Facebook Twitter RSS

Saturday, December 29, 2012

மூளை செத்துப் போன கூகுள் தலைமுறை.. கண்டுபிடிப்பாளர் பெய்லிஸ் வருத்தம் !



லண்டன்: இன்றைய குழந்தைகளை இன்டர்நெட், குறிப்பாக கூகுள் மூளை வறட்சியுடையவர்களாக மாற்றி விட்டது. இது பெரும் வருத்தமாகவும் வேதனையாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார் பிரபல இங்கிலாந்து கண்டுபிடிப்பாளர் டிரெவர் பெய்லிஸ். 75வயதான பெய்லிஸ் பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். அதில் முக்கியமானது வைன்ட்அப் ரேடியோ. அவர் இன்றையகுழந்தைகளின் நிலை குறித்து ஆதங்கத்துடன் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,இன்றைய குழந்தைகள் செயல்திறன் பயிற்சியும், திறமையும் அற்றவர்களாக வளர்கின்றனர். எதையும் யோசித்துச் செய்யும் மன நிலையில் அவர்கள் இல்லை. இன்டர்நெட்டையே முழுமையாக சார்ந்திருக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

 குறிப்பாக கூகுளுக்கு அடிமையாகி விட்டனர். கூகுள் மூலம்தான் எதையும் தேடும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது அவர்களது மூளை வளர்ச்சிக்கு பெரும் குந்தகமாக அமையும், மூளை வறட்சிக்கு வித்திடும். குழந்தைகள் எதையும் சிந்தித்து செயல்பட வேண்டும். அதற்கேற்ப அவர்களைப் பழக்க வேண்டும். மொபைல் போன், கம்ப்யூட்டர் என்று எதற்கெடுத்தாலும் அதற்கு அடிமையாகியிருக்க கூடாது. ஆனால் இன்றுள்ள குழந்தைகள் அப்படியா இருக்கிறார்கள். அவர்களை நினைத்தாலே எதிர்காலத்தை நினைத்துப் பயமாக இருக்கிறது என்றார் பெய்லிஸ்.

இஸ்ரேல் இவ்வாண்டு கைது செய்த ஃபலஸ்தீன் குழந்தைகளின் எண்ணிக்கை – 900 !



டெல் அவீவ்:இஸ்ரேல் ராணுவம் இவ்வாண்டு 900 ஃபலஸ்தீன் சிறார்களை கைது செய்துள்ளதாக ஃபலஸ்தீன் சிறைக்கைதிகளின் விவகாரங்களுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட சிறார்கள் 700 பேர் ஆவர். ஃபலஸ்தீன் சிறார்களை இஸ்ரேல் ராணுவம் கொடூரமாக சித்திரவதைச் செய்வதாக அறிக்கை கூறுகிறது. கையும், காலும் கட்டி பல மணிநேரம் சிறையில் விசாரிக்கப்படுவது வழக்கமாகும். குற்றங்களை ஒப்புக்கொள்வதற்காக இஸ்ரேல் ராணுவம்
கொடூரமாக சித்திரவதைச் செய்கிறது. சில சிறார்களை அதிக நேரம் மழையில் நிறுத்துவார்கள். விடுதலையாகும் பெரும்பாலான குழந்தைகளுக்கு மனநோய் பீடிக்கப்பட்டுள்ளது. சிறையில் பாதிக்கப்படும் சிறார்களுக்கு மருத்துவ சிகிட்சை அளிப்பதையும் இஸ்ரேல் ராணுவம் அனுமதிப்பதில்லை.
பல குழந்தைகளை அவர்களது உறவினர்கள் சந்திப்பதும் மறுக்கப்படுகிறது. பல சிறார்களும் சக கைதிகளால் பாலியல் ரீதியாக சித்திரவதைச் செய்யப்படுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது.
குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டமும், சர்வதேச சட்டங்களையும் மீறித்தான் இஸ்ரேல் இத்தகைய காரியங்களை புரிவதாக ஃபலஸ்தீன் அமைச்சர் ஈஸா கராகியா தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் புகார் அளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக அவர் கூறினார். சர்வதேச அளவில் குழந்தைகளுக்கு அளிக்கும் உரிமைகளும், பாதுகாப்பும் ஃபலஸ்தீன் குழந்தைகளுக்கு வழங்க முடியாது என்று அண்மையில் இஸ்ரேல் திமிராக கூறியிருந்தது.

தமிழகத்தில் “ஸ்மார்ட்” ரேஷன் கார்டு அறிமுகம் !



சென்னை: தமிழகத்தில் தற்போது, புழக்கத்தில் உள்ள, குடும்ப அட்டைகளை அடுத்த 2014ம் ஆண்டு வரை நீட்டித்து, அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் வரும் 2015ம் ஆண்டில் "ஸ்மார்ட்” குடும்ப அட்டையை பொது மக்களின் புழக்கத்துக்கு கொண்டு வர உள்ளது. தமிழகத்தில், தற்போது, புழக்கத்தில் இருந்து வரும் குடும்ப அட்டைகளை 2011 மற்றும் 12ம் ஆண்டுகளுக்கான, கூடுதலாக, உள்தாள் இணைக்கப்பட்டு, கார்டுதாரர்களுக்கு, பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த உள்தாள்களும், இந்த டிசம்பர் மாதத்துடன் முடிவதால் ஜனவரி, 1 முதல் குடும்ப அட்டைகளில்  புதிதாக உள்தாள்கள் இணைக்கப்பட வேண்டும். "தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப
அட்டைகளின் செல்லத்தக்க காலம், 2013 ஜன., 1ம் தேதியில் இருந்து, டிச., 31 வரை நீட்டிக்கப்படுகிறது' என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்தாட்களை அச்சடித்து, சம்பந்தப்பட்ட நியாய விலை கடைகளில் வினியோகித்து, அட்டைகளில் ஒட்டும் பணி அடுத்த, இரண்டு மாதங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்ப அட்டைகளின்  செல்லத்தக்க காலம், ஓராண்டுக்கு, அதிகாரப்பூர்வமாக நீட்டிக்கப்பட்டாலும், அடுத்த, இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்தே, உள்தாள்களை வழங்க, அரசு, முடிவெடுத்துள்ளது. தற்போது, அச்சிட உள்ள, உட்தாள்கள், 2013 மற்றும் 2014ம் ஆண்டுக்கு பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என, எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குனருக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது. இனி புதிதாக குடும்ப அட்டை வழங்கப்படும்போது, அது மின்னணு தகவல்கள் அடங்கியதாகவே இருக்கும். தேசிய மக்கள் தொகை தகவல் தொகுப்பின் அடிப்படையில், கண் கருவிழி, கைவிரல் ரேகை பதிவு கொண்ட, ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்க, அரசு திட்டமிட்டுள்ளது. என உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் தமிழகம் முழுவதும் இதற்காக கண் கருவிழி மற்றும் விரல் ரேகை பதிவுப் பணி நடந்து வருகிறது. அடுத்த ஓராண்டில் முழுமையான கணக்கெடுப்புப் பணி முடிந்து, தகவல் தொகுப்பை பெற்று அதற்கு, பின் தான், ஸ்மாட் கார்டு, தயாரிப்பு பணிகளை துவங்க முடியும். தமிழகத்தில் 2015ல் ஸ்மார்ட் குடும்ப அட்டை புழக்கத்துக்கு வரத்தொடங்கும். அதற்கு முன், முதல் கட்டமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில், பரீட்சார்த்தமான முறையில், ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்குவதற்கான, ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்றும் அவர் கூறினார்.

புதிய அரசியல் சாசனத்தில் முர்ஸி கையெழுத்திட்டார் !



கெய்ரோ:மக்கள் விருப்ப வாக்கெடுப்பில் அங்கீகரிக்கப்பட்ட புதிய அரசியல் சாசனத்தில் எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி கையெழுத்திட்டார். தேசம் சந்திக்கும் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அறிவித்த முர்ஸி, எகிப்தின் பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்துவதில் இனி கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்தார். கடுமையான செலவுகளை குறைக்கும் நடவடிக்கையை விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் சூசகமாக
தெரிவித்தார். 2 கட்டங்களாக நடந்த மக்கள் விருப்ப வாக்கெடுப்பில் 63.8 சதவீத வாக்காளர்கள் அரசியல் சாசனத்தை ஆதரித்து வாக்களித்ததாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. 2 மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும்.
புதிய அரசியல் சாசனத்தின் கீழ் பாராளுமன்றத்தின் துணை அவையான ஷூரா கவுன்சில் நேற்று கூடியது. தேர்தல் நடக்கும் வரை ஷூரா கவுன்சிலுக்கு சட்டமியற்றும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், அரசியல் சாசனத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து எதிர்கட்சியினர் வாபஸ் பெற்றுள்ளனர்.
செலவு சுருக்கும் நடவடிக்கைகளை அறிவிப்பதற்கு முன்னோடியாக தொழிலதிபர்கள், தொழிலாளர் யூனியன்கள், அரசு சாரா அமைப்புகள் ஆகியோருடன் அரசு நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. நாணய கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 10 ஆயிரம் டாலருக்கு அதிகமாக நாட்டை விட்டு வெளியேறவோ, நாட்டிற்கு உள்ளேயோ வர அனுமதி கிடையாது.
அனைத்து பிரிவு மக்களும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்றத்தின் பாதையில் அழைத்து செல்ல வேண்டும் என்று இஃவான் முஸ்லிமீன் தலைவர் முஹம்மது பதாஇ கோரிக்கைவிடுத்துள்ளார்.

ரத்தன் டாடா ஓய்வு. டாட்டா குழுமத்தின் புதிய தலைவராகிறார் சைரஸ் மிஸ்திரி !



ரத்தன் டாட்டா இன்று ஓய்வு பெறுவதையடுத்து, டாட்டா குழுமத்தின் புதிய தலைவராக சைரஸ் மிஸ்திரி பொறுப்பேற்கிறார்.இந்தியாவின் மிகப்பழமையான வணிக சாம்ராஜ்யங்களில் ஒன்று டாட்டா குழுமம் ஆகும். இன்று 10,000 கோடி டாலர் (ரூ.4.76 லட்சம் கோடி) வருவாய் ஈட்டும் இக்குழுமத்தை ரத்தன் டாட்டா கடந்த 50 ஆண்டுகளாக திறம்பட நிர்வகித்து வந்தார். இன்று அவருக்கு 75 வயது பூர்த்தியாகும் நிலையில், அடுத்த தலைவர் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட
சைரஸ் மிஸ்திரியிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு விடை பெறுகிறார். 44 வயது இளைஞரான சைரஸ் மிஸ்திரி பழம்பெரும் டாட்டா குழுமத்தின் தலைவராகிறார். இன்று புதிய தலைவராகும் மிஸ்திரி, ஷாபூர்ஜி பலோன்ஜி குழுமத்தை சேர்ந்தவர். பலோன்ஜி குழுமம் டாட்டா குழும நிறுவனங்களின் கட்டுப்பாட்டு அமைப்பான டாட்டா சன்ஸ் நிறுவனத்தில் 18 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது. ஐந்து பேர் கொண்ட தேர்வுக்குழு ஒன்றால் மிஸ்திரி ஏற்கனவே டாட்டா குழுமத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
ரத்தன் டாட்டாவை, ஜே.ஆர்.டீ. டாட்டா 1991–ஆம் ஆண்டில் இக்குழுமத்தின் தலைவர் ஆக்கினார். அவ்வாண்டில் இக்குழுமத்தின் ஆண்டு வருவாய் ரூ.10 ஆயிரம் கோடி அளவிற்கே இருந்தது. இது ஏறத்தாழ 20 ஆண்டுகளில், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கோடி ஈட்டும் சாம்ராஜ்யமாக உருவெடுத்தது. டாட்டா குழுமத்தை பன்னாட்டு நிறுவனமாக உருவாக்க வேண்டும் என்பதே அவரது வண்ணக் கனவாக இருந்தது.
மைல்கல் சாதனைகள்
இந்த வகையில் இங்கிலாந்து நாட்டில் கோரஸ் உருக்கு நிறுவனத்தை டாட்டா ஸ்டீல் வாங்கியது, அந்நாட்டின் சொகுசு கார் பிராண்டுகளா ஜகுவார் மற்றும் லேண்டு ரோவரை டாட்டா மோட்டார்ஸ் கையகப்படுத்தியது, மேலும் டாட்டா டீ நிறுவனம் அங்கு டெட்லி பிராண்டை கையகப்படுத்தியது போன்றவை ரத்தன் டாட்டாவின் மைல்கல் சாதனைகளாகஅமைந்தன

மீண்டும் டீசல், மண்ணெண்ணெய் விலை ரூ. 10 உயரும்?



புதுடெல்லி: டீசல் விலையை மாதம் ஒரு ரூபாய் வீதம் அடுத்த 10 மாதத்தில் ரூ.10 வரை உயர்த்தலாம் என பெட்ரோலிய அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் பெட்ரோலிய நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், டீசல், மண்ணெண்ணெய் விலை நிர்ணயம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவை இரண்டும் மானியவிலையில் விற்கப்படுவதால், அரசுக்கு கடும் நிதி தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் ரூ.1,60,000 கோடி பற்றாக்குறை ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.டீசல் விலையை லிட்டருக்கு மாதம்தோறும் ரூ.1 என்ற வீதத்தில், அடுத்த 10 மாதங்களுக்குள் ரூ.10 உயர்த்தலாம் என்றும், இதேபோல் அடுத்த 2 ஆண்டுகளுக்கு மண்ணெண்ணெய் விலையை இதே அளவுக்கு உயர்த்தலாம் என்றும் பெட்ரோலியத் துறையால் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, பெட்ரோலியத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"எண்ணெய் நிறுவனங்களுக்கு டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.9.28 நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே, டீசல் விலையை மாதம் ரூ.1 வீதம் 10 மாதத்தில் 10 ரூபாய் உயர்த்தும்போது நஷ்டம் முழுவதும் சமாளிக்கப்படும். 

மண்ணெண்ணெய்க்கும் 2 ஆண்டு காலத்தில் 24 மாதத்தத்துக்கு லிட்டருக்கு சுமார் 42 பைசா என்ற அளவில் உயர்த்துவதன் மூலம் ரூ.10 கூடுதலாக கிடைக்கும். இதனால் மண்ணெண்ணெய் விற்பனையில் ஏற்பட்டு வரும் நஷ்டத்தையும் சமாளிக்க முடியும். விலை உயர்வு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தால் விலை உயர்வு அமலுக்கு வரும்" என்றார்.

இலங்கை முஸ்லிம்களை அச்சுறுத்துகிறதா? - ஓர் ஆரம்ப அறிமுகம்



  by: Abu Sayyaf

Bodu Bala Sena (බොදු බල සේනා "Buddhist Power Force"). இலங்கையின் இன்றைய பேசுபொருள். சிங்கள வீர விதான, ஜாதிக ஹெல உருமய, போன்ற உச்சரிப்புகளிற்கும் அப்பால் செயற்படும், இளம் பௌத்தர்களால் வெகுவாக உள்வாங்கப்படும் அமைப்பு. வெறுமனே இனவாதம் மட்டும் பேசாமல் தர்க்கரீதியாகவும், விஞ்ஞானரீதியாகவும், இலங்கை பௌத்த மக்களை தன்வசப்படுத்துவதற்காக இயங்கும் ஒரு வலைப்பின்னலே Bodu Bala Sena. காலத்திற்கு காலம் இனவாதம் பேசும் பௌத்த அமைப்புகளிற்கு மத்தியில் இதன் செயல் வேகமும், விவேகமும் புருவங்களை உயர்த்த வைக்கின்றன.


R.S.S.ன் கோல்வாக்கர், ஹெக்டேயர் போன்றவர்கள் பேசும் தத்துவார்த்த சித்தாந்தம் சார்ந்த சாயல் Bodu Bala Sena விடம் காணப்படுவது ஒரு முக்கிய விடயமாகும். “அரசியலை இந்து மயப்படுத்து, இந்து மதத்தை ஆயுதமயப்படுத்து” என்பது சுவாஸ்திகா கோஷம். “விஷ்வ பாரத்” கனவினை நனவாக மாற்ற அது அவர்களது அடிப்படை இலக்காக இருந்தது.  ஆனால் இந்நாள் வரை அவர்களிற்கு அந்த இலக்கை அடைய முடியவில்லை என்பது வேறு விடயம். R.S.S.ன் சித்தாந்த முழக்கம்  Bala Sena வினால் சொல்லப்படவில்லை. ஏனென்றால் 1978 களில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் அரசியல் எப்போதோ பௌத்தமயப்படுத்தப்பட்டு விட்டது. மூன்று தசாப்த புலி பயங்கரவாதிகளுடனான சண்டையில் இராணுவ சிந்தனைகள் நாட்டில் வேடூண்டி விட்டன.  அதனால் அவர்கள் அடுத்த கட்டம் நோக்கி நகரமுற்பட்டுள்ளார்களா? என்ற கேள்வி உருவாவது நியாயமானதே. 

Bodu Bala Sena சிங்கள பௌத்த மக்களின் மதம் சார்ந்த தத்துவங்களை மேம்படுத்தவும், கலாச்சார ரீதியாக அவர்களை ஒன்றினைக்கவும் உருவாக்கப்பட்ட அமைப்பாக தன்னை சொல்லிக்கொள்கிறது. அது தொடர்பான ஆக்கபூர்வமான செயற்பாடுகளிலும் ஈடுபடுகிறது. தன்னை அரசியல் சார்பற்ற ஒரு அமைப்பாக பௌத்த மக்கள் முன் காண்பிப்பதில் கரிசணையுடன் செயற்படுகிறது. 

இந்திய கலைஞர்களிற்கு எதிரான உண்ணாவிரத போராட்டம், இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் இந்தியாவிற்கு எதிரான ஐ.நா.விற்கான முறைப்பாடு, கனேடிய பொங்கு தமிழிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கைகள், இலங்கை கண்காணிப்பு குழுவிற்கு எதிரான அறிக்கைகள் என அது தனது ஆரம்பகால நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது.  July 2012 இற்கு பின்னர் அதன் செயற்களம் மேலும் அகலமானது. சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை பொளத்தர்களிற்கான மத சுதந்திரம் பற்றி அது பேசியது. Pereralage Thungasiri என்ற பௌத்த சிங்களவர், பொளத்த வழிபாடுகளில் ஈடுபட்ட போது அவரது தொழில் வழங்குனரால் பொலிசாரிடம் பிடித்து கொடுக்கப்பட்டது பற்றிய செய்தியை மையமாக வைத்தே இந்த பிரச்சாரத்தை அது முன்னெடுத்தது. பின்னர் இலங்கை தூதரம் அவ்வாறான ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று அறிவித்தும் இருந்தது.  BoBala Sena வினது செயளாலர், Ven Galaboda Aththe Gnanasara Thera அன்று “ Pereralage Thungasiri சவுதியில் சிரச்சேதம் செய்யப்படுவாரா” என்று கேள்வி எழுப்பியிருந்தார். சவுதி அரேபியாவில் சிங்கள பெண்கள் கட்டாயமாக அபாயா எனும் உடை அணிய வேண்டிய நிர்ப்பந்தகங்கள் பற்றியும், குற்றங்களிற்காக சிரச்சேதம் செய்யப்பட்ட இலங்கையரின் கொலைகள் பற்றியும் பொது பல சேனா கேள்வியெழுப்பியிருந்தது. 

Photoஇலங்கையில் தொடராக முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகள், மஸ்ஜித்களிற்கு எதிரான போராட்டங்கள், முஸ்லிம்களை விமர்சித்து செய்யப்படும் பரப்புரை பிரச்சாரங்கள், ஊடகங்களில் குறிப்பாக இணையத்தளங்களில் எழுதப்படும் விடயங்கள் என்பன நாட்டில் ஒரு இன தளம்பல் நிலையை கொண்டுவரும் அபாயங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் Bodu Bala Sena தான் திட்டமிட்டு செய்கிறது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளனவா என்பது ஆரயாயப்பட வேண்டிய விடயமாகும். முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அனைத்து இனவாத செயற்பாடுகளிற்கும் Bodu Bala Sena வின் மேல் குற்றம் சாட்ட முடியாது என்பதும் இங்கு கருத்தில் கொள்ளல் வேண்டும். அதே வேளை இலங்கையின் எதிர்க்கட்சியினர் உட்பட பலரும் மேலோங்கும் தீவிரவாதம் தொடர்பில் தங்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். அதனது அபாயம் குறித்து அரசை எச்சரித்துள்ளனர். உரிய நேரத்தில் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசை வலியுறுத்தியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மகன் சஜித் பிரேமதாஸ இது குறித்து பல அவதானங்களை முன்வைத்துள்ளார். 

சிங்கள பேரினவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளும் அராஜக நடவடிக்கைகளை அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஏன் எனக் கேள்வியெழுப்பியுள்ள தமிழ் முஸ்லிம் தேசிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலிமுஸ்லிம்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டும் என்பதையா அரசாங்கம் எதிர்பார்க்கின்றது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். (lankamuslim.org/2012/12/26/ஆயுதம்-ஏந்தவேண்டும்-என்ப/l)


Bodu Bala Sena என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பேஸ்புக்கில் இலங்கை முஸ்லிம்கள் மீது மிகவும் தவறான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இந்த செய்திகளை அறியும் அப்பாவி பௌத்த சிங்கள மக்கள் தவறான சிந்தனைகளை நோக்கி வழிநடாத்ப்படுவது கவலைக்குரிய விடயமாகும்.. இந்த தீங்கான தொடர் பிரச்சாரங்களினால் நாட்டில் இனவன்முறை உருவாவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. 

முஸ்லிம்களின் பொருளாதாரம் பற்றிய குற்றச்சாட்டுக்கள், இஸ்லாமாபோபியா எனும் இஸ்லாத்தின் வளற்ச்சி குறித்த அச்சம், முஸ்லிம்களின் கலாச்சார பாரம்பரியங்கள் தொடர்பிலான பொறாமை, இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்வு என பல வடிவங்களில் மதவாதமும் இனவாதமும் இலங்கை முஸ்லிம்களை இலக்கு வைத்துள்ளன. 

எம்மை சுற்றி நடக்கும் விடயங்களில் எந்த விழிப்புணர்வும் இல்லாத மக்களாக இலங்கை முஸ்லிம்கள் இருக்கிறார்கள். வெறுமனே “நாட்டில் இனவாதம் கூடி விட்டது” என்று புலம்புவதை தவிர வேறு எதுவுமே இவர்களிற்கு தெரிவதில்லை. இந்த மதவாத, இனவாத சக்திகளின் சூழ்ச்சிகரமான நடவடிக்கைகளிற்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றினைவது அவசியம். தங்களிற்குள் உள்ள பேதங்களை மறந்து செயற்பட வேண்டிய ஒரு காலமிது. முஸ்லிம் அரசியல்,சமூகவியல் அமைப்புக்கள் இந்த விவகாரங்கள் தொடர்பில் ஒரு குடையில் ஐக்கியப்படல் வேண்டும். இந்த நாட்டில் உள்ள சட்டங்களின் ஊடாக இதற்கான மாற்று வழிகளை நாம் ஏற்படுத்தல் வேண்டும். வெளிப்படையான, பகிரங்கமான முஸ்லிம்களிற்கு எதிரான செயற்பாடுகளிற்கு எதிராக நாம் நீதி துறையை நாடுவதில்லை. மாறாக மாற்று இனத்தையும், அரசையும் ஏசுகின்றோம். இந்த சிந்தனை தவறானது. 

சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் அவர்கள் மேல் தாக்கம் செலுத்தும் இனவாத, மதவாத நடைமுறைகளிற்கு எதிராக ஜனநாயகரீதியிலான மாற்று தெரிவுகள் என்ன என்பது தொடர்பான கல்வி இலங்கை முஸ்லிம்களிற்கு அவசியம். இந்த அமைப்புக்கள் தொடர்பான ஆய்வுகள், அவர்களின் பின்புலங்கள், அவர்களது உண்மையான இலக்கு என்ன என்பது போன்ற ஆய்வுகள் தவிர்க்க முடியாதது. அதே வேளை இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான பதிவுகளும் அவசியமானவை. இவென்ட் டயறி எனும் இந்த செயற்திட்டம் உலகிற்கு இலங்கை முஸ்லிம்கள் மீதான அவ்வப்போது நிகழ்ந்த, நிகழ்த்தப்பட்ட விடயங்கள் தொடர்பான செய்திகளை தேட பெரிதும் உதவி புரியும். 

இவர்களை பற்றி இவர்களது வார்த்தைகள் மூலமாக அறிந்து கொள்வதானால் கீழ் வரும் அவர்களது பிரச்சார தளங்களிற்கு சென்று பாருங்கள்..

Bodu Bala Sena வினது பேஸ்புக் முகவரி:    https://www.facebook.com/pages/Bodu-Bala-Sena/102787816538523?fref=ts 
Bodu Bala Sena வினது இணைய முகவரி:   http://bodubalasena.org

Bodu Bala Sena வினது யூடியுப் முகவரி:     http://www.youtube.com/user/bodubalasena

2013 முதல் நேட்டோவின் இராணுவ பங்காளியாக இஸ்ரேல் - அந்தரத்தில் துருக்கி!!



                

by: Abu Sayyaf    ஜெரூஸலம் போஸ்ட்டின் தலைப்பு செய்தியே இன்று உலக செய்தியாக மாறியுள்ளது. கைபரை கைப்பற்றிய் சந்தோஷம் போல யூத உடகங்கள் கடந்த இருநாட்களாக ஆர்ப்பரிக்கின்றன. என்ன அந்த செய்தி?. “2013ம் ஆண்டு முதல் இஸ்ரேல் நேட்டோவின் கண்காணிப்பு, பாதுகாப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்” என நேட்டோ அங்கீகாரம் வழங்கிய செய்தியே அது. யூத பூதத்தின் ஸியோனிஸ வெறிப்பற்களை இப்போது ஆழமாகவும் அகலமாகவும் பதிக்கலாம். முழு மத்திய கிழக்கிலும். மத்திய ஆசியாவிலும். வட ஆபிரிக்காவிலும். எவ்வளவு சந்தோஷகரமான செய்தி இது. யூத லொபிகள் நியூயோர்க்கில் சந்தோஷ நடனம் ஆடுவது இதனால் தான். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் முதலீடு செய்ததற்கான இலாபம் இப்போது அவர்களிற்கு பங்கிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி இன்னொரு தேசத்திற்கு கசப்பானது. வெறுப்பானது. யாருக்கு?. துருக்கி இதனை கவலையுடன் பார்க்கிறது. நேட்டோவின் இன்னொரு பங்காளி தேசம். உலக முஸ்லிம்களின் கோட்பாதராக தன்னை பரிணாமப்படுத்தி வரும் இந்த வேளையில் இப்படியொரு இடி இறங்கியிருக்கிறது துருக்கிக்கு. சிரியாவில் இஸ்ரேலை முந்திக்கொண்டு ஆட்சி மாற்றத்தை தான் விரும்பியவாறு ஏற்படுத்த அனைத்து பிரயத்னங்களும் இந்த அறிவிப்பால் மண்கவ்வியுள்ளன.

நேட்டோவின் இன்னொரு அங்கத்தவ தேசமான துருக்கி இஸ்ரேலின் இராணுவ பிரசன்னம் நேட்டோவில் உருவாகியுள்ளதை நேரடியாகவே விமர்சனம் செய்துள்ளது. ஆனால் நேட்டோவின் மத்திய குழு துருக்கியை உறுப்பு நாடு என்ற வகையில் இஸ்ரேலுடன் நெகிழ்ச்சிப்போக்கு அரசியலை மேற்கொள்ளுமாறும், அதுவே நேட்டோவின் பலம் என்றும், முரண்பட்ட செயற்பாடுகள், வெளிப்பாடுகளினால் நேட்டோவின் பலம் பலவீனப்பட்டு விடல் கூடாது என்று எச்சரி்க்கை கலந்த வார்த்தைகள் அடங்கிய தூதினை அங்காராவிற்கு அனுப்பியுள்ளது. இப்போது துருக்கிக்கு நேட்டோவா? அல்லது வெளியேறுவதா? என்ற சத்திய சோதனை காலம். இதில் எந்த முடிவை நோக்கியும் துருக்கி செல்லலாம். சில வேளைகளில் கேம்ப் டேவிட்டில் எகிப்து அடித்த பல்டி போல ஒரு அந்தர் பல்டியை அடித்து நேட்டோவின் கட்டளைக்கு அடிபணியலாம். தாகூத்திய அரசியல் இதையெல்லாம் அனுமதிக்கும்.

இஸ்ரேல் நேட்டோவின் பங்காளியாக இருந்தாலும் இதுவரை காலமும் பயிற்ச்சிகள், ஒத்திகைகள், செமினார்கள், திட்டமிடல் வகுப்புக்கள் போன்ற அமர்வுகளிளேயே பங்கு பற்றியுள்ளது. 2013 முதல் இஸ்ரேல் நேட்டோவின் களங்களிற்கு தனது இராணுவத்தை அனுப்புவது என்பது பாரிய அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்தவல்லது. அமெரிக்காவின் நண்பர்களான சவுதி, குவைத், பஹ்ரைன், கட்டார்,  என யாரும் இதனை எதிர்க்கவில்லை. மௌனம் சம்மதம் என்பது போல் எதுவும் தெரியாதது போல் இருக்கின்றனர்.

யூத இராணுவ பூட்ஸ்கள் முஸ்லிம் தேசங்களின் வேலிகளின் ஓரம் நடைபயிலும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஐ.நா.வின் அங்கீகாரத்துடன் அமைதி காக்கும் படை என்ற பெயரில் இதனை அது செய்து முடிக்கும். மனிதாபிமான இராணுவ உதவிகள் என்ற பெயரில் இதனை அது செய்து முடிக்கும். அகண்ட யூத சாம்ராஜ்யத்திற்கான நகர்வுகளும், நவசிலுவை போரின் நகர்வுகளும் சமகாலத்தில் ஆரம்பமாகியுள்ளன. உலக அரசியலை பற்றிய நீண்ட கால தீர்மானிக்கப்பட்ட திட்டத்தின் ஒரு கட்டமே நேட்டோவில் இந்த இஸ்ரேலிய இராணுவ பிரசன்னம்.

நேட்டோவின் 28 நாடுகளும் வீட்டோ பவரை கொண்டுள்ளன. துருக்கிக்கு பற்றியட் ஏவுகணைகளை வழங்கிய அதே நேரம் இஸ்ரேலை நேட்டோவின் இராணுவ நாடாக அங்கீகரித்து அதிகாரமளித்த வேளையை அமெரிக்கா அழகாக செய்து முடித்துள்ளது. நக்குண்டார் நாவிழந்தார் என்ற தமிழ் பழமொழி துருக்கிக்கும் பொருந்தும் போலும்.

நேட்டோவின் பேச்சாளர் இது பற்றி குறிப்பிடுகையில் “மத்திய கிழக்கின் இரு பலமிக்க இராணுவங்கள் தேசங்கள் எம்முடன் இணைந்துள்ளன. இஸ்ரேலுடன் எமக்கு பல இராணுவ உறவுகள் உள்ளன. இதன் மூலம் அது மேலும் மேன்படும். எதிர் பயங்கரவாத தாக்குதல் முறைமை, சைபர் தாக்குதல் முறைமை, ஏவுகணை தொழில்நுட்ப விருத்தியும் தாக்குதல் முறைமையும் என பல பயன்பாடுகள் நேட்டோவை வலுப்படுத்தும். துருக்கி இதனை புரிந்து கொண்டுள்ளது என்று நம்புகிறோம். இஸ்ரேலுடன் தெளிவான உறவினை ஏற்படுத்தவதன் மூலம் துருக்கி தன்னை மேலும் பலப்படுத்திக்கொள்ளும்” என்றார்.

Matthew Mark Horn. “இஸ்ரேல் நேட்டோ திட்டத்திற்கான” பொருப்பாளர். பென்டகனின் முன்னாள் அதிகாரி. யூத காங்கிரஸினால் நிதியுதவி அளிக்கப்பட்டே இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டது. (இஸ்ரேலை முழு அளவிலான செயற்பாடுடைய நாடாக நேட்டோவினுள் உருவாக்கல்) அது இப்போது அவர்களிற்கு வெற்றியளித்துள்து. நீண்டகால ஸியோனிஸ கனவுகளை இந்த வாய்ப்பின் ஊடாக தங்களால் அடைந்து கொள்ள முடியும்  என்ற நம்பிக்கை அவர்களிற்கு. மத்தியூவ் ஹோர்ன் இது பற்றி குறிப்பிடுகையில் நான் எனது அசைன்மென்டை வெற்றிகரமாக முடித்து விட்டேன். அடுத்த கட்டம் இஸ்ரேலிய அரசியல் தலைவர்கள் கைகளில் இருக்கிறது. அவர்கள் நேட்டோவி்ன் தலைமையை கைப்பற்றுவதன் ஊடாக தங்கள் கனவுகளை நனவாக்க முடியும் என்று கூறியுள்ளார்.!!

தியேட்டர் ஹெஸலின் இஸ்ரேலை உருவாக்கிய திட்டத்திற்கு அடுத்த தரத்தில் மத்தியூவ் மார்க் ஹோர்னின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக சர்வதேச ஸியோன் மையம் ஆர்ஜன்டீனாவில் பிரகடனம் செய்துள்ளது. டெல்அவிவே முஸ்லிம் தேசங்களை நோக்கி திட்டமிடுகிறது என்று ஊற்று நோக்கிய எம்மை அதற்கும் அப்பால் பல திட்டமிடல்கள் உள்ளன என்பதனை இந்த நிகழ்வுகள் உணர்த்தி நிற்கின்றன. இன்னொன்றையும் கூட. அது துருக்கியின் துரோகம். அதனை இன்னொரு கட்டுரையில் பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ்..

'ஷாமும்' முன்னறிவிக்கப்பட்ட “பூமியே”



Foreign-backed militants operating in Syria (file photo)

1. சலமா பின் நுபைல் (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் அறிவிக்கிறார்கள் . ரசூல் (ஸல் ) அவர்கள் கூறினார்கள் ." மூமின்களின் சாம்ராஜியம் கட்டி எழுப்பப் படுவது ஷாமில் இருந்துதான் " (ஆதாரம் :- தபரானி )



2. ரசூல் (ஸல் ) சொல்லக் கேட்டதாக அலி (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் கூறுகின்றார்கள் 
அல் புதலாஉ (அப்தால்கள் ) என்பவர்கள் ஷாமிலேயே இருப்பார்கள் அவர்கள் நாற்பது பேர்களை கொண்டவர்கள் அவர்களில் ஒருவர் மரணித்து விட்டால் அந்த இடத்திற்கு வேறு ஒருவரை பகரமாக்குவான் . அவர்களுக்காகவே மழை பொழியும் , அவர்களுக்காகவே எதிரிகளுக்கெதிராக உதவி வழங்கப்படும் . அவர்கள் மூலமாகவே ஷாம் வாசிகளுக்குரிய வேதனை நீக்கப்படும் (ஆதாரம் :- அஹ்மத் )




இமாம் இப்னு தைமியா அவர்கள் கூறுகிறார்கள் :-
இங்கு இவர்களையே 'அல் அப்தால் ' என்று பேரறிஞ்சர்கள் கூறுவார்கள் .ஏனெனில் இவர்கள் நபிமார்களுக்கு பின் அவர்களது பணியை உண்மையாகவே நிறைவேற்ற வந்தவர்கள் . யதார்த்தம் புரியாது செயற்படக் கூடியவர்கள் அல்லர் . இவர்கள் ஒவ்வொருவரும் அறிவு , பேச்சாற்றல் ,மற்றும் இபாதத் ,சமயோசித ஆற்றல் என்பவற்றில் முழுமையானவர்கள் . நமார்களது பணியை மாற்றமில்லாத வகையில் அவர்களுக்கு பகரமாக செய்யும் ஆற்றல் மிக்கவர்கள் . இதன் காரணமாகவே அறிஞ்சர்கள் இவர்களையே " மறுமை வரை சத்தியத்தின் காவலர்களாக நின்று வெற்றி பெறும் கூட்டம் " எனக் கூறுகின்றார்கள் . (ஆதாரம் :- பதாவா இப்னு தைமியா )


பசர் அல் அசாத் எனும் கொடியவன் வீழ்த்தப் படுதல் மட்டுமே ஷாமின் கள நிலவரமல்ல , இஸ்லாத்தின் மீள்வருகை தொடர்பில் நபிமார்களின் பணியை தொடரக்கூடிய 'அல் அப்தால் ' களின் பாசறையும் ஷாம் தான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது . அங்கு நடப்பது சர்வ நிச்சயமாக கிலாபத்தின் மீள் வருகைக்கான போராட்டமே . 


டமஸ்கஸை நெருங்கி விட்டோம் இனி ....


அபூ ஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு ) அறிவிக்கிறார்கள் ரசூல் (ஸல் ) அவர்கள் கூறினார்கள் 
மிக உக்கிரமான இரத்தம் சிந்தும் போர் ஏற்படும் போது 'மவாளிகளில்' ஒரு படையணி ' டமஸ்கஸில் ' இருந்து புறப்படும் அவர்களே அரபிகளில் மிகச் சிறந்த குதிரை வீரர்கள் ஆவார்கள் , தேர்ச்சி பெற்ற யுத்த வீரர்களாகவும் இருப்பார்கள் . அவர்களைக் கொண்டே அல்லாஹ் இந்த மார்க்கத்தை பலமிக்கதாக்குவான் .(ஆதாரம் :- ஹாகிம் )

“சவுதி அரேபியாவை” துண்டாட முனையும் ஷியாக்கள் - கிழக்கு பிராந்தியத்தை வட்டமிடும் வல்லூறுகள்!



Saudi protesters face anti-riot police during a demonstration in Qatif, Eastern Province, Saudi Arabia. (File photo)

by: Abu Sayyaf    சவுதி அரேபியா. இஸ்லாத்தின் தாயகம். பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பிறந்த இடம். இஸ்லாம் உருவான இடம். முதல் முஸ்லிம் கிலாபா இயங்கிய இடம். புனித நகர் மக்கா அமைந்துள்ள இடம். நபியின் தோழர்களான ஸஹாபாக்கள் வாழ்ந்து மரணித்த இடம். இதை எழுதும் இந்த செக்கன் வரை இஸ்லாமிய தஃவாவிற்காக செல்வங்களை செலவழிக்கும் இடம். இப்படி எத்தனையோ பெருமைகளை தன்வசம் கொண்ட தேசம் சவுதி அரேபியா. அமீருல் முஃமினீன் எனும் இஸ்லாமிய தலைமையை புறந்தள்ளி அதிகாரமிக்க மன்னராட்சி என்பதே எப்போதும் பிரச்சனை தரும் விடயம். ஷேஹ் உஸாமா பின் லாதின் (ரஹ்) அவர்கள் இந்த மன்னராட்சியை எதிர்த்தே போராடினார்கள்.


இஸ்லாத்தின் இருப்பிடம் சவுதி என்பது இன்றைய முஸ்லிம்களின் உள்ளங்களில் எழுதப்படாத மானசீக வரிகள். இந்த தேசத்தை அமெரிக்கா தன் பிடியில் வைத்து கொண்டு அதன் வளங்களை தனது எண்ணை கம்பனிகள் மூலம் சுரண்டி வருவது வரலாறு. இந்த தேசத்தின் மதீனா வரை தனது எல்லைகளை அகட்ட வேண்டும் என்பது யூத தேசத்தின் கனவு. ஆனால் இதற்கெல்லாம் அப்பால் “ஈரான்” இந்த தேசத்தை சீரழிக்க வேண்டும் என்பதில் குறியாக செயற்படுகிறது. அதன் ஒரு நிகழ்வு அண்மையில் நிகழ்ந்து முடிந்துள்ளது. 

Saudi protesters hold an anti-regime demonstration in the country’s oil-rich Eastern Province. (File photo)சவுதி அரேபியாவின் எண்ணெய் வளமிக்க பிரதேசம் அதன் கிழக்கு பிராந்தியம். அதன் பொருளாதார இதயம் என்று கூட சொல்லலாம். இந்த மாகாணத்திலேயே தமாம், ஜுபைல், கொபார் போன்ற பிரபலமான நகரங்கள் உள்ளன. இங்கே தான் ஷியாக்களும் வசிக்கிறார்கள். இவர்கள் தமக்கென இரண்டு அரசியல் அமைப்புக்களை தம் வசம் கொண்டுள்ளார்கள். Islahiyyah (the Shirazis) மற்றையது Hezbollah Al-Hejaz (Saudi Hezbollah). இதில் ஹிஸ்புல்லா அல் ஹிஜாஸ் என்பது நேரடியான உறவுகளை இரகசியமான முறையில் ஈரானுடனும், லெபனானிய ஹிஸ்புல்லாக்களுடனும் பேணி வருகிறது. பஹ்ரைனில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் பின்புல இயங்கு தளமாக இதுவே அமைந்திருந்தது. 

Sheikh Hasan al-Saffar எனும் ஷியா மதகுருவினால் வெளியிடப்பட்ட நூலான  al-Ta‘addudiyya wa ‘l-hurriyya fi ‘l-islam (இஸ்லாத்தின் பன்முகத்தன்மையும் சுதந்திரங்களும்) என்பது ஷியா சுன்னி கூட்டிணைவு பற்றி பேசுகிறது. முரண்பாடுகளிற்கு மத்தியில் ஒற்றுமை காணல் எனும் கோஷத்தினை இவர்கள் உயர்த்தி பிடித்தாலும் இதன் பின்னால் மக்கா மதீனாவை கைப்பற்றும் கும்மின் பயங்கரவாதம் மறைந்து கிடக்கிறது இதில். 

அப்துல்லாஹ் பின் பாஸ் அவர்கள் ஷியாக்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சவுதி அரசை அவரது பத்வாக்கள் மூலமாக நிர்பந்தித்திருந்தார். அதே வேளையில் சவுதி உலமா கவுன்சிலின் அதி உயர் உறுப்பினரான அப்துர்ரஹ்மான் பின் ஜிப்ரின்ஷியாக்கள் மீதான கட்டற்ற படுகொலைகளை கண்டித்ததோடு அதனை நிறுத்துமாறு கோரியிருந்தார். இதனையும் அவர் தனது மார்க்க பத்வா ஊடாகவே வழங்கியிருந்தார். இரண்டாயிரமாம் ஆண்டகளிற்கு பின்னர் சவுதி அரசாங்கம் ஷியாக்கள் மீதான கொலைகளை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன் சில உரிமைகள் தொடர்பான விடயங்களிலும் நெகிழ்ச்சி போக்கை கடைப்பிடித்து வந்தது. 


Sheikh Tawfiq AlAmer
நேற்று முன்தினம் Qatif நகரில் திரண்ட ஷியாக்கள் ஒரு பேரணியாக நகரின் மையத்தை நோக்கி நகர்ந்தனர். பின்னர் அண்மையில் கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆண்டுகள் நாட்டைவிட்டு வெளியேற முடியாத தடை உத்தரவும் பெற்றவரான Sheikh Tawfiq AlAmer இனை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பரித்தனர். அநியாயமாக அவர் மீது சவுதி அரசாங்கம் போலி குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆரவாரித்தனர். பின்னர் அவர்கள் கோஷம் அரசியல் மாற்றம் பெற்றது. “சவுதி மன்னராட்சி ஒழிக” என கோஷமிட்டனர். ஜனநாயக சுதந்திர பாராளுமன்றம் தேவை என முழங்கினர். ஹிஜாஸ் கட்டுப்படாது என சத்தமிட்டனர். மேலும் கோஷத்தின் வாசகங்கள் வழுவடைந்தன. கிழக்கு பிராந்தியத்தை தனியாக பிரி என முங்கத் துவங்கினர். இறுதியில் இமாம் அலியையும், இமாம் ஹுஸைனையும் நினைவு கூர்ந்தனர்.

சவுதி அரேபிய கலகமடக்கும் பொலிஸாரின் இறுக்கமான செயல் நடவடிக்கைகள் காரணமாக இவர்கள் கலைக்கப்பட்டனர். இதனை ஒரு சாதாரண கலகமாகவோ, அல்லது ஒரு பிராந்திய மக்களின் உணர்வுகளின் எதிரொலியாகவோ பார்க்க முடியாது. உரிமை மறுப்புக்கள், நீதி தொடர்பில் முரண்பாடுகள், கட்டற்ற சர்வாதிகார பிரயோகங்கள் போன்றவற்றிற்கான கோஷங்களை ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் முழங்கவில்லை.

இவர்களது கோஷங்களிலும் பிரகடனங்களிலும் “கிழக்கு பிராந்தியத்தின் சுயநிர்ணயம்” எனும் அரசியல் ஆயுதம் முழங்கியது. பிராந்தியத்தில் மிகவுமே வலிமை குறைந்த இவர்கள் இதுப பற்றி பேசுவதன் பின்னணியில் ஈரானின் அரசியல் நகர்வுகள் இருக்க நிறையவே வாய்ப்புள்ளது. இந்த தேசம் சிரியாவின் விவகாரத்தில் பஸர் அல் அஸாதின் அரசிற்காக துணை நின்றது. இப்போது அது சவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியத்தை பிரிப்பதில் மூன்றாம் தரப்பு மூலம் தன் திட்டங்களை நிறைவேற்ற பார்க்கிறது. 


சவுதியின் கிழக்கு பிராந்தியம் என்பது ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற தேசங்களுடனும் பாரசீக வளைகுடாவுடனும் தொடர்புடையது. ஈரானிய ஷியாக்கள் சவுதியினுள் நுழையும் பட்டுப்பாதையும் இதிலிருந்தே ஆரம்பிக்கிறது. இந்த துரோக அரசயிலிற்கு அமெரிக்காவும், ஏன் இஸ்ரேலும் கூட துணை போகலாம். ஆச்சரியப்பட எதுவுமில்லை. 

இந்த பேரணி என்பது சவுதி அரசிற்கு விடுக்கப்படும் முதல் சிவப்பு சமிக்ஞை. இந்த பிரிவினைவாத சக்திகளை இனங்கண்டு காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் பட்சத்தில் தான் சவுதி அரேபியா என்ற தேசம் நிலைத்திருக்கும். ஷியாக்கள் சவுதியில் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்து விட்டாலோ அல்லது கிழக்கு பிராந்தியத்தில் பிரிவினை போராட்டங்களை ஆரம்பித்து விட்டாலோ நிறுத்துவது மிகவுமே கடினம். அரேபிய வளைகுடா கடலும் சிவப்பு நிறமாவது பின்னர் தவிர்க்க முடியாததாகி விடும். 
Blogger Wordpress Gadgets