நியூயார்க்:இந்தியா ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை தொடர்ந்தால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கச்சா எண்ணெய் இறக்குமதியை ஈரானை தவிர்த்து சவூதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து மேற்கொள்ளலாம் என்று அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது. இது தொடர்பான முடிவுகள் வரும் ஜூன் மாதம் மேற்கொள்ளப்படும் என்று அந்த ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரானை கை கழுவுவது தொடர்பாக இந்தியா மட்டுமின்றி ஜப்பான், தென்கொரியாவுடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் நிபந்தனையை ஏற்க இந்தியா மறுத்தால் பொருளாதாரத் தடை விதிக்க நேரிடலாம் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் இத்தகைய எச்சரிக்கைகளுக்குப் பின்னணியில் அமெரிக்க அரசில் உள்ள இஸ்ரேல் குழுவினரே காரணம் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment