Facebook Twitter RSS

Tuesday, March 27, 2012

Widgets

ஷெய்க் கர்ளாவி பிரான்ஸினுள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார் – ஜனாதிபதி சார்கோசி


Qaradawiஷெய்க் யூஸுப் அல் கர்ளாவி பிரான்ஸ் நாட்டினுள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார் என அந்நாட்டின் ஜனாதிபதி நிகலஸ் சார்கோசி தெரிவித்துள்ளார்.
86 வயதான ஷெய்க் கர்ளாவி, பல அமைப்புகளின் கூட்டமைப்பான பிரான்ஸ் இஸ்லாமிய அமைப்புகளின் ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் அடுத்த மாதமளவில் அங்கு விஜயம் செய்ய இருந்தார்.
‘‘இந்த மனிதர் பிரான்ஸ் குடியரசின் எல்லைக்குள் வரவேற்கப்பட மாட்டார் என கட்டார் அமீரிடம் நானே நேரடியாகத் தெரிவித்துள்ளேன் என சார்கோசி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் குடியரசின் பெறுமானங்களை மதிக்காதவர்களை நாம் வரவேற்கப் போவதில்லை எனவும் சார்கோசி தெரிவித்துள்ளார். சார்கோசி இஸ்லாமிய எதிர்ப்புக்கு பேர் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘‘ஷெய்க் கர்ளாவியிடம் இராஜதந்திர கடவுச் சீட்டு உள்ளது. அவருக்கு வீஸா அவசியமில்லை. எனினும், அவர் பிரான்ஸினுள் நுழைவதை தடுக்கும் வகையில் நாம் நடவடிகை எடுப்போம் என சார்கோசியின் விசேட ஆலோசகர் குவைனோ தெரிவித்துள்ளார்.
அல் ஜெஸீரா இணையதளத்தில் ஷரீஆவும் வாழ்வும் என்ற பிரபல்யமிக்க வாராந்த நிகழ்ச்சியை கர்ளாவி நடத்தி வருகிறார். அத்துடன் தூனிஷியா, எகிப்து, லிபியா உள்ளிட்ட பல நாடுகளில் ஏற்பட்ட எழுச்சியை அவர் பலமாக ஆதரித்தார். அத்துடன் சிரிய எதிரணியினரின் நிதி திரட்டல் நடவடிக்கையையும் அவர் ஆரம்பித்து வைத்தார்.
அறபுப் வசந்தத்தை தீவிரமாக ஆதரிப்பதால் கர்ளாவி பலரது எதிர்ப்பை சம்பாதித்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets