் திட்டங்களின் மையம்", "பல்கலைக்கழக தாதா ஃபிதாயீனை வழிநடத்தினார்", "தாத ஓய்வு நேரங்களில் தீவிரவாதம் பற்றி வகுப்பெடுத்தார்", என்பவை அப்போது வெளிவந்த தலைப்புச் செய்திகளில் சிலவாகும். ஜீ(Zee TV) காட்சி உண்மை நிகழ்ச்சிகளை சோடித்து எடுத்த "திசம்பர் 13" என்ற குறும்படத்தை ஒளிபரப்பியது.
இந்நிகழ்ச்சி காவல்துறையின் குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. (காவல் துறையின் கூற்று உண்மையாக இருந்தால் நீதிமன்றங்கள் எதற்காக இருக்கின்றன?).தலைமை அமைச்சர் வாஜ்பாயும், எல்.கே.அத்வானியும் இப்படத்தைப் பாராட்டினர். ஊடங்கள் நீதிபதிகளின் தீர்ப்பின் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறி உச்சநீதிமன்றம் இப்படத்திற்குத் தடை விதிக்க மறுத்து விட்டது. விரைவு நீதிமன்றத்தில் அப்சல், சௌகத், கிலானி ஆகிய மூவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டதற்கு சில நாட்கள் முன்புதான் இப்படம் ஒளிபரப்பப்பட்டது. தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டதாகச் சொல்லப்பட்ட பேராசிரியர் எசு.ஏ.ஆர்.கிலானி, அப்சன் குரு ஆகியோரை உயர் நீதிமன்றம் பின்னர் விடுதலை செய்தது. உச்ச நீதிமன்றம் இந்த விடுதலையை உறுதி செய்தது. ஆனால் ஆகஸ்டு 5, 2005 அன்று அளித்த தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் முகம்மது அப்சலுக்கு மூன்று ஆயுள் தண்டனைகளையும் இரட்டை மரண தண்டனையும் விதித்தது.
"அப்சல் குரு திசம்பர் 13,2001 அன்று நாடாளுமன்றத்தை அதிர வைத்த தீவிரவாதிகளில் ஒருவனில்லை. பாதுகாப்புப் படை வீரர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஆறு பேரில் மூவரைக் கொலை செய்த ஒருவனுமில்லை". இது பாசக மாநிலங்களவை உறுப்பினர் சந்தன் மிசுரா, அக்டோபர் 7,2006ல் வெளிவந்த "தி பயோனியர்" இதழுக்கு அளித்த பேட்டியாகும். இக்கூற்று பல மூத்த இதழியல் நிருபர்கள் கூறிய பொய்களுக்கு முற்றிலும் முரணாக உள்ளது. உண்மை அந்நிருபர்களுக்கும் நன்றாகத் தெரிந்திருக்கும். காவல் துறையின் குற்றப்பத்திரிக்கை கூட அத்தகைய நேரடி குற்றச்சாட்டை அப்சல் குரு மீது வைக்கவில்லை. உச்ச நீதிமன்றமும் "சாட்சியங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையிலானவை. குற்றச்சதியில் ஈடுபட்டதற்கான நேரடி சாட்சியங்கள் எவையும் இல்லை." என்று கூறிவிட்டு, மேலும் "ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கிய, பல உயிர்களை பலி கொண்ட இந்த சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டால் மட்டுமே சமூகத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்த இயலும்" என்று கூறியது.
பாராளுமன்றத் தாக்குதல் குறித்த நமது கூட்டு மனசாட்சியை வடிவமைத்தவை எவை? நாம் செய்தித்தாள்களின் மூலம் அறிந்துகொண்ட தகவல்களா? தொலைக்காட்சியில் நாம் பார்த்த குறும்படங்களா?
நீதிமன்றம் எசு.ஏ.ஆர் கிலானியை விடுதலை செய்தது; ஆனால் அப்சலுக்குத் தண்டனை விதித்தது. இதிலிருந்தே இவ்வழக்கு நடுநிலையாக நடைபெற்றிருக்கிறது என்று வாதிடக் கூடியவர்களும் இருக்கக்கூடும் இல்லையா? அதையும் பார்க்கலாம்.
இவ்வழக்கின் விசாரணை மே 2002இல் விரைவு நீதிமன்றத்தில் தொடங்கியது. அப்போது உலகம் 9/11 தாக்குதல் ஏற்படுத்திய அதிர்வுகளிலிருந்து வெளிவரவில்லை. அமெரிக்க அரசோ ஆப்கானிசுதானில் பெற்ற வெற்றியில் சிறுபிள்ளைத்தனமாக அகமகிழ்ந்து கொண்டிருந்தது. குசராத்தில் அரசு கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலை தொடர்ந்து கொண்டிருந்தது. பாராளுமன்றத் தாக்குதல் வழக்கிலோ சட்டம் தன் வேலையை காட்டிக் கொண்டிருந்தது. இந்தக் குற்ற வழக்கின் மிக முக்கியமான கட்டத்தில், ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட போதும், சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்ட போதும் அடிப்படை வாதங்கள் வைக்கப்பட்டபோதும், சட்ட விதிகளின் அடிப்படையில் வாதிடலாம். ஆனால் புதிய ஆதாரங்களைச் சேர்க்க முடியாது எனும் நிலையே இருந்தது.
மிகப் பாதுகாப்பான சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்சல் குருவிற்கு வாதாட வழக்கறிஞர் கூட இல்லை. நீதிமன்றம் அமர்த்திய இளநிலை வழக்குரைஞரோ அப்சல் குருவை ஒரு முறை கூட சிறையில் சென்று சந்திக்கவில்லை. அப்சலுக்கு ஆதவாக ஒரு சாட்சியத்தைக் கூட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. எதிர்த்தரப்பின் சாட்சிகளைக் குறுக்கு விசாரணை கூட செய்யவில்லை. நீதிபதி இந்த விவகாரத்தில் தான் எதுவும் செய்ய முடியவில்லை என்று தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தினார்.
இந்த வழக்கிலுள்ள ஏராளமான குளறுபடிகளில் சிலவற்றைக் கீழே காணலாம்:
காவல்துறை கிலானியிடம் பெற்ற தகவல்களின் அடிப்படையிலேயெ அப்சலைப் பற்றிக் கண்டுபிடிக்க முடிந்ததாகக் கூறியது. ஆனால் நீதிமன்ற ஆவணங்கள் அப்சலைக் கைது செய்யும் உத்தரவு கிலானியைப் பிடிக்கும் முன்பே வழங்கப்பட்டிருப்பதாகக் கூறுகின்றன. நீதிமன்றம் இதை ஆவண முரண் என்று கூறியது. ஆனால் ஏதும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டது.
அப்சல் கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்பேசியும் மடிக்கணிணியும் மிக முக்கிய ஆவணங்களாகும். கைது ஆணை பிறப்பித்த பிசுமில்லா, கிலானியின் சகோதரராவார். பிடியாணை பிறப்பித்தவர்கள் சம்மு காசுமீரைச் சேர்ந்த காவல்துறையினர் இருவராவர். இருவரில் ஒருவர், அப்சல் போராளியாக இருந்து சரணடைந்த போது அவரைத் துன்புறுத்தியவராவார். கைப்பற்றப்பட்ட கணிணியும் செல்பேசியும் முத்திரை(சீல்) வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை.
மடிக்கணிணியின் வன்வட்டை(hard disc) கைதுக்குப் பிறகு யாரோ பயன்படுத்தி இருப்பது வழக்கு விசாரணையின் போது தெரிய வந்தது. அந்த வன்வட்டில் உள்துறையின் போலியான அனுமதிச் சீட்டுகளும், தீவிரவாதிகள் நாடாளுமன்றத்தினுள் நுழையப் பயன்படுத்திய போலி அடையாள அட்டைகளுமே இருந்தன. மேலும் ஜீ தொலைக்காட்சியின் பாராளுமன்ற காணொளியும் இருந்தது. காவல் துறையின் கூற்றுப்படி "அப்சல் பல தகவல்களை அழித்துவிட்டான். ஆனால் குற்றத்தை மெய்ப்பிக்கும் சில முக்கிய தகவல்களை அழிக்காமல் மடிக்கணியை காசி பாபாவிடம் ஒப்படைக்க அப்சல் விரைந்து கொண்டிருந்தான்". காவல் துறை குற்றப்பத்திரிக்கையின் படி இந்த காசி பாபாதான் தாக்குதலின் தலைவர்.கமல் கிசோர் என்ற சாட்சி அப்சலை அடையாளம் கண்டு கொண்டதுடன், தீவிரவாதிகள் திசம்பர் 4 2001 அன்று ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளப் பயன்படுத்திய சிம் கார்டை அப்சலுக்கு விற்றதாகவும் கூறினார். ஆனால் வழக்கு விசாரணையின் போது செல்பேசி அழைப்புப் பதிவுகள் சிம் கார்டுகள் நவம்பர் 6, 2001லிருந்தே பயன்பாட்டிலிருந்ததைத் தெரிவிக்கின்றன.
இப்படியாக சோடிக்கப்பட்ட ஆவணங்களும் பொய்களும் முடிவில்லாமல் போய்க்கொண்டே இருக்கின்றன. நீதிமன்றம் இவை அனைத்தையும் கவனித்தது. ஆனால் காவல்துறையை இலேசாகக் கடிந்து கொண்டதுடன் விட்டுவிட்டது.
வழக்கமாக கசுமீரில் சரணடையும் போரளிகளைப் போலவே அப்சலும் இரையாகிப் போனார். அவர் சித்திரவதை செய்யப்பட்டார், மிரட்டப்பட்டார், கடுமையாகத் துன்புறுத்தப்பட்டார். நடந்த சதித் திட்டங்களின் முன் அவர் ஒன்றுமே இல்லை. பாராளுமன்றத் தாக்குதலில் உண்மையை வெளிக்கொணர விரும்பும் எவருக்கும் ஏராளமான ஆதாரங்கள் இருந்தன. ஆனால் யாருமே உண்மையைக் கண்டறிய விரும்பவில்லை. சதியின் மூல காரணகர்த்தாக்கள் கண்டறியப்படவும் இல்லை, விசாரிக்கப்படவும் இல்லை.
ஆனால் அப்சல் தூக்கிலிடப்பட்டுவிட்டார். இப்போது நமது கூட்டு மனசாட்சி திருப்தி அடைந்திருக்கும் என்று நம்புகிறேன். இல்லை நமது கோப்பையில் பாதி இரத்தம்தான் நிரம்பியிருக்கிறதா?
தமிழாக்கம் – வி.நரேந்திரன்
ஆங்கில மூலம்:
http://www.thehindu.com/opinion/lead/a-perfect-day-for-democracy/article4397705.ece
Saturday, January 26, 2013
கமலையும் , ரஜினியையும் புரிந்து கொண்டோம் !!
கமல்ஹாசனைப் புரிந்து கொண்டு, அவருடைய நஷ்டத்தையும் புரிந்து கொண்டு இஸ்லாமியர்கள் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு ஒத்துழைக்க வேண்டும். தமிழ் சினிமாவை சர்வதேச அளவுக்கு உயர்த்திய ஒரு மாபெரும் கலைஞனை கஷ்டப்படுத்திவிடக் கூடாது. இஸ்லாமியர்கள் மீது நல்ல மரியாதை கொண்டவர் கமல் அவருக்கு நஷ்டம் ஏற்படாத வகையிலும், திரைப்படத்தை முழுமையாக தடை செய்யாமல் சில காட்சிகளை நீக்கி கதைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளியிட உதவுமாறு இஸ்லாமியர்களிடம் வேண்டுகின்றேன். என ரஜினிகாந்த் கருத்து வெளியிட்டுள்ளார்.
மீடியாக்களில் பரபரப்பாக பேசப்படும் செய்தியாக இதுதான் இப்போது சூடு பிடித்துள்ளது.
முஸ்லிம்கள் விஷயத்தில் சரியான பார்வை கொண்டவரைப் போலவும், கமல்ஹாசன் தவறு செய்யாததைப் போலவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் ரஜினிகாந்த். இவருடைய உண்மைத் தன்மையைப் பற்றி தெளிவுபடுத்துவதற்காகவே இந்த ஆக்கம் வெளியிடப்படுகின்றது.
விஸ்வரூபம் என்றொரு திரைப்படத்தை பற்றி தற்போது எழுந்துள்ள சர்ச்சைக்கு தீர்வாகவே இந்தக் கருத்தை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
கமல் தொடர்பான ரஜினியின் பார்வையின் குருட்டுத் தனம் :
கமல்ஹாசனின் விஸ்வரூபம் தொடர்பாக ரஜினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஐந்து கோரிக்கைகளை இஸ்லாமியர்களிடம் முன் வைத்துள்ளார்.
# கமல்ஹாசனை புரிந்து கொள்ள வேண்டும்.
# விஸ்வரூபத்தின் மூலம் கமலுக்கு ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க உதவ வேண்டும்.
# தமிழ் சினிமாவை சர்வதேச தரத்திற்கு உயர்த்திய கலைஞனை கஷ்டப்படுத்தக் கூடாது.
# இஸ்லாமியர்கள் மீது நல்ல எண்ணம் கொண்டவர் கமல்.
# கதைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் படத்தின் சில காட்சிகளை நீக்கி படத்தை வெளியிட உதவ வேண்டும்.
ரஜினிகாந்த் மட்டுமல்ல அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால் சினிமாத் துரையின் அடாவடித் தனத்தையும், அயோக்கியத் தனத்தையும் பொது மக்கள் இப்போதுதான் சரியாகப் புரிந்திருக்கிறார்கள். அதனால் தான் கமலுடைய திரைப்படத்திற்கு இவ்வளவு எதிர்ப்பு கிளம்பியிருக்கின்றது.
சினிமாவின் பேரால் ஐரோப்பாவின் சில்லரைக்கு ஜால்ரா போடும் கமல் போன்றவர்கள் ரஜினியின் பார்வையில் வேண்டுமானால் கலைஞனாக, கலையுலக ஜாம்பவானாக இருக்கலாம். உண்மையை நேசிக்கும், ஒழுக்கத்தை விரும்பும் சுய கவுரவத்தை ஆசை வைக்கும் எந்த மனிதனுக்கும் கமல் என்ன ரஜினி கூட ஒரு சாக்கடை சக்கை தான். தமிழ் சினிமா வரலாற்றில் எப்போதெல்லாம் ஒரு தீவிரவாதியின் கதாபாத்திரம் சினிமாவுக்குத் தேவைப்படுகின்றதோ அப்போதெல்லாம் அந்தக் கதாபாத்திரம் ஒரு அப்துல்லாஹ்வாக அல்லது அப்து ரஹ்மானாக தாடி வைத்து குள்ளா போட்ட, முழு நீள அங்கி அணிந்த ஒருவனாகத் தான் காட்சி அமைப்பு உருவாக்கப்படும். காரணம் முஸ்லிம்கள் தான் உலகின் தீவிரவாதிகள் என்பது இவர்களின் குருட்டு கண்களின் இருட்டுப் பார்வை.
ஒரு சமுதாயத்தின் இருப்பையே சந்தேகப்படுத்தும் அளவுக்கு எடுக்கப்பட்டிருக்கும் விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்வதற்கு போராடும் ஒரு சமுதாயத்திடம் திரைப்படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டுகோள் விடுப்பது என்பது வடிகட்டிய முட்டாள் தனமாகும்.
அறிவுக்கு கொஞ்சம் கூட தொடர்பில்லாமல் கமலின் மீது கொண்ட நட்பினால் ரஜினி போன்றவர்கள் இப்படியான கோரிக்கையை வைப்பதின் மூலமாக எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவதை ஒரு போதும் அங்கீகரிக்க முடியாது. முழு இஸ்லாமிய சமுதாயத்தின் மீதும் இல்லாத அபாண்டத்தைச் சுமத்தியவரை கண்டித்து திரைப்படத்தை திரையிடுவதை நிறுத்தும் படி ஆலோசனை சொல்ல வேண்டியவர் தங்கள் வருமானத்திற்காக இது போன்ற கருத்துக்களை கூறி கமல்ஹாசன் திரைப்படத்தில் மூலம் இஸ்லாமியர்களின் மனதைப் புன்படுத்தியதைப் போல் தனது கருத்தின் மூலம் இஸ்லாமியர்களைப் புன்படுத்துகின்றார் ரஜினிகாந்த்.
இஸ்லாமிய சமுதாயத்தின் மீது நல்ல எண்ணம் கொண்ட ஒருவராக கமலைப் பாராட்டுகின்றார் ரஜினி உண்மையில் முஸ்லிம்கள் மீது நல்ல எண்ணம் கொண்ட ஒருவர் செய்யும் காரியத்தை அல்ல கமல் விஸ்வரூம் மூலம் செய்திருக்கின்றார்.
இஸ்லாமியர்களின் புனித குர்ஆனை தீவிரவாதத்தைத் தூண்டும் புத்தகமாக சித்தரித்துள்ளார்.
இஸ்லாமிய சிறுவர்கள் கல்விக்கு ஆர்வம் காட்டுவதை விட அதிகமான ஆர்வத்தை ஆயுதப் பயிற்சிக்குக் காட்டுவதாக சித்தரித்துள்ளார்.
முஸ்லிம்கள் தங்கள் மணைவியரை அண்ணியவர்களுக்கு கூட்டிக் கொடுப்பதைப் போல் சித்தரித்துள்ளார்.
திருமறைக் குர்ஆனின் வசனங்களை தனக்குச் சாதகமாக வலைத்து குர்ஆனின் கருத்துக்களை தவறான புரிதலுக்கு உள்ளாக்கியுள்ளார்.
இது போல் திரைப்படம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிரான தனது காழ்ப்புணர்வை கட்டுக்கடங்காமல் கக்கியுள்ள கமல்ஹாசன் தான் இஸ்லாமியர்கள் மீது நல்ல எண்ணம் கொண்டவரா?
கதைக்கு பாதிப்பில்லாத வகையில் சில காட்சிகளை நீக்கி படத்தை வெளியிட உதவ வேண்டும் என்ற ரஜினியின் கோரிக்கையில் தெளிவான பாசிசம் அடங்கியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. திரைப்படத்தின் காட்சியமைப்பில் நீக்கம் செய்து வெளியிடும் அளவுக்கு உள்ள திரைப்படமல்ல விஸ்வரூபம். முழுத் திரைப்படத்தையும் புரக்கணிக்கும் வகையில் அமைந்த ஒரு சியோனிச கொள்கைப் பரப்பும் திரைப்படமாகவே இது அமைந்துள்ளது.
முழு இஸ்லாமிய சமூகத்தையும் இம்சிக்கும் இத்திரைப்படம் முழுமையாக தடை செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் இதன் தொடரில் பல இயக்குணர்கள் தங்கள் வக்கிர புத்தியை விஸ்வரூபமாக்குவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
ஆரம்ப காலத்தில் ஊதுபத்தி கொழுத்துபவர்களாகவும் தர்காக்களில் மந்திரிப்பவர்களாகவும், பேய் ஓட்டுபவர்களாகவும் காட்டப்பட்ட முஸ்லிம்கள் இன்று தெளிவாக தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். முஸ்லிம்களின் நல்ல பண்புகள் எதுவும் இதுவரைக்கும் சினிமாக்களில் காட்டப்பட்டதில்லை. இதற்கு எதிராக யாராவது பேசினால் கருத்து சுதந்திரத்தை எதிர்க்கிறார்கள் என்ற பெயரில் அதே முஸ்லிம்கள் மீது பழி போடப்படுவது வேடிக்கையாக இருக்கிறது.
உன்னைப் போல் ஒருவன் என்ற திரைப்படத்தின் மூலம் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்றும் திரைப்படத்தின் ஹீரோவான கமல் தீவிரவாதத்தில் ஈடுபடும் முஸ்லிம்களை அழிப்பவராகவும் அதில் நடித்திருப்பான். இப்படி முஸ்லிம்கள் தான் இந்தியாவையும் இந்த உலகத்தையும் அழிக்க நினைப்பவர்கள் என்ற சிந்தனையை மக்கள் மத்தியில் பரப்புவதுடன் கடவுள் மறுப்புக் கொள்கை என்றொன்றை தனக்குள் சொல்லிக் கொண்டு காவிப் பயங்கரவாதத்திற்கு தினமும் இவன் துணை போவதை யாரும் மறுக்க முடியாது.
தான் பெற்ற மகளையே அடுத்தவனுடன் அரை குறை ஆடையுடன் ஆட வைத்து ரசித்துப் பார்த்துவிட்டு ‘என்னைப் போன்றே எனது மகளும் சிறப்பாக நடிக்கின்றாள் என்று பெருமைப் பட்டுக் கொண்டவன் தான் இந்த மானங்கெட்ட கமல். இவனுக்கெல்லாம் ஒழுக்கத்தைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் அது ‘எறுமை மாட்டின் மேல் மழை பெய்வதற்கு சமனானதாகும்’.
ரஜினி என்ற பாசிச பசை :
இன்றைக்கு உபதேசம் (?) செய்யும் ரஜினிகாந்த் தனது நிலையை மறந்து பேசினாலும் முஸ்லிம்கள் அவரை மறக்க மாட்டார்கள். காரணம் கமலின் தோழனாக இருப்பதைப் போல் கமலைப் போன்ற இஸ்லாமிய துவேஷ வெரி இவரிடமும் நிறைந்தே காணப்படுகின்றது.
பால்தாக்கரே என்ற இஸ்லாமிய வெறியன் மும்பையை ஆட்டிக் கொண்டிருந்தான். அவன் இருக்கும் வரைக்கும் அவனுடைய தீவிர ஆதரவாளராகவும், தற்போதும் அவனுடைய கட்சி சார்ந்த நடவடிக்கைகளில் ஒத்துழைப்பவராகவும் இருப்பவர் தான் இந்த ரஜினிகாந்த்.
கமலின் விஸ்வரூபம் விஷயத்தில் வியத்தகு (?) தத்துவம் பேசும் இவர் நடித்து வெளியிட்ட திரைப்படங்கள் மாத்திரம் தத்துவப் பொக்கிஷங்களா? தான் நடித்து வெளியாகிய பல திரைப்படங்களில் இவனும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக கருப்புப் பணம் கடத்துபவர்களாக, ஒழுக்கம் கெட்டவர்களாக காட்சிப்படுத்தியவன் தான் இந்த ரஜினிகாந்த்.
இவனுடைய சிந்தனைக்கும் கமலுடைய சிந்தனைக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது. கமல் முழுப்படமாக தயாரித்ததை இவன் முழுப்படத்தின் சில காட்சிகளாக சித்தரித்திருக்கின்றான். சிவாஜி என்ற பெயரில் இவன் நடித்து வெளியாகிய திரைப்படத்தில் இந்தியாவின் கருப்புப் பணங்களை வெளிநாடுகளுக்கு கடத்தி அதனை டாலராக மாற்றி மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டுவருபவர்களாக முஸ்லிம்களை சித்தரித்திருப்பான்.
முஸ்லிம் தான் இந்தக் காரியங்களில் ஈடுபடுகின்றானா? இந்துக்களில், கிருத்தவர்கள், சீக்கியர்கள் யாரும் இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதில்லையா? அவர்களின் பெயரால் இவர்கள் திரைப்படம் தயாரித்தார்களா?
கோயில் இடம் பெரும் காட்சியாக இருந்தால் மணி ஓசையும், தண்ணீர் தடாகமும், அமைதியான (?) பிராமன பூசாரியையும் காட்சிப்படுத்துவார்கள்.
கிருத்தவ தேவாலயமாக இருந்தால் அமைதியாக சூழலும், வெள்ளை ஆடையில் அமைதியான தோற்றத்தில் ஒரு பெரியவரும், பைபிலின் காட்சியம் சித்தரிக்கப்படும்.
இதுவே பள்ளிவாயலாக இருந்தால் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளுக்கு அடைக்களம் கொடுக்கும் இடமாகவும், திருமறைக் குர்ஆனை ஓதிக் கொண்டே பொது மக்களை கொலை செய்யும் மனிதர்களும் தான் காட்டப்படுவார்கள். ஏன் இந்த இஸ்லாமிய எதிர்ப்பு வெறி? ஏன் இந்த துவேஷப் பார்வை?
அமைதியான ஒரு மார்க்கத்தையும் அதைப் பின்பற்றுபவர்களையும் காட்சி ஊடகத்தின் மூலமாக தீயவர்களாக, தீவிரவாதிகளாக சித்தரிப்பதில் என்ன நன்மையை இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
ரஜினியாக இருந்தாலும், கமலாக இருந்தாலும் இஸ்லாமியர்களைப் பொருத்த வரையில் இருவருமே ஒரு குட்டையில் ஊரிய மட்டைகள் தாம்.
பேசித் தீர்வு கண்டு திரைப்படத்தை வெளியிட உதவுமாறு கோரிக்கை வைக்கும் அயோக்கியன் ரஜினிகாந்திடம் சில கேள்விகள்.
# பல கோடி செலவு செய்து படம் எடுத்துள்ளார் அதனால் படத்தை திரையிட உதவுங்கள் என்று வேண்டு கோள் விடுத்துள்ளீரே உனது இரண்டு பெண் பிள்ளைகளையும் வைத்து 100 கோடி செலவில் கமல்ஹாசன் ஆபாசப்படம் தயாரித்தால் பேசித் தீர்த்து திரைப்படத்தை வெளியிட உதவி செய்வீரோ?
# உனது இரண்டு பெண் பிள்ளைகளின் நிலையை கவணித்தாலே இவனின் உண்மை நிலை தெளிவாகப் புரிந்துவிடுமே?
# தான் கட்டிய கணவனையே கமல்ஹாசனின் மகளுடன் கட்டிப்பிடித்து படுக்கையறைக் காட்சியில் நடிக்க வைத்தவள் தானே உனது மகள் ஐஸ்வர்யா? உன் குணம் தானே உனது பிள்ளைக்கும்.
# நீ ஒரு மொடாக் குடிகாரன் என்பது எங்களுக்குத் தெரியும். ‘குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு’ என்பார்கள் இப்படி உன்னுடைய இந்தப் பேச்சை நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம். காரணம் எங்கள் சமுதாயத்தின் மானத்தில் விளையாடுகின்றாய்.
# நீ பெற்ற மகள் ஐஸ்வர்யாவையும், உனது மருமகன் தனுஷையும் பார்வையாளராக வைத்துக் கொண்டு எந்திரன் திரைப்பட விழாவில் கூத்தாடி ஐஸ்வர்யாவைப் பார்த்து ‘ஐஸ்வர்யா மேக்கப் இல்லாமலே சூப்பர் பிகரு’ என்று சொன்ன வெட்கம் கெட்ட தகப்பன் தானடா நீ?
# பெரிய செலவில் எடுத்த படம் காப்பாற்ற உதவுங்கள் என்று பாதிக்கப்பட்ட எங்களிடம் வெட்கம் கெட்டு கேட்பதை விட அடுத்தவன் மனைவியை கட்டிப் பிடித்து ஆடி நீ சம்பாதித்த பணத்தில் இருந்து கமலுக்கு உதவி செய் பார்க்களாம்?
அன்பின் நல்ல உள்ளங்களே !
நம்மைப் பொருத்த வரையில் சினிமா கூத்தாடிகள் அத்தனை பேரும் ஒரு குட்டையில் ஊரிய மட்டைகள் தாம் அது ரஜினியாக இருந்தாலும் சரி கமலாக இருந்தாலும் சரி இவனைப் போன்ற கூத்தாடிகளின் செயல்பாடுகளை ரசித்து ருசித்து பார்ப்பதின் ஊடாக இவனைப் போன்ற கூத்தாடிகளின் வளர்ச்சிக்கு நாம் துணை போவதென்பது தெளிவாக நம்மை பாவத்தின் பக்கம் இட்டுச் செல்வதாகும். ஆதனால் இது போன்ற கூத்தாடிகளின் செயல்பாடுகளுக்கு துணை போகாமல் வல்ல அல்லாஹ் நம்மனைவரையும் காப்பாற்றுவானாக! 1
நன்றி : ரஷ்மின்
Thursday, January 24, 2013
எமது நெருப்பில் குளிர் காயும் எதிரி .'விஸ்வரூபம் '
இதுவரை நடந்தவை யாவும் (ஜனநாயக கருத்துச் சுதந்திர ,செயல் சுதந்திர எல்லைக்குள் ) நன்றாகவே நடந்தது . இப்போது நடப்பவைகளும் (ஜனநாயக கருத்துச் சுதந்திர ,செயல் சுதந்திர எல்லைக்குள் ) நன்றாகவே நடக்கின்றது . நேற்று 'துப்பாக்கியை ' தூக்கிப் பிடித்து இந்த உம்மத்தின் நியாயமான உணர்வுகளை விளம்பரமாக்கி இலாப கரமாக ஓட்டிய 'ரீல் ' இன்று 'விஸ்வரூபமாக ' தன்னை 'மெகா ஹிட் ' ரீலாக்க 'போஸ்டர்' ஓட்டத் தொடங்கியுள்ளது .
இஸ்லாத்தின் மீதான இறை நிராகரிப்பாளர்களின் காழ்ப்புணர்வுகள் இஸ்லாத்தின் வரலாற்றோடு தொடர்ந்தும் வந்துள்ளது . அந்த வகையில் முஹம்மத் (ஸல் ) அவர்களின் சந்ததியாகிய எம்மையும் அது தொடர்கின்றது . இந்த நிகழ்வுகளில் முஸ்லீம் உம்மாவின் எதிர் நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு மீள் பரிசீலனை அவசியமானது . உண்மை என்னவென்றால் இந்த 'தாகூதிய ' சோழியர்கள் தமது துர்நாற்றமான குடுமியை ஆட்டுவதற்கு எமது கைகளையே எம்மை அறியாமல் பயன் படுத்துகின்றார்களா ? என்ற சந்தேகம் இப்போது ஏற்பட்டுள்ளது .
இது தொடர்பில் வரலாற்றின் முன்னைய நிகழ்வுகளை நாம் எவ்வாறு எதிர் கொண்டோம் என்பதை வஹியின் வெளிச்சத்தில் சுன்னாவில் இருந்து வரையறுப்பது இந்த இடத்தில் மிக முக்கியமான பணி . ஆனால் இங்கு உணர்வுகளுக்கு அதி கூடிய முக்கியத்துவம் கொடுக்கும் போது
எதிரியின் கருத்துச் சுதந்திர 'சினைப்பர்' குறிக்கு நாமே நெற்றியை காட்டுவது போல் ஆகி விடாதா ?
எதிரியின் கருத்துச் சுதந்திர 'சினைப்பர்' குறிக்கு நாமே நெற்றியை காட்டுவது போல் ஆகி விடாதா ?
'சாம் பாசில்' 'யூ டியூபில்' விட்ட அசிங்கமான குப்பை முஸ்லீம்களின் உள்ளங்களில் பயங்கரமான பூகம்பத்தை உண்டு பண்ண, ஒவ்வொரு முஸ்லிமும் கண்களில் கண்ணீரோடும் எதிர்க்கும் உணர்வோடும் வீதிக்கு இறங்கினார்கள் . அந்த மறக்க, மன்னிக்க முடியாத வலி மீது பிரான்சின் 'சார்லி ஹெப்டோ ' கார்டூன் தாக்குதல் நடத்தியது ! பின் 'பெல்ஜியம் , பின் பிரான்ஸ் என இந்த மீடியா தாக்குதல் தொடரும் வரிசையில் இந்தியாவும் 'துப்பாக்கியோடு ' தனது மீடியா 'பிஸ்டல் ' குழுவை களமிறக்கியது . உண்மையில் இந்தியாவின் சோசியல் மீடியா இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் அவமானப் படுத்துவது இதுதான் முதற் தடவையல்ல . அந்த வரிசையில் இப்போது விடயம் 'விஸ்வரூபம் 'எடுத்துள்ளது .
காஸ்மீரையும் , பாகிஸ்தானையும் காட்டி தேசப்பற்று ரீல் விடும் இவர்களது வழமையான பணியை நாம் மறந்து விடக்கூடாது . 'இரத்தம் சொட்டும் கத்தி ' ,கீறிக் கிழிக்கப் பட்ட உடல்,இப்படிக்காட்டி சமூகப் பார்வையை திருப்புவதை விட முஸ்லிமின் உணர்வு என்ற 'செப்டரில்' , நிறைய இலாபம் இருப்பது முதலாளித்துவம் அனுபவித்த உண்மை . அது தொடர்கிறது .
எண்ணத்திலும் வழிமுரையிலும் சிலுவை சுமந்து உடையில் காவி உடுத்திய இந்த சண்டாளர்கள் கருத்துச் சுதந்திரம் எனும் போலித் தனத்தில் அரசியல் இராஜ தந்திர வலிமை அற்றிருக்கும் முஸ்லீம் உம்மத்தை சீண்டிப்பார்க்க நினைக்கிறார்கள் ! நாம் சாத் வீகமாக சென்றால் ஆர்ப்பாட்டம் , ஊர்வலம் ,மகஜர் ,மனு என சட்டத்தில் உள்ளிருந்தே 'போலிஸ்' பாதுகாப்போடு எமது எதிர்ப்பை ஜனநாயக முறையில் சொல்ல முடியுமாம் (எமது கருத்துச் சுதந்திரம் ) ! வன்முறையை செய்தால் அதே 'போலிஸ் ' 'என்கவுண்டர் ' பண்ணுமாம் ! சபாஸ் சரியான போட்டி என முதலாளித்துவ மேட்டுக்குடி பார்த்து ரசிக்குமாம் . இது அதிகாரம் கையில் இருக்கின்றது ; என்ற ஆணவம் தவிர வேறில்லை . அமெரிக்கா முதல் இந்தியா வரை இதுதான் நிலை .
சரி கருத்துச் சுதந்திரத்தின் எல்லை எது என ? அவர்களிடம் கேட்டால் அதிலும் அவர்களது அப்பட்டமான செயல்களைச் ஆதாரத்தோடு சொல்லி அடிமடியில் யாராவது கைவைத்தால் ,பாவம் அவன் தனது கருத்துச் சுதந்திரத்தை சிறைச் சுவர்களுக்கு முன்னால் தான் சொல்ல முடியும் .
மேற்குக்கு ஒரு தாரிக் பின் சியாதும் , சிந்துவுக்கு ஒரு முஹம்மது பின் காசிமும் மீண்டும் வரவேண்டிய நியாயத்தை இந்த முஸ்லீம் உம்மா உணர்ந்து உழைக்காத வரை எமது போராட்டங்கள் எதிரியின் கட்டுப்பாட்டில் அவனது நியாயங்கள் சகிதம் தான் தொடரப் போகின்றது .
எமது நெருப்பில் எதிரி குளிர் காய்வான்
அவ்வளவுதான்
எமது நெருப்பில் எதிரி குளிர் காய்வான்
அவ்வளவுதான்
உவைசி குடும்பத்தை குறிவைக்கும் கா(வி)ல்துறை : தம்பியை தொடர்ந்து அண்ணனுக்கும் சிறை !
2
ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் போல இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு வேறு உண்டா? - கி.வீரமணி !!
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா அமைப்புகள் இந்து பயங்கரவாதத்தினை முன்னிறுத்தி நடத்துவதாகவும், அதற்காக பயிற்சிகள் அளிப்பதாகவும் உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே கூறியிருப்பதை எதிர்த்து பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் வானத்திற்கும் பூமிக்குமாக குதித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அதற்கு அவர் மன்னிப்புக் கோர வேண்டும், இல்லையேல் 24-ந் தேதி கிளர்ச்சி, கண்டன ஆர்ப்பாட்டம் செய்வோம் என்றும் ஆர்ப்பரித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் போல இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு வேறு உண்டா? ஷிண்டே உள்துறை மந்திரி. ஆதாரங்கள் இல்லாமலா அவர் பேசுவார்?
ஷிண்டே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர் உள்துறை மந்திரியாக இருப்பது என்பது உயர் சாதிவர்க்கத்திற்கு உறுத்தலாகத் தானே இருக்கும். அதற்காகத்தான் இந்தப் பதவி விலகல் கூச்சல் போலும். சுசில்குமார் ஷிண்டே காவி தீவிரவாதம் குறித்து கூறியதில் தவறு என்ன? ஷிண்டேவின் கருத்துகண்டு இப்படிக் கூறுவது எதைக் காட்டுகிறது? நடுநிலையாளர்கள் ஆழ்ந்து சிந்திக்கட்டும்
நீதிபதி சச்சாரின் உயிரை குறிவைத்த இந்துத்துவ பயங்கரவாதம் -
சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வைத்ததாக கைது செய்யப்பட்டுள்ள இந்துத்துவ தீவிரவாதி ராஜேந்திர செளத்ரி அளித்துள்ள வாக்குமூலத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ராஜேந்திர சச்சார் உயிருக்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் குறிவைத்திருந்த விவரம் தெரியவந்துள்ளது. அக்டோபர் 2006ல் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும் ஆனால் கை கூடவில்லை என்றும் அந்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் சமூக - பொருளாதார நிலைகளை ஆய்வு செய்ய மத்திய அரசு மார்ச் 2005 ல் நீதிபதி சச்சார் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்திருந்தது. நவம்பர் 2006 ஆம் ஆண்டு அந்த ஆணையம் தங்கள் ஆய்வறிக்கையை அரசுக்கு அளித்தது.
முஸ்லிம்களின் சமூக, பொருளாதார நிலையை சச்சார் குழு ஆய்வு செய்வது பிடிக்காமல், கொல்லப்பட்ட இந்துத்துவ பயங்கரவாதி சுனில் ஜோஷி தலைமையில் சச்சாரைக் கொல்ல முடிவெடுக்கப்பட்டதாக ராஜேந்திர செளத்ரியின் வாக்குமூலம் தெரிவிக்கிறது.
சுனில் ஜோஷி இதன் காரியஸ்தர்களாக ராஜேந்திர செளத்ரியையும் லோகேஷ் ஷர்மாவையும் இருக்கப் பணித்ததாகவும், 2006ன் தொடக்கத்தில் இதற்கான ஒத்திகையும் மேற்கொள்ளப்பட்டதாகவும் வாக்குமூலம் தெரிவிக்கிறது.
தேசிய புலனாய்வு நிறுவனம் நீதிபதி சச்சாரின் உயிருக்கு ஆபத்து என்று 'அறிந்து', டெல்லியில் பாதுகாப்பைப் பலப்படுத்தியது என்றாலும், பல்வேறு மாநிலங்களுக்கு ஆய்வின் பொருட்டு பயணித்த சச்சாருக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் அச்சமயம் செய்யப்பட்டிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாந்தேட் நகரில், தனது வீட்டில் குண்டு தயாரிக்கையில் ஆர் எஸ் எஸ் ஊழியர் இறந்து போனதையடுத்து உளவுத் துறையின் கவனம் ஆர் எஸ் எஸ் இயக்கப் பிரமுகர்கள் மீது திரும்பியதால் சச்சாரைக் கொல்லும் இந்துத்துவ திட்டம் நிறைவேறாமல் போனதாகவும் அந்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திரத்தின்போது மகாத்மா காந்தி முஸ்லிம்களுக்கு அனுகூலமாக செயல்பட்டுக்கொண்டிருந்தது பிடிக்காததாலேயே ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி கோட்சேயால் கொல்லப்பட்டார். அதே போன்று நீதிபதி சச்சாரையும் தீர்த்துக்கட்ட இந்துத்துவ பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியிருந்த விசயம் பெரும் பரப்பரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க நடத்தும் தீவிரவாத முகாம்கள் குறித்த ஆதாரங்களை வெளியிட தயார்! – திக்விஜய் சிங் அறிவிப்பு!
புதுடெல்லி:இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.கவும் நடத்தும் தீவிரவாத முகாம்கள் குறித்த ஆதாரங்களை வெளியிட தயார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான திக்விஜய்சிங் கூறியுள்ளார். ஜெய்ப்பூர் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் வைத்து இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.கவும் தீவிரவாத முகாம்களை
நடத்திவருவதாகவும், நாட்டில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்திவிட்டு அவற்றை சிறுபான்மையினர் மீது பழிபோடுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறியிருந்தார். இதனால் பதட்டமடைந்த சங்க்பரிவாரம் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இதற்கான ஆதாரங்களை ஷிண்டே வெளியிடவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்வருமான திக் விஜய்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
தீவிரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தொடர்பு குறித்து பல வருடங்களுக்கு முன்பாகவே நான் கூறியபொழுது அது பைத்தியக்காரத்தனமான கூற்று என்றே அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் கருதின. இப்பொழுது மத்திய உள்துறை அமைச்சரே வெளியிட்டதில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸும், பா.ஜ.கவும் நடத்தும் தீவிரவாத முகாம்களை குறித்த ஆதாரங்களை அளிகக் தயார். ஹிந்துத்துவா தீவிரவாதத்தை குறித்து விசாரணை நடந்துவருகிறது. சில ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு திக்விஜய்சிங் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் கமல்நாத் கூறுகையில், “மக்களின் கவனத்தை திசை திருப்ப பா.ஜ.க முயல்கிறது” என்றார்.
Thursday, January 17, 2013
யுவான் ரிட்லிக்கு விசா மறுப்பு:இந்திய அரசின் இஸ்லாமோஃபோபியா !
ஹைதராபாத்:பிரபல பத்திரிகையாளரும், மனித உரிமை ஆர்வலருமான யுவான் ரிட்லிக்கு இந்தியாவுக்கு வர விசாவை மறுத்துள்ளது மத்திய அரசு.ஜமாஅத்தே இஸ்லாமி சார்பாக ஹைதராபாத்தில் நடக்கும் மாநாட்டில் கலந்துகொள்ள யுவான் ரிட்லிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இதனைத் தொடர்ந்து அவர் இந்தியாவுக்கு வர விசாவுக்கு விண்ணப்படித்திருந்தார். ஆனால், அவருக்கு விசா அளிக்க இந்திய அரசு மறுத்துவிட்டது.ஏற்கனவே கேரள மாநிலத்தில் நடந்த மாநாட்டில் கலந்துகொள்ள அவர் விசாவுக்கு விண்ணப்பித்திருந்தபோதும் இந்திய அரசு விசா அளிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், யுவான் ரிட்லி வீடியோ
கான்ஃப்ரன்ஸ் மூலமாக மாநாட்டில் உரையாற்றினார் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுக்குறித்து தனது கண்டனத்தை பதிவுச்செய்துள்ள யுவான் ரிட்லி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பது:பெண்கள் உரிமைகள் குறித்து 50 ஆயிரம் பெண்கள் மத்தியில் உரையாற்றும் வாய்ப்பை இந்திய அரசு மறுத்துள்ளது.டெல்லியில் கூட்டு பாலியல் கொடுமை போன்ற அக்கிரமங்கள் நடந்த பிறகும் இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள் அதன் தீவிரத்தன்மையை உணரவில்லை.பெண்களை 2-ஆம் தர குடிமக்களாகவே பார்க்கின்றனர் என்று யுவான் ரிட்லி கூறியுள்ளார்.
லண்டனில் வாழும் யுவான் ரிட்லி 2001 ஆம் ஆண்டு ஆப்கானில் பத்திரிகை பணிக்காக சென்றபொழுது தாலிபான் போராளிகளால் கைதுச் செய்யப்பட்டார்.2003-ஆம் ஆண்டு விடுதலைச் செய்யப்பட்ட யுவான் ரிட்லி பின்னர் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
Monday, January 14, 2013
காமராசரின் ஆட்சி காலம்:
காமராசரின் ஆட்சி காலம்:
ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக்
காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப்
பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச்
சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார்
காமராஜ். அதுதான் அவர் முதன்முதலாக
ஆட்சியில் அமர்வது.
ஆட்சியில் இருந்த ராஜாஜி,அரசாங்கத்திடம்
பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய
6000 பள்ளிகளைச் சிலமாதங்களில்
ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும்
திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார்.
அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள்
கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும்
மாணவர்கள் பட்டினியாக இருக்கக்
கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம்
தீட்டி நிறைவேற்றினார்!
நிதிப் பற்றாக்குறை, அரசாங்க
கஜானா காலி என்று ராஜாஜி தமிழகத்தைப்
பிச்சைக் கார மாநிலமாக
முன்னிருத்தினார்.
ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ்
அதே பிச்சைக்காரத்
தமிழகத்தை இந்தியாவிலெயே தொழில்
வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக்
கொண்டுவந்து நிறுத்தினார்!
1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித்
தொழிற்சாலை
11.துப்பாக்கித் தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்புர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட்
தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை
இவை மட்டுமா?
மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி
என்று இன்றைக்கும் விவசாயிகள்
பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும்
பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை!
அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில்
இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள்.
அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14
இன்னும் சொல்லவா?
159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை
கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர்,ர
ாணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண
்டம்,ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச
்சி...என்று.
தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள்
உருவாக்கினார்.
மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப்
பாருங்கள் தோழர்களே...!
காமராஜ் ஆட்சி புரிந்தது 9
ஆண்டுகள்தான்..! (பட்டியலில் இன்னும் சில
விடுபட்டுள்ளன)
அவர் 9 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் செய்த
இந்தச் சாதனைகளில்...
இந்தியாவிலெயே தொழில்வளர்ச்சியில்
இரண்டாவதாகக் கொண்டு வந்த காமராஜர்
செய்தது சாதனையா..?
இல்லை
"இலவச"த்தின் பேரில் நம்மைப்
பிச்சைக்காரர்களாக
மாற்றி இருக்கும் இன்றைய தலைவர்களின்
செய்கை சாதனையா..?
Pls share....
நன்றி: கணேஷ்
ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக்
காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப்
பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச்
சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார்
காமராஜ். அதுதான் அவர் முதன்முதலாக
ஆட்சியில் அமர்வது.
ஆட்சியில் இருந்த ராஜாஜி,அரசாங்கத்திடம்
பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய
6000 பள்ளிகளைச் சிலமாதங்களில்
ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும்
திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார்.
அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள்
கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும்
மாணவர்கள் பட்டினியாக இருக்கக்
கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம்
தீட்டி நிறைவேற்றினார்!
நிதிப் பற்றாக்குறை, அரசாங்க
கஜானா காலி என்று ராஜாஜி தமிழகத்தைப்
பிச்சைக் கார மாநிலமாக
முன்னிருத்தினார்.
ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ்
அதே பிச்சைக்காரத்
தமிழகத்தை இந்தியாவிலெயே தொழில்
வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக்
கொண்டுவந்து நிறுத்தினார்!
1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித்
தொழிற்சாலை
11.துப்பாக்கித் தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்புர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட்
தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை
இவை மட்டுமா?
மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி
என்று இன்றைக்கும் விவசாயிகள்
பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும்
பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை!
அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில்
இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள்.
அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14
இன்னும் சொல்லவா?
159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை
கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர்,ர
ாணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண
்டம்,ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச
்சி...என்று.
தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள்
உருவாக்கினார்.
மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப்
பாருங்கள் தோழர்களே...!
காமராஜ் ஆட்சி புரிந்தது 9
ஆண்டுகள்தான்..! (பட்டியலில் இன்னும் சில
விடுபட்டுள்ளன)
அவர் 9 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் செய்த
இந்தச் சாதனைகளில்...
இந்தியாவிலெயே தொழில்வளர்ச்சியில்
இரண்டாவதாகக் கொண்டு வந்த காமராஜர்
செய்தது சாதனையா..?
இல்லை
"இலவச"த்தின் பேரில் நம்மைப்
பிச்சைக்காரர்களாக
மாற்றி இருக்கும் இன்றைய தலைவர்களின்
செய்கை சாதனையா..?
Pls share....
நன்றி: கணேஷ்
Sunday, January 06, 2013
டெல்லி மாணவியின் காதலர் 20 நாட்களுக்கு பின்னர் முதல்முறையாக தனது மவுனத்தை கலைத்து பேட்டி: போலீசார் மீதும் குற்றச்சாட்டு

டெல்லி:தலைநகர் டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த மாணவிக்கு போலீசார், பொதுமக்கள் உரிய நேரத்தில் உதவவில்லை என்று உயிரிழந்த மாணவியின் ஆண் நண்பர் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து, கடுமையாக தாக்கிய அந்த கும்பல், அவரது ஆண் நண்பரையும் சரமாரியாக தாக்கியது. இதில், பலத்த காயம் அடைந்த அவர், மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த நிலையில், அவரை தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டி கண்டு ஒளிபரப்பியது.
அப்பேட்டியில் அவர் கூறும்போது; “நாங்கள் ஓடும் பேருந்தில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்ட பின்னர், சுமார் 25 நிமிடங்கள் சாலையில் உயிருக்குப் போராடினோம், அப்போது பொதுமக்கள் யாரும் உதவ முன்வரவில்லை. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இந்த வழக்கு எந்த காவல்நிலைய எல்லைக்குள் வரும் என்று கிட்டத்தட்ட 30 நிமிடங்களை வீணடித்தனர். மேலும், சாலை ஓரத்தில் நிர்வாணமாக கிடந்த எங்களை காவல்துறையினர் வேடிக்கை பார்த்தனர். அப்போது, யாரோ ஒருவர் கொடுத்த துணியை வைத்து எனது தோழியின் உடலை மறைக்க முயன்றேன். ஆம்புலன்ஸ் வேன் எதுவும் வராத நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்த எனது தோழியின் நிலை குறித்து மிகவும் கவலை அடைந்தேன். பின்னர் நானே எனது தோழியை போலீஸ் வேனில் தூக்கி வைத்தேன். காவல்துறையினர் அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், நீண்டதூரம் பயணித்து சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர்.” என்று கூறியுள்ளார்.
காவல்துறையினரின் அலட்சியமே இதுபோன்ற குற்றங்களுக்கு காரணம் என பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர் இதுபோன்று பேட்டி அளித்துள்ளார்.
இந்நிலையில் இப்பேட்டியை ஒளிபரப்பியதற்காக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Thursday, January 03, 2013
ஜெர்மனியில் இஸ்லாத்தை நோக்கி மக்கள் படையெடுப்பும் தமிழக ஊடக கூட்டங்களின் வயிற்றெரிச்சலும்!

ஜெர்மனியில் இஸ்லாத்தை நோக்கி மக்கள் படையெடுப்பும் தமிழக ஊடக கூட்டங்களின் வயிற்றெரிச்சலும்!
மாலைமலர், ஒன் இந்தியா உள்ளிட்ட கள்ளநரி ஊடக கூட்டங்கள் முஸ்லிம்களை பற்றிய பொய்யான செய்தியை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள், அந்த வகையில் ஜெர்மனியில் உள்ள சகோதரர்கள் உண்மை நிலையை அறியத்தருமாறு கேட்டுக் கொள்கிறோம்,
தாங்கள் உண்மை நிலையை விளக்கிய பிறகு தான் மாலைமலர், ஒன் இந்தியா உள்ளிட்ட குள்ளநரி கூட்டத்திற்கு மரண சாசனம் எழுத நீதிமன்ற படியை மிதிப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை செய்து வருகிறோம்,
இறைவனின் மாபெரும் கிருபையினால் கிறித்தவ நாடான ஜெர்மனியில் இஸ்லாத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருப்பதை நாம் கண்டு வருகிறோம், அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான கிறித்தவ சகோதரர்கள் ஆண்களும், பெண்களும் இஸ்லாத்தை நோக்கி கூட்டம் கூட்டமாக வருகை தருகிறார்கள், அந்த வகையில் ஒரு சிலரின் பெயரை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்...
1) கான்சர்ச்கி (Ganczarski)
2) குத்து சண்டை வீரர் பியர் வோகல் (Pierre Vogel a german Boxer)
3) யூசுப் எஸ்டஸ் (Yusuf Estes)
இப்படி பல சகோதரர்கள் கூட்டம் கூட்டமாக அலைகடலென சத்திய மார்க்கமான இஸ்லாத்தை நோக்கி படையெடுத்து கடந்த ஓராண்டில் மட்டும் 3000 க்கும் அதிகமான சகோதரர்கள் இஸ்லாத்தை நோக்கி வருகை தந்துள்ளார்கள்,
இவ்வாறு ஜெர்மனியில் இஸ்லாத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருவதால் காவிவெறி பிடித்த பத்திரிக்கையான மாலைமலர் ஜெர்மனியில் உள்ள ஒரு இந்தியர் ரோட்டில் நடந்து செல்லும்போது திடீரென இரண்டு தீவிரவாதிகள் இஸ்லாத்திற்கு மாறுமாறு மிரட்டினார்களாம்,
அந்த இந்தியர் இஸ்லாத்திற்கு வரமருத்துவிட்டாராம், ஆகையால் அவருடைய நாக்கை தீவிரவாதிகள் அறுத்து விட்டார்கள் என பொய்யான செய்தியை வெளியிட்டு முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக்கருத்தை விதைத்துள்ளது மாலைமலர்,
மாலைமலர் எடுத்த அதே வாந்தியை ஒன் இந்தியா தளமும், விகடன் செய்திகள் தளமும் அதே செய்தியை வெளியிட்டு தானும் ஒரு காவிக்கூட்டம் என்பதை தெளிவாகவே நிரூபித்து இருந்தது,
இந்த செய்தியை முகநூலிலுள்ள சுவாமி வித்தியானந்தா என்பவர் வெளியிட்டு ஒன்றும் அறியாத மக்களுக்கு மேலும் விஷக்கருத்தை பாய்ச்சுகிறார்,
ஒரு பொய்யான செய்தியை தொடர்ந்து வெளியிடும் காவிக்கூட்டங்களே....
1) இந்தியரின் நாக்கு துண்டிக்கப்பட்டது என்று கூறுகிறீர்களே, அந்த இந்தியரின் பெயர் என்ன? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
2) ஜெர்மனியில் ஒரு இந்தியருக்கு பாதிப்பு என்றால் இந்திய அரசு இதுவரை ஜெர்மனி அரசுக்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
3) பாதிக்கப்பட்ட இந்தியர் தற்போது என்ன நிலையில் இருக்கிறார், அவரை எந்த மருத்துவமனையில் வைத்து மருத்துவம் செய்யப்படுகிறது,
4) இந்தியரின் நாக்கை ஜெர்மனியில் உள்ள முஸ்லிம் தீவிரவாதிகள் துண்டித்தார்கள் என பொய்யை விதைக்கிறாயேஸ. அந்த முஸ்லிம் இயக்கத்தின் பெயர் என்ன? அந்த இயக்கத்தினரை ஜெர்மனி காவல்துறை கைது செய்ததா?
5) மேலும் ஜெர்மனியில் நடைபெற்ற அந்த சம்பவம் BBC, Gulf News, Yahoo News உள்ளிட்ட உலகளாவிய ஊடகங்களில் வெளிவராத செய்தி எப்படி மாலைமலர், ஒன் இந்தியா, ஆனந்த விகடன் உள்ளிட்ட தமிழ் ஊடகங்களில் வந்தது எப்படி? உங்களுக்கு செய்தி சொன்ன செய்தியாளர் யார்?இப்படி எந்த கேள்வியை கேட்டாலும் உங்களால் பதில் சொல்லமுடியாது, ஏனென்றால் உன்னிடம் உண்மை இல்லை என்பது முஸ்லிம்களுக்கு எப்பொழுதோ தெரியும் ஆனால் உங்களையும் நல்லவர்களாக நினைத்து கொண்டிருக்கும் எங்களுடன் ஒரு தாய் வயிற்று மக்களாக வாழ்ந்து வரும் எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளுக்கு உண்மை நிலையை புரியவைக்காமல் விடமாட்டோம்,
ஜெர்மனியில் இஸ்லாத்திற்கு வராவிட்டால் நாக்கை அறுப்பதாக இருந்தால் ஜெர்மனியில் யாராவது இஸ்லாத்திற்கு வருவார்களா? ஆனால் அங்கு உள்ள நிலை என்ன ? கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்,
இஸ்லாத்தில் எந்தவித நிர்பந்தமும் இல்லை என்பதை உலக மக்கள் நன்கு அறிந்துள்ள நிலையிலும் இப்படி பட்ட உன் நச்சுக்கருத்தை விதைத்தால் மக்களுக்கு எடுபடும் என நினைக்கிறாயோ?
இதிலிருந்தே மாலைமலர், ஒன் இந்தியா, விகடன் செய்திகள் உள்ளிட்ட குள்ளநரி கூட்டங்கள் உண்மைக்கு மாறான நச்சுக்கருத்தை மக்கள் மனதில் விதைத்துள்ளன என்பது திட்டவட்டமாக புரிகிறது,
அப்படி நீங்கள் சொல்வது போல் உண்மையாக இருந்தால்ஸ அதாவது ஒரு இந்தியர் இஸ்லாத்திற்கு மாறுமாறு வற்புருத்தப்பட்டு அவர் மாற மறுத்த காரணத்தினால் தீவிரவாத இயக்கத்தினர் அவருடைய நாக்கை துண்டித்து இருப்பார்களேயானால்,
அந்த கேவலத்தை நீ மக்களுக்கு கொண்டு சென்றதை விட நாங்கள் கொண்டு செல்கிறோம், நாங்களும் இந்தியர்கள் தான், எங்கள் சக இந்தியனுக்கு ஒரு பாதிப்பு என்றால் நாங்கள் பார்த்து கொண்டு சும்மா இருக்க வேண்டிய அவசியமே இல்லை,
இந்தியா எங்கள் தாய்நாடு! இஸ்லாம் எங்கள் வழிபாடு! source nidur.info
Subscribe to:
Posts (Atom)






