பூமியின் மேல் ஓடுகள் நகர்வதையும், அதன் மூலம் நிலநடுக்கம் ஏற்படுவதையும் செயற்கைக் கோள் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் புதிய முறையை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கடந்த 2007ல், 35 விஞ்ஞானிகள் அடங்கிய குழு ஒன்று சீன அரசின் பல்வேறு அறிவியல் துறைகளுடன் இணைந்து நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறிவதைக் குறித்த ஆய்வில் ஈடுபட்டது. மொத்தம் 83.2 மில்லியன் டாலர் செலவில் இக்குழு
நடத்திய ஆய்வில் செயற்கைக்கோள் மூலம் பூமியின் மேல் ஓடுகள் நகர்வதையும் அதன் மூலம் நிலநடுக்கம் ஏற்படுவதையும் தெரிந்து கொள்ளும் புதிய முறை கண்டறியப்பட்டது.நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிப்பதில் துல்லியமாகச் செயல்பட்டு வரும் அமெரிக்காவின் "பிளேட் பவுண்டரி அப்சர்வேஷன் சிஸ்டம்' மற்றும் ஜப்பானின் "ஜியோன்' ஆகிய அமைப்புகளுடன் இக்குழு இணைந்து செயல்படும்.சீனாவில், 260 நிலையான கண்காணிப்பு மையங்கள் மற்றும் இரண்டாயிரம் பகுதிநேரக் கண்காணிப்பு மையங்கள் செயற்கைக்கோள் மூலம் தகவல்களைத் திரட்டித் தரும் பணியில் ஈடுபடுத்தப்படும்.அதோடு, வானிலை முன்னறிவிப்புகளுக்காகவும், அறிவியல் ஆய்வுகளுக்காகவும். to asiananban
No comments:
Post a Comment