புதுடெல்லி:சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பங்கேற்பதை கண்டித்து இந்தியா டுடேவின் கான்க்ளேவ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை முன்னாள் பாக்.கிரிக்கெட் கேப்டனும், தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் புறக்கணித்துள்ளார்.
இம்ரான் கான் நிகழ்ச்சியில் பங்கேற்காதது துரதிர்ஷ்டவசமானது என்று இந்தியா டுடே குழுமத்தின் சேர்மன் அருண் பூரி அறிக்கையில் கூறியுள்ளார். சுதந்திரமான கருத்துக்களை பகிர்ந்துகொள்வதற்கான இடம் தான் இந்தியா டுடேயின் கான்க்ளேவ். யாருடைய கருத்துக்களையும் யார் மீதும் வலுக்கட்டாயமாக திணிக்கப்படாது. தான் கூற விரும்புவதை இந்நிகழ்ச்சியில் இம்ரான்கான் வெளிப்படுத்தியிருக்கலாம் என்று அருண்பூரி கூறுகிறார்.
டெல்லியில் வருகிற மார்ச் 16,17 தினங்களில் இந்தியா டுடேயின் கான்க்ளேவ் நடக்கிறது. முன்னர் ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் ருஷ்தி பங்கேற்பதற்கு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன. எதிர்ப்பை தொடர்ந்து ருஷ்டி விழாவில் பங்கேற்கவில்லை.
No comments:
Post a Comment