Facebook Twitter RSS

Thursday, April 04, 2013

Widgets

பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா?


பாங்கு கூறுபவர் பாங்கு கூறி முடிக்கும் சமயத்தில், “அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு வஅன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு ரளீத்து பில்லாஹி ரப்பன், வபி முஹம்மதின் ரசூலன், வபில் இஸ்லாமி தீனன் என யார் கூறுகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப்பட்டு விடுகிறது என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: ஸஅது பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு: அதன் பொருள்:-

வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி வேறெவருமில்லை, அவன் தனித்தவன் (எவ்வகையிலும் எவரும்) அவனுக்கு கூட்டில்லை என்றும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனின் அடியாரென்றும், அவனின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வை இரட்சகனாவும், முஹம்மதை தூதராகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் பொருந்திக் கொண்டேன்.

முஸ்லிம் ஹதீஸ் எண் : 200


பாங்கு கூறுவோரின் சிறப்பு :

அறிவிப்பாளராகிய நான் ‘முஆவியா பின் அபீ ஸுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருந்தேன். (அப்போது) தொழுகைக்கு அவரை அழைப்பதற்காக பாங்கு கூறுபவர் அவரிடம் வந்தார். அப்போது முஆவியா, “பாங்கு கூறுக்கூடியவர்கள் மறுமையில் மனிதர்களில் நீண்ட கழுத்துடையவர்களாக இருப்பர், என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கிறேன்” எனக்கூறினார்.

முஸ்லிம் ஹதீஸ் எண் : 197
 



No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets