Facebook Twitter RSS

Thursday, March 08, 2012

Widgets

முலாயம் வெற்றிக்கு முஸ்லிம்களே காரணம்: மாயாவதி பரபரப்புத் தகவல் !



லக்னோ: இப்போது நடைபெற்ற பொதுத் தேர்தலில் தங்களுக்கு எதிரான கட்சியான பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்து விடும் என முஸ்லிம்கள் பயந்து  முலயாம்சிங்கின் சமாஜ்வாடி கட்சிக்கு வாக்களித்துவிட்டனர் என்று உத்தரப்பிரதேசத்தில் பதவி விலகும் முதல்வரான  மாயாவதி கூறியுள்ளார்.
தேர்தல் தோல்வியையடுத்து உ பி மாநில ஆளுநர் பி.எல்.ஜோஷியிடம் இன்று தமது பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்த மாயாவதி, அதன்பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "நான் ஆட்சிக்கு வரும்போது மிக மோசமான நிலையில் இருந்த உத்தரப் பிரதேச மாநிலத்தில்
பல முன்னேற்றங்களைக் கொண்டு வந்தேன். எனினும் பாரதீய ஜனதா கட்சி  மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என்று பயந்து முஸ்லீம்கள் சமாஜ்வாடி கட்சிக்கு வாக்களித்துவிட்டனர்.
இதனால்  முலாயம் சிங் வென்றுவிட்டார். மேலும் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதாகக் கூறி அரசியல் செய்து காங்கிரசும் முஸ்லிம்களைக்  குழப்பி விட்டது.

சமாஜ்வாடி ஆட்சியில் மக்கள் வெறுப்படைந்து மீண்டும் எங்களை ஆட்சியில் அமர்த்துவர்" என மாயாவதி கூறினார்.
to asiananban.blogspot.com


No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets