Facebook Twitter RSS

Tuesday, March 20, 2012

Widgets

ஆயுத இறக்குமதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்!


 லண்டன்:உலகிலேயே அதிகமாக ஆயுதங்களை இறக்குமதிச்செய்யும் நாடு என்ற பெருமையை பெற்றிருந்த சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. சர்வதேச ஆயுத விற்பனையில் 10 சதவீதத்தை இந்தியா இறக்குமதிச் செய்வதாக சுவீடன் ஏஜன்சியான ஸ்டாக்ஹோம் இண்டர்நேசனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்ட்யூட்டின் புதிய அறிக்கை கூறுகிறது.
2006-07 ஆண்டு காலக்கட்டத்தில் முதலிடத்தில் இருந்த சீனா தற்பொழுது ஆயுத இறக்குமதியில் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சீனாவின் ஆயுத இறக்குமதி தற்போதைய சர்வதேச ஆயுத விற்பனையில் 5 சதவீதம் மட்டுமே ஆகும். பாகிஸ்தானும் 5 சதவீதம் ஆயுதங்களை இறக்குமதிச் செய்து சீனாவுடன் நான்காவது இடத்தை பகிர்ந்துகொள்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் 38 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறும் அறிக்கை, அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியா ஆயுத இறக்குமதிக்காக 10 ஆயிரம் கோடி டாலரை செலவழிக்கும் என்று கூறுகிறது.
உள்நாட்டில் ஆயுத தயாரிப்பை துவக்கி அதில் முன்னேற்றம் ஏற்பட்டதால் சீனாவின் ஆயுத இறக்குமதி குறைவதற்கு காரணமாகும். அதேவேளையில் சீனா ஆயுத ஏற்றுமதியில் சீனா உலகிலேயே 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. பிரான்சில் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா தீர்மானித்ததன் காரணமாக ஆயுத இறக்குமதியில் இந்தியா முந்தியுள்ளது.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets