Facebook Twitter RSS

Friday, March 30, 2012

Widgets

சதாம் ஹுஸைனின் அடக்கஸ்தலத்தை மூட உத்தரவு!



பாக்தாத்:ஈராக் முன்னாள் அதிபரும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இறுதிவரை போராடியவருமான சதாம் ஹுஸைனின் கப்ருஸ்தானை பூட்டிவிட்டு அவரது அடக்கஸ்தலத்தில்இருந்து மீதமுள்ளவற்றை வேறு இடத்தில் புதைக்க ஈராக் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை வாபஸ் பெறக்கோரி சதாமின் பிறந்த கிராமத்தைச் சார்ந்த பிரதிநிதிகளும் பழங்குடியினரும் அரசுடன் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

கப்றுஸ்தானிற்கு அருகில் உள்ள ஹாலில் ஏராளமான நபர்கள் திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளுக்கு கூடுகின்றனர். இவர்களில் பாதிபேர் மட்டுமே கப்றுஸ்தானை தரிசிக்க வருகின்றனர். ஆனால், சடங்குகளுக்கு வருபவர்கள் அனைவரும் கப்றுஸ்தானை தரிசிப்பதாக அரசு கருதுகிறது.
விசாரணை நாடகத்தின் இறுதியில் தூக்கிலிடப்பட்ட சதாம் ஹுஸைனின் நினைவுச் சின்னங்களை மறைப்பதற்கான முயற்சியில் அமெரிக்காவின் கைப்பாவையான ஈராக் அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets