Facebook Twitter RSS

Friday, March 23, 2012

Widgets

இலங்கையை ஆதரித்து 7 முஸ்லிம் நாடுகள் வாக்களிப்பு


Unhrc1இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை எதிர்த்து இலங்கையை ஆதரித்து 7 முஸ்லிம் நாடுகள் வாக்களிப்பு. இன்று (22.03.2012) வியாழக்கிழமை அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது அமெரிக்காவுக்கு ஆதரவாக 24  வாக்குகளும்   எதிராக 15  வாக்குகளும் அளிக்கப்பட்டன. 08 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதன்படி அமெரிக்காவினால் இலங்கைகு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணைனை வெற்றிபெற்றுள்ளது.

அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்

அமெரிக்காஇந்தியாசிலிகொஸ்டாரிக்காகௌதமாலாமெக்ஸிகோபெருஉருகுவே,ஆஸ்திரியாபெல்ஜியம்இத்தாலிநோர்வேஸ்பெயின்சுவிட்ஸர்லாந்துகீறீஸ்ஹங்கெரி,போலாந்துமோல்டோவாருமெனியாபெனின்கெமரூன்லிபியாமொரிஸியஸ்நைஜீரியா,

அமெரிக்காவை எதிர்த்து இலங்கையை ஆதரித்து வாக்களித்த நாடுகள்

சீனாஇந்தோனேஷியாகொங்கோமொரிட்டானியாஉகண்டாபங்களாதேஷ்பிலிப்பைன்ஸ்,குவைத் தாய்லாந்துகட்டார்ஈக்குவடோர்சவூதி அரேபியாகியூபாமாலைதீவுரஷ்யா.

வாக்களிப்பில் கலந்து கெள்ளாத நாடுகள்

ஜோர்தான்அங்கோலாகிர்கிஸ்தான்பொட்ஸ்வானாமலேஷியாபுர்கினா பெஸோடிஜிபோட்டி,செனகல்,

அமெரிக்காவின் பிரேரணையின் சுருக்கம்

ஐக்கிய நாடுகள் சாசனம்சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம்மனித உரிமைகளுக்கான அனைத்துலக உடன்படிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய விதிகளுக்கு அமைவாக, பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச விதிகளுக்கு அமைவாக இருப்பதை உறுதிப்படுத்தும் உறுப்பு நாடுகளது கடமைக்கு அமைவாகவும்குறிப்பாக பொருத்தமான சர்வதேச மனித உரிமைகள்பாதுகாப்புமனிதாபிமான விதிகளுக்கு அமைவாகவும்,

சிறிலங்காவின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC)அறிக்கையின் முடிவுகளையும் பரிந்துரைகளையும் மற்றும் சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இவ்வறிக்கை வழங்கிய பங்களிப்பை ஏற்றும்,
சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் படுகொலைகள் மற்றும் காணாமற் போதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையிட்டு பக்கசார்பற்ற விசாரணை மேற்கொள்ளுதல்,வடக்கிலிருந்து இராணுவத்தை விலக்குதல்காணி தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பாரபட்சமற்ற பொறிமுறையை உருவாக்குதல்தடுத்து வைத்தல் தொடர்பான கொள்கைகளை மீளாய்வு செய்தல்சுயாதீனமான சிவில் சமூக கட்டமைப்புகளை பலப்படுத்துதல்,மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குதல் மூலம் இனப்பிரச்சனைக்கான தீர்வைக் காணுதல்அனைவரதும் கருத்து வெளிப்பாட்டு உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல்சட்ட ஆட்சி முறை தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்கள் சார்ந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்துள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை வரவேற்று

சர்வதேச சட்ட விதிகள் தீவிரமாக மீறப்பட்டமை குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதையும் கவனத்திற்கொண்டு..

1. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதுடன் நீதிபொறுப்புப் கூறுதல்சகல இலங்கையர்க்கும் இடையிலான நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்த,பொருத்தமானதும் நம்பிக்கையானதுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் சட்டரீதியான கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றவும் சிறிலங்கா அரசைக் கோருதல்

2. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து எடுக்கப்படவுள்ள விபரங்கள் உள்ளிட்டவிரிவான செயற்திட்டத்தை விரைந்து முன்வைக்குமாறும்சர்வதேச சட்டவிதிகள் மீறப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து கவனம் செலுத்துமாறும் சிறிலங்கா அரசாங்கத்தைக் கோருதல்
3. மேற்சொன்ன திட்டங்களை நடைமுறைப்படுத்தவதற்குரிய ஆலோசனைகளையும் தொழில்நுட்ட உதவிகளையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தை வழங்குமாறும் சிறிலங்கா அரசாங்கத்தை இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டுவதுடன் இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையகத்தின் 22 வது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தை வேண்டுதல்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets