டெஹ்ரான்:மனிதஉரிமை மீறல் குற்றம் சுமத்தி அமைச்சர் உள்பட ஈரானின் 17 பிரமுகர்களுக்கு ஐரோப்பிய யூனியன் தடை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி ஒலிபரப்பு அமைச்சர் ரிஸாதாகிபோர், செய்தி ஒலிபரப்புத்துறை தலைவர் இஸ்ஸத்துல்லாஹ் ஸார்காமி உள்ளிட்டோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சம்மட்டியால் தாக்குதல், கல் எறிந்து கொலைச் செய்தல், உறுப்புக்களை சேதப்படுத்தி கொலைச் செய்தல், கண்ணில் ஆசிட் ஊற்றுதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தினார் என்ற குற்றம் சுமத்தி சட்டத்துறை தலைவர் ஸாதிக் லாரிஜானிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்களை நடத்திய 78 ஈரானியர்களின் சொத்துக்களை முடக்கவும் முயற்சிகள் நடக்கின்றன.
தடை விதித்ததற்கு பலத்த அடியை தருவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி வழியிலான கப்பல் போக்குவரத்தை தடுப்போம் என்று ஈரான் வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
No comments:
Post a Comment