சிரியாவிலுள்ள தனது தூதரகத்தை துருக்கி தற்காலிகமாக மூடியுள்ளது. இது ஜனாதிபதி அஸதை மேலும் சர்வதேச ரீதியாக தனிமைப்படுத்த வழிவகுத்துள்ளது.
சிரியப் படையினர் ஹும்ஸ் நகரத்தை மோட்டார் தாக்குதலுக்கு உட்படுத்தி, எதிர்ப்பை அடக்க முற்பட்டு வருகின்றனர்.
‘‘ஒவ்வொரு நாளும் ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்று வருகிறது. அரசாங்கம் நகரத்தை துடைத்து வழித்துவிட்டது‘‘ என ஹும்ஸ் நகரில் வசிக்கும் செயற்பாட்டாளர் வலீத் பாரிஸ் தெரிவித்துள்ளார்.
சிரியாவின் மூன்றாவது பெரிய நகரான ஹும்ஸில் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நகரமே அஸதிற்கு எதிரான ஒரு வருட கிளர்ச்சியின் பிரதான மையமாக விளங்குகிறது.
பல அறபு மற்றும் மேற்கு நாடுகளைப் போல துருக்கியும் தூதரக செயற்பாட்டை முடக்கியுள்ளது. துருக்கி முன்னர் அஸதின் நெருக்கமான நட்பு நாடாக இருந்தது.
தற்போது அந்நாடு எதிரணியினருக்கு ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment