பெங்களூர்:வடக்கு கர்நாடகாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டமான பட்கலில் டன் கணக்கில் ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதாக அப்பட்டமான பொய் செய்தியை வெளியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா, இச்செய்தி பொய் என நிரூபணமானவுடன் சிறியதாக விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 23-ஆம் தேதி Delhi cops hunt for huge RDX stockpile in Bhatkal(பட்கலில் ஆர்.டி.எக்ஸ் குவியலை தேடும் வேட்டையில் டெல்லி போலீஸ்) என்ற தலைப்பில் மிகவும் முக்கியத்துவம் அளித்து ஒரு செய்தியை வெளியிட்டது. போலீஸ் வட்டாரங்களை இச்செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது.
முக்கிய தென்னிந்திய நகரங்களை குண்டுவெடிப்புகள் மூலம் எரித்து சாம்பலாக்க போகும் ஆர்.டி.எக்ஸ் குவியல் பட்கலில் ஏதோ ஒரு வீட்டில் பாதுகாத்து வைக்கப்பட்டிருப்பதாக அந்த பரபரப்பு செய்தி கூறியது.
பெங்களூரில் தீவிரவாத எதிர்ப்பு படையும், டெல்லி போலீஸில் சிறப்பு படையும் வீட்டை கண்டுபிடிக்க பட்கலுக்கு வருகைத் தந்துள்ளதாம். பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான தடியன்ற வீடு நஸீரும், டெல்லியில் உள்ள மூன்று போராளிகளுடன் போலீஸ் கூட்டுப்படை ஆர்.டி.எக்ஸ் வேட்டைக்கு வந்துள்ளதாம்.
நஸீரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த தேடுதல் வேட்டைக்கு போலீஸ் கூட்டுப்படை கிளம்பியதாம். ஆனால், வீட்டை கண்டுபிடிக்க முடியாததால் நஸீர் கூறியதன் அடிப்படையில் டெல்லியில் இருந்து பெங்களூருக்கு வந்த போலீஸ் திரும்பிச் சென்றதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி கூறுகிறது.
வெடிப்பொருளை எடுக்க இரவு நேரத்தில் வந்ததால் பகலில் வீட்டை அடையாளம் காணமுடியவில்லை என்று நஸீர் கூறினாராம்.
ஆனால், வீட்டை கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், சாலை வழியாகவோ ரெயில் வழியாகவோ இவ்வளவு தூரம் ஆர்.டி.எக்ஸ் கொண்டுவர வழி இல்லை என்று ராஜீவ் கல்கோட் பெயரில் எழுதப்பட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி கட்டுரை கூறுகிறது. பட்கலில் ஆர்.டி.எக்ஸை கண்டிபிடிக்கும் முன்னரே, பட்கல் ஆர்.டி.எக்ஸுடன் தொடர்பிருக்கிறதா என்பதை ஆராய டெல்லி உயர்நீதிமன்றம், ஜெர்மன் பேக்கரி ஆகிய இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் உபயோகித்த வெடிப்பொருட்களுடன் போலீஸ் ஒப்பிட்டு பார்த்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தியில் கூறியிருப்பதுதான் மிகப்பெரிய ஜோக். ஆர்.டி.எக்ஸ் பதுக்கி வைத்திருக்கும் வீட்டை கண்டுபிடிக்காமலேயே எவ்வாறு ஒப்பீடுச் செய்யமுடியும்.
பட்கலில் வாழும் மக்களை பீதி மற்றும் சந்தேகத்தின் நிழலில் நிறுத்துவதை நோக்கமாக கொண்டு வெளியிடப்பட்ட இச்செய்தியை மறுநாள் இதர பத்திரிகைகளும் வெளியிட்டன.
ஆனால், மார்ச் 25-ஆம் தேதி வார்த்தாபாரதி என்ற கன்னட நாளிதழ், மேற்கண்ட செய்தியை மறுத்தி செய்தி வெளியிட்டதை தொடர்ந்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பொய் அம்பலமானது. வடக்கு கர்நாடகா போலீஸ் சூப்பிரண்ட் உள்ளிட்ட மூத்த போலீஸ் அதிகாரிகளை மேற்கோள்காட்டி வார்த்தா பாரதி செய்தி வெளியிட்டது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தியை முற்றிலும் மறுத்த எஸ்.பி, அபத்தமான செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகளை கடுமையாக விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து டைம்ஸ் ஆஃப் இந்தியா சிறியதொரு விளக்கத்தை அதுவும் மூன்றாம் பக்கத்தில் ஒரே பத்தியில் வெளியிட்டுள்ளது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் உ.பியில் ஆஸம்கர், மஹராஷ்ட்ராவின் மலேகான், கேரளாவில் மலப்புறம், தமிழகத்தில் கோவை மற்றும் மேலப்பாளையம் ஆகியவற்றை தீவிரவாதிகளின் மையங்களாக சித்தரிக்கும் சில பத்திரிகைகள் தற்பொழுது பட்கலையும் இந்த பட்டியலில் சேர்த்துள்ளது மேற்கண்ட செய்தியின் மூலம் தெரியவந்துள்ளது.to thoothuonline
No comments:
Post a Comment