பக்தாதில் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அடக்கமாகியிருக்கும் இடம். |
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ''ஏகத்துவ முழக்கம்''
[ o அல்லாஹ் அல்லாதவரிடம் உதவி தேடுபவனே! நீ அறிவுடையவனல்ல. அல்லாஹ்வின் பொக்கிஷத்தில் இல்லாதது எதுவுமில்லை.
o மற்ற எவரையும் விட உனக்கு மிக அருகில் இருக்கும் அல்லாஹ்விடம் கேட்காமல் மற்றவர்களிடம் கேட்கிறாயே! உனக்கு வெட்கமாக இல்லையா?"
o உனக்கு ஏதும் துன்பம் ஏற்பட்டுவிட்டால் அல்லாஹ்வை தவிர வேறு எவரும் அகற்ற முடியாது. எனவே, உனது துன்பத்தை அல்லாஹ் அல்லாதவர்களிடம் முறையிடாதே.
o "அல்-குர்ஆன், அல்-ஹதீஸ் இவ்விரண்டையும் பின்பற்றாதவரை உனக்கு "இம்மை-மறுமை"யில் வெற்றி கிடையாது.
o "அல்-குர்ஆன், அல்-ஹதீஸ்" இரண்டையும் உன் முன் வைத்துக்கொண்டு அவ்விரண்டிலும் ஆழ்மாக சிந்தனை செய்து அவ்விரண்டின்படி நீ செயல்படு. "அவர் அப்படி சொல்லி இருக்கிறார், இவர் இப்படி சொல்லி இருக்கிறார்", இதில் இப்படி இருக்கிறது, அதில் அப்படி சொல்லியிருக்கிறது போன்ற உளறல்களைக் கொண்டு ஏமாந்து விடாதே.
o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழி(யை) முறையினைப் பின்பற்றுங்கள்.. "பித்அத்"-ஐ உருவாக்காதீர்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்படுங்கள். மனமுரண்டு பிடிக்காதீர்கள். இறைவனை ஏகப்படுத்துங்கள். அவனுக்கு (யாரையும், எதனையும்) இணை வைக்காதீர்கள்.
o நாடியவுடன் எதனையும் செய்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை. அனைத்தையும் இயக்குபவனும், இயக்கங்களை முடித்து வைப்பவனும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை.
o யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு விட்டனோ அவன் தான் பலமான கயிற்றை பிடித்துக்கொண்டான். யார் படைப்பினங்கள் மீது நம்பிக்கை வைக்கின்றானோ அவன் தண்ணீரை இறுகப்பிடிப்பவனைப் போன்றவன். அவன் கையை விரித்தால் எதனையும் காணமாட்டான். (முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எழுதிய ஃபத்ஹுர் ரப்பானி & ஃபுதூஹுல் ஃகைப்")
''இந்த ரபீ உல் ஆகிர் மாதத்தில் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பெயரால் மவ்லூதுகள் ஓதப்பட்டு வருகின்றன. இதில் வரம்பு மீறிய ஏராளமான ஷிர்க்கான வார்த்தைகள் உள்ளன என்பதை அறிந்தும் பிடிவாதமாக மவ்லூதுகள் ஓதிவரும் ஆலிம்களும் மதரஸா மாணவர்களும்திருந்துவதற்கு அல்லாஹ்விடம் துஆச் செய்வோமாக. வழிகாட்ட வேண்டியவர்களே வழிகெட்டுப் போகும்போது அல்லாஹ்விடம் முறையிடுவதைத்தவிர வேறென்ன வழி?! ஏனெனெனில் உள்ளங்களை புரட்டக்கூடியவன் அல்லாஹ் ஒருவனே.'' -adm.]
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி
ஹிஜ்ரி 5 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய உலகம் கண்ட சீர்த்திருத்தவதிக்களில் முக்கியமானவர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.
ஏகத்துவத்தை, தவ்ஹீதை உலகெங்கும் ஒளி பரப்பிய அவர்களின் போதனைகள் அத்தனையும் இறை நெருக்கத்தை பெற்றுத்தரும் வாயிலாகவும் இறைநம்பிக்கையை உறுதியுடன் மனதில் இருத்திக்கொள்ள உந்துதல் சக்தியாகவும் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் ஒளிவிளக்காகும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
மக்களுக்கு பயனளிக்கும் விதத்தில் அவர்கள் பல நூல்களை எழுதியுள்ளார்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் எழுதியுள்ள "ஃபுதூஹுல் ஃகைப்" எனும் நூல் பல உபதேசங்களை அடங்கிய பெட்டகம் என்று சொல்லலாம்.
நாம் செயல்பட இறைவேதமாம் அல்குர் ஆனைத்தவிர வேறு நெறி நூல் ஏதுமில்லை. நாம் பின்பற்றிச்செல்ல நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத்தவிர வேறெந்த நபியுமில்லை. அவ்விரண்டையும் விட்டுவிட்டு வேறெங்கும் சென்றுவிடாதீர்கள். அதைவிட்டு அப்பாற்பட்டு சென்றுவிட்டால் நாசமடைந்து விடுவாய். ஷைத்தானும், மனோஇச்சையும் உன்னை வழிகெடுத்துவிடுவர்.
"அல்குர்ஆன், அல் ஹதீஸ்" இரண்டையும் உன் முன் வைத்துக்கொண்டு அவ்விரண்டிலும் ஆழ்மாக சிந்தனை செய்து அவ்விரண்டின்படி நீ செயல்படு. "அவர் அப்படி சொல்லி இருக்கிறார், இவர் இப்படி சொல்லி இருக்கிறார்", இதில் இப்படி இருக்கிறது, அதில் அப்படி சொல்லியிருக்கிறது போன்ற உளறல்களைக் கொண்டு ஏமாந்து விடாதே.
அல்-குர்ஆன், அல்-ஹதீஸுக்கு ஒத்திருந்தால் அதனி எடுத்துக்கொள். இல்லையேல் அதனை தூக்கி எறிந்துவிடு. ஏனெனில், "இத்தூதர் உங்களுக்கு எதை கொடுத்தாரொ அதை வாங்கிக் (எடுத்துக்) கொள்ளுங்கள். எதைவிட்டும் உங்களை தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்." (அல்-குர்ஆன் 59 : 7) என்று அல்லாஹ் கூறியுள்ளான்.
அல்-குர்ஆன், அல்-ஹதீஸில்தான் ஈமானுக்கு (இறைநம்பிக்கைக்கு) பாதுகாப்பு இருக்கிறது. இவையிரண்டின் மூலமாகவே ஒரு மனிதன் இறைநேசராக ஆக முடியும்.
"அல்-குர்ஆன், அல்-ஹதீஸ் இவ்விரண்டையும் பின்பற்றாதவரை உனக்கு "இம்மை-மறுமை" யில் வெற்றி கிடையாது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழி(யை) முறையினைப் பின்பற்றுங்கள்.. "பித்அத்"-ஐ உருவாக்காதீர்கள். அல்லா ஹ்வின் கட்டளைக்கு கட்டுப்படுங்கள். மனமுரண்டு பிடிக்காதீர்கள். இறைவனை ஏகப்படுத்துங்கள். அவனுக்கு (யாரையும், எதனையும்) இணை வைக்காதீர்கள்.
நாடியவுடன் எதனையும் செய்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை. அனைத்தையும் இயக்குபவனும், இயக்கங்களை முடித்து வைப்பவனும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை.
நல்லது-கெட்டது, இன்பம்-துன்பம், கொடுத்தல்-கொடுக்க மறுத்தல், வாழ்வு-மரணம், மதிப்பு-இழிவு, செல்வம்-வறுமை, இவை யாவும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் மட்டுமே உள்ளன. (இந்த விபரங்கள் அனைத்தும் அவர்கள் எழுதிய "ஃபுதூஹுல் ஃகைப்" நூலில் அடங்கியுள்ளன.
''அல்லாஹ் அல்லாதவரிடம் உதவி தேடுபவனே! நீ அறிவுடையவனல்ல. அல்லாஹ்வின் பொக்கிஷத்தில் இல்லாதது எதுவுமில்லை.
மற்ற எவரையும் விட உனக்கு மிக அருகில் இருக்கும் அல்லாஹ்விடம் கேட்காமல் மற்றவர்களிடம் கேட்கிறாயே! உனக்கு வெட்கமாக இல்லையா?"
''உனக்கு ஏதும் துன்பம் ஏற்பட்டுவிட்டால் அல்லாஹ்வை தவிர வேறு எவரும் அகற்ற முடியாது. எனவே, உனது துன்பத்தை அல்லாஹ் அல்லாதவர்களிடம் முறையிடாதே. யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு விட்டனோ அவன் தான் பலமான கயிற்றை பிடித்துக்கொண்டான். யார் படைப்பினங்கள் மீது நம்பிக்கை வைக்கின்றானோ அவன் தண்ணீரை இறுகப்பிடிப்பவனைப் போன்றவன். அவன் கையை விரித்தால் எதனையும் காணமாட்டான்.'' (முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எழுதிய ஃபத்ஹுர் ரப்பானி)
"அல்லாஹ்வையே வணங்க வேண்டும். வணக்கங்கள் எதுவாயினும் அது அல்லாஹ்விற்கு மட்டுமே. அதில் யாரையும், எதனையும் இணையாக்கிவிடக் கூடாது. அல்லாஹ்வை மட்டுமே பிரார்த்திக்க வேண்டும். அவன் மீது மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டும். துன்பம் - துயரம் ஏற்படும் சமயத்தில் அல்லாஹ்வை மட்டுமே அழைக்க வேண்டும். மற்றெல்லஓரையும் விட அல்லாஹ்வே மிக மிக நெருக்கமாக, சமீபமாக இருக்கிறான். அவனே செவிமடுப்பவன். துன்பங்களை நீக்குபவன். நாடியவுடன் எதனையும் செய்பவன். உதவிகள் அல்லாஹ்விடமே கோரப்பட வேண்டும்..." என உபதேசம் செய்த இந்த இறைநேசரை முஸ்லிம்களில் ஒரு சாரார் அல்லாஹ்வின் அளவிற்கு உயர்த்தி வைத்து, அல்லாஹ்விடம் மட்டுமே கேட்டுப் பெற வேண்டிய உதவிகளை இவர்களிடம் கேட்கக்கூடிய மோசமான நிலை இன்றும் தொடர்கிறது.
அல்லாஹ்விற்கு மட்டுமே "நேர்ச்சை" எனும் வணக்கம் செலுத்தப்பட வேண்டும். ஆனால், சிலர் இவர்களின் பெநேர்ச்சையும் செய்கின்றனர்.
"ஜியாரத்" எனும் பெயரில் இவர்களின் மண்ணறையை (தவாஃப்) சுற்றி வருவது, அங்கே (இஃதிகாஃப்) தங்குவது போன்ற அனாச்சாரங்களை செய்து வருகின்றனர். இது மிகப்பெரும் தவறாகும். இது அவர்களின் உபதேசத்திற்கு முற்றிலும் மாற்றமானதாகும்.
அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் 27 குழந்தைச் செல்வங்களைப் பெற்றெடுத்தார்கள். அவர்களில் 5 ஆண் பிள்ளைகளும் 22 பெண் குழந்தைகளும் அடங்குவர். இது அவர்கள் இல்லறத்தை இனிதாக அமைத்து வாழ்ந்ததற்கு உண்மையான சாட்சியாகும்.
தன்னுடைய கடைசி காலம் வரைகல்வியை போதிக்கும் ஆசானாகவே பணியாற்றினார்கள். இறுதியில் பாக்தாதிலேயே மரணமாகி அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். அல்லாஹ் அவர்களின் மண்ணறையை சுவனப்பூங்காவாக ஆக்கிவைப்பானாக. இவர்கள் இந்தியாவிற்கோ, தமிழகத்திற்கோ வரவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
-மவ்லவி, F. ஜமால் பாகவி
No comments:
Post a Comment