மேற்கு வங்க மாநிலம் பட்வான் மாவட்டத்தில் பள்ளி சிறுமியை கற்பழித்து கொன்ற வாலிபருக்கு மரண தண்டனை விதித்து உள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 34 வயதான பினய் பக்தி என்னும் அந்த வாலிபர், கடந்த வருடம் ஏப்ரல் 21 அன்று டி.வி பார்ப்பதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்த 14 வயது பள்ளி மாணவியை, சாக்லேட் கொடுத்து அழைத்து சென்று கற்பழித்துக் கொன்றுள்ளார்.
பின்னர் அந்த சிறுமியின் உடல் அழுகியநிலையில் மே 3 அன்று கண்டெடுக்கப்பட்டது. போலீஸ் விசாரணையின்போது சிறுமியுடன் கடைசியாக பினய் தான் பேசினார் என்பது தெரிய வந்ததும், பினய் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். அப்போது பினய், போலீசிடம் குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
No comments:
Post a Comment