ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள பிரேணையை முறியடிப்பதற்காக இலங்கை பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபைத் தலைவர் றிஸ்வி முப்தி மற்றும் கலாநிதி அகார் முஹம்மத் ஆகியோர் ஜெனீவா வந்தடைந்தனர்.
றிஸ்வி முப்தி மற்றும் அகார் முஹம்மத் ஆகியோர் முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து அமெரிக்கா கொண்டு வந்துள்ள பிரேணை குறித்து எடுத்துக்கூறி, இலங்கைக்கு ஆதரவு திரட்டுப்பணியில் ஈடுபடுவர்கள் என்றும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
அத்துடன் றிஸ்வி முப்தி, மற்றும் அகார் முஹம்மட் ஆகியோர் ஜெனீவா வந்தடைந்தவுடனேயே அவர்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் சர்வதேச பிரதிநிதிகளை சந்தித்து முக்கிய பிரச்சாரங்களை ஆரம்பித்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.to qahtan
No comments:
Post a Comment