Facebook Twitter RSS

Saturday, August 24, 2013

Widgets

“மெட்ராஸ் கபே” படத்தில் விடுதலைப் புலிகளை எப்படி காட்டுகிறார்கள் தெரியுமா?

Source:viruviruppu.com
ற்போது சர்ச்சைகளில் பலமாக அடிபடும் மெட்ராஸ் கபே படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகுமா என்ற ஆவலை பலருக்கு ஏற்படுத்தியுள்ளன, அந்தப் படம் பற்றி வெளியாகும் செய்திகள். இந்தப் படம் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும. அதன் தலைவர் தலைவர் பிரபாகரனையும் பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளது என்று கூறி படத்தை தடை செய்ய கோரியுள்ளன சில அமைப்புகள்.

பொதுவாகவே, அரசியல் ரீதியான படங்களுக்கு எதிர்ப்பு கிளம்பும்போது, எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் படத்தை முழுமையாக தடை செய்தால்தான் எதிர்ப்பின் பலனை அனுபவிக்க முடியும். எதிர்ப்பையும் மீறி படம் ரிலீஸாகி விட்டால், அது தலைகீழாக பலனைக் கொடுத்துவிடும்.

படத்துக்கு அதீத விளம்பரம் கிடைத்துவிடுவதால், அப்படி என்னதான் உள்ளது அந்தப் படத்தில் என்று, சாதாரணமாக படத்தை பார்க்க நினைத்திராதவர்களைக்கூட படம் பார்க்க வைத்துவிடும். வர்த்தக ரீதியாக வசூலை அள்ளிவிடும். இதற்கு சமீபத்தைய உதாரணம், விஸ்வரூபம். (தலைவா அரசியல் படமல்ல)

மெட்ராஸ் கபேயின் கதி என்னாகும் என்பது, அடுத்த ஓரிரு நாட்களில் தெரிந்துபோகும்.

போராட்டங்கள், உணர்வுகள் எல்லாவற்றுக்கும் வெளியே போய், இந்த படத்தின் பிசினெஸ்ஸை எப்படி திட்டமிட்டிருப்பார்கள் பார்க்கலாமா?
இது தமிழ் படமல்ல. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ரிலீஸ் செய்யப்படும் ஹிந்தி படம். தவிர ஹிந்திப் படங்களுக்கான வெளிநாட்டு மார்க்கெட்டும் உள்ளது.

சுமார் 35 கோடி ரூபா பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஹிந்தி படம் இது. அதில் எத்தனை சதவீதத்தை தமிழகத்தில் இருந்து வசூலிக்கலாம் என திட்டமிட்டிருந்தார்கள் என்பது தெரியவில்லை. சாதாரணமாக ஹிந்திப் படங்களின் வசூலில் சுமார் 8 சதவீதம் தமிழகத்தில் இருந்து கிடைக்கும் என்கிறார்கள்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு காரணமாக மற்றைய மாநிலங்களிலும் இந்தப் படத்துக்கு பப்ளிசிட்டி கிடைத்துள்ளது.

மற்றொரு விஷயம், பொதுவாக இலங்கை மற்றும் தென் இந்தியா தொடர்பான படமாக இருந்தால், வடக்கே ஆகா ஓகோ என்று பெரிய வரவேற்பு இருக்காது. அந்த வகையில் இந்தப் படத்துக்கும் ஆரம்பத்தில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கவில்லை. படத்துக்கு செய்யப்பட்ட விளம்பரங்களும் போதாது.

ஆனால், அரசியல் எதிர்ப்பு, அருமையான விளம்பரம் கொடுத்து, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த எதிர்பார்ப்பு, வசூலில் 7 சதவீதத்தை அதிகரித்து விட்டால், படம் தமிழகத்தில் ஓடாவிட்டாலும் நஷ்டம் ஏற்படாது.
ஒருவேளை அரசியல் பரபரப்பு காரணமாக வெளி மாநிலங்களில் வசூல் அதிகரிப்பு 7 சதவீதத்தை விட அதிகமானால், தயாரிப்பாளர் முகத்தில் புன்னகை தோன்றும்.

ஒருவேளை தமிழகத்திலும் படம் தடை செய்யப்படாமல் போய்விட்டால், அல்லது தாமதமாகவேனும் ரிலீஸ் ஆனால், தயாரிப்பாளருக்கு சுக்ரதிசை!
அப்படி நடந்து விட்டால், விஸ்வரூபம் கமல் இஸ்லாமிய அமைப்புகளுக்கு நன்றியுடையவராக இருப்பதுபோது, ஜான் ஆப்ரஹாம் இங்குள்ள சில அமைப்புகளுக்கு நன்றியுடையவராக இருப்பார்.

ஒருவேளை அந்த ரூட்டில் படம் ஓடிவிட்டால், இதைத் தொடர்ந்து இப்படியான சில ஹிந்திப் படங்களை எடுப்பார்கள்.

படத்தில் காண்பிக்கப்படும் தீவிரவாத இயக்கம் கற்பனையானது என்று பட யூனிட்டில் சொல்கிறார்கள். தமிழீழ விடுதலை புலிகள் (LTTE) என்ற பெயர் உபயோகிக்கப்படவில்லை எனவும், LTF என்ற பெயருடைய கற்பனை இயக்கமே கதையில் உள்ளது என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
கற்பனை இயக்கத்தின் தலைவராக நடிப்பவர், அஜய் ரத்னம்.

இந்தப் படத்தில் இயக்க தலைவரின் பெயர் ‘அண்ணா’ பாஸ்கரன். இந்த கேரக்டர், ‘தம்பி’ பிரபாகரனை குறிக்கிறது என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். (விடுதலைப் புலிகளின் வர்ணத்தில் யூனிஃபாரம் உள்ளது)


Source:viruviruppu.com

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets