எகிப்தில் கடந்த 32 ஆண்டுகாலமாக ராணுவ ஆட்சி நடைபெற்று வந்தது. அதிபர் முபாரக்கின் சர்வாதிகாரம் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். புரட்சியாளர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதால் புரட்சி தீவிரம் அடைந்தது. இதனால் அதிபர் முபாரக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் 32 ஆண்டுகால ராணுவ ஆட்சிக்குப்பின் எகிப்தில் முதல்முறையாக அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. வரும் மே 23, 24 தேதிகளில் முதல்கட்ட தேர்தலும், அதனைத் தொடர்ந்து ஜூன் 16, 17ம் தேதிகளில் இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜூன் 21 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர், புதிய அதிபராக அறிவிக்கப்படுவார்.
ஜூன் மாத இறுதிக்குள் ஆட்சி பொறுப்புகள் புதிய அதிபரிடம் ஒப்படைக்கப்படும் என எகிப்தில் தற்போது தற்காலிக ஆட்சி நடத்திவரும் 90 பேர் கொண்ட ராணுவ ஆட்சிக்குழு அறிவித்துள்ளது.to asian nanban
No comments:
Post a Comment