கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாணவர்களுக்கான சிலம்பாட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது இதில் மாணவர்கள் பலர் திரலாக கலந்துகொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாணவர்களுக்கான சிறப்பு சிலம்பாட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி காலை 10.30 மணியளவில் துவங்கியது. இன்நிகழ்ச்சியை மதுரை மாவட்ட தலைவர் சுல்தான் அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாஸ்டர் திரு.உமர் அவர்கள் மாணவர்களுக்கு சிலம்பு பயிற்சி அளித்தார். மேலும் மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் களந்துகொண்டு சிலம்பு பயிற்சி பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட செயலாளர் திரு.அஹமது அலி, விருதுநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் திரு.பாசில், படையாலி ராஜா மற்றும் தமீம் அன்சாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment