Facebook Twitter RSS

Wednesday, April 25, 2012

தேர்தலில் போட்டியிட முபாரக் ஆதரவாளர்களை தடைச் செய்யும் சட்டம்: ராணுவ அரசு அங்கீகாரம்!


Egypt's army passes law banning Mubarak-era presidency candidates
கெய்ரோ:முபாரக்கின் ஆட்சியில் அங்கம் வகித்தவர்களை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை தடைச் செய்யும் சட்டத்திற்கு உயர் ராணுவ கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது. இம்மாத துவக்கத்தில் இச்சட்டத்தை பாராளுமன்றம் நிறைவேற்றியது.
முபாரக் ஆட்சியில் உளவுத்துறை தலைவராகவும், துணை அதிபராகவும் பதவி வகித்த உமர் சுலைமான் மற்றும் பிரதமர் அஹ்மத் ஷஃபீக் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் நோக்கத்தில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது என கூறப்பட்டது.

குடியரசு தலைவர் தேர்தல்: ஹாமித் அன்சாரிக்கு லாலு ஆதரவு! – கலாமை பொது வேட்பாளராக்கும் என்.டி.ஏ கூட்டணிக்கு பதிலடி.


Presidential_polls
புதுடெல்லி:முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமை மீண்டும் குடியரசு தலைவராக்க முயலும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின்(என்.டி.ஏ) முயற்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போதைய துணை குடியரசு தலைவர் ஹாமித் அன்சாரிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார். அதேவேளையில் அப்துல் கலாமை மீண்டும் குடியரசு தலைவராக்கலாம் என்ற முடிவை சமாஜ்வாதி கட்சி வாபஸ் பெற்றுக்கொண்டது.

சாதி வாரியாக கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் ‘இஸ்லாம்’ என்று குறிப்பிட வேண்டும் – இ.யூ.முஸ்லிம் லீக்


சாதி வாரியாக கணக்கெடுப்பு
சென்னை:தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் சாதிவாரி கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் பெயர்களை சேர்க்க வேண்டும். முஸ்லிம்களில் சாதிகள் இல்லை. ராவுத்தர், தக்கினி லப்பை, மரைக்காயர் என்பது எல்லாம் சாதிகள் இல்லை. எனவே, முஸ்லிம்கள் அனைவரும் `இஸ்லாம்’ என்ற மதத்தை மட்டும் குறிப்பிட வேண்டும் என்று இந்திய தேசிய முஸ்லிம் லீக் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஒய்.ஜவஹர் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம் முழுவதும் சாதிவாரியாக கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. இதில், முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் பெயர்களை சேர்க்க வேண்டும். வெளிநாடுகளில் வேலை செய்கின்ற தங்கள் உறவினர் பெயர்களையும் தெரிவிக்க வேண்டும்.
இதற்காக, அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் நிர்வாகிகள், உதவியாக இருக்க வேண்டும்.
மேலும், முஸ்லிம்களில் சாதிகள் இல்லை. ராவுத்தர், தக்கினி லப்பை, மரைக்காயர் என்பது எல்லாம் சாதிகள் இல்லை. எனவே, முஸ்லிம்கள் அனைவரும் `இஸ்லாம்’ என்ற மதத்தை மட்டும் குறிப்பிடவும். கணக்கெடுப்பில் நம் பெயர்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான், நம் உரிமைகளைப் பெற முடியும் என்று கூறியுள்ளார்.

பங்களாதேஷ்:எதிர்கட்சிகளின் போராட்டம் வலுப் பெறுகிறது!


Huge Bangladesh Protests After Opposition Head Disappearance
டாக்கா:காணாமல் போன கட்சி தலைவர் இல்யாஸ் அலியைக் குறித்து தகவல் எதுவும் கிடைக்காத்தை தொடர்ந்து பங்களாதேஷ் எதிர்கட்சியான பி.என்.பி தேச முழுக்க பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஒரு வாரம் கழிந்த பிறகும் இல்யாஸ் அலியை கண்டுபிடிக்க அரசுக்கு இயலாத சூழலில் பி.என்.பி 12 மணிநேர முழு அடைப்பை நடத்துகிறது. தொடர்ச்சியாக பங்களாதேஷை ஸ்தம்பிக்க வைத்த போராட்டங்களுக்கு பிறகு ஷேக் ஹஸீனா அரசு மீது நிர்பந்தம் ஏற்படுத்தும் விதமாக பி.என்.பி முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பி.என்.பி ஆர்கனைசிங் செயலாளருமான இல்யாஸ் அலியை கடந்த 17-ஆம் தேதி முதல் காணவில்லை.

ஆசியாவை குறிவைக்கும் அமெரிக்க உளவுப் பிரிவு!


US spies to target asia
வாஷிங்டன்:ஆசியாவில் வளர்ந்துவரும் நாடுகளை குறிப்பாக ஈரானையும், சீனாவையும் குறிவைத்து அமெரிக்க பாதுகாப்புத்துறை புதிய உளவு நெட்வர்க்கை துவங்குகிறது.
பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா இதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது. புதிய உளவுப்பிரிவு சி.ஐ.ஏ மற்றும் இதர அமெரிக்க உளவுத்துறைகளுடன் ஒத்துழைத்து இயங்கும்.

ஜூன் 12-ஆம் தேதி புதுக்கோட்டை இடைத்தேர்தல்: தேர்தல் கமிஷன் அறிவிப்பு!


ஜூன் 12-ஆம் தேதி புதுக்கோட்டை இடைத்தேர்தல் தேர்தல் கமிஷன் அறிவிப்பு!
சென்னை:புதுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற ஜூன் மாதம் 12-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை தொகுதியின் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த முத்துக்குமரன், கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.

Monday, April 23, 2012

இருதயத்தை பாதுகாக்கும் இதமான காலிஃப்ளவர் !


 காய்கறி இனத்தைச் சேர்ந்த காலிஃப்ளவர் ஒருவகையான பூ வகையைச் சேர்ந்தது. இதில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் மூலிகையாகவும் கருதலாம். முட்டைக்கோஸும் காலிஃபிளவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. இது சாதாரணமாக வெள்ளையாகவோ, இளம் மஞ்சளாகவோ காணப்படும். மேலும் இவற்றில் வயலட் கலர் காலிஃபிளவரும் உண்டு. காலிஃப்ளவர் ஒரு குளிர்பிரதேச காய்கறி. இது குளிர்காலங்களில் அதிக அளவில் கிடைக்கின்றது. இத்தாலியில் அதிக அளவில் விளைவிக்கப்பட்டகாலிஃப்ளவரானது முதன்முதலில் ஆசியாவில் தான் பயிரிடப்பட்டது. அக்காலத்தில் தென்னிந்திய மக்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாததால் இதற்கு தமிழில் பெயர் இல்லை. ஆங்கிலப் பெயரான காலிஃப்ளவர் என்றே அனைவராலும் அழைக்கப்படுகிறது.

காலிஃப்ளவரின் சத்துக்கள்

காலிஃப்ளவரில் பொட்டாசியம், விட்டமின் B6, ஆகியவை உள்ளன. இதில் விட்டமின் சி மிக அதிகமாக உள்ளது. ஒரு கப் நறுக்கிய பூவில் கலோரி 24, புரதம் 2 கிராம், மாவுச்சத்து 5 கிராம், விட்டமின் சி 72 மில்லி கிராம், ஃபோலாசின் 66 மைக்ரோ கிராம், பொட்டாசியம் 355 மில்லி கிராம் அடங்கியுள்ளன. மேலும் இது நார்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறியாகும்.

எப்படி சமைக்கலாம்?

இந்த காய்கறியை அதிகமாக வேக வைக்க கூடாது. இல்லையெனில் சத்துக்கள் கரைந்துவிடும். இதில் ஒரு வித தாவர அமிலம் உள்ளது. வேகும்போது கந்தகக் கலவையாக மாறி வாசனை வருகிறது. அதிக நேரம் வேக வைத்தால் வாசனை அதிகமாகும். சத்தும் வீணாகும். அலுமினியம், இரும்பு பாத்திரத்தில் வேக வைக்கக்கூடாது. இதிலுள்ள கந்தகக் கலவை அலுமினியத்துடன் சேர்ந்தால் பூ மஞ்சளாகிவிடும். இரும்பு இதை பிரவுன் கலராக்கிவிடும்.

இதை தண்ணீரில் வேகவைப்பதை விட நீராவியிலோ, மைக்ரோவேவ் அவனிலோ வேகவைக்கலாம். வைட்டமின் சி சத்து அதிகரிக்கும்.

இருதயத்தை பாதுகாக்கும்

காலிஃப்ளவரில் கொழுப்பு சத்து இல்லாத காய்கறி. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் இதயநோய்க்கு இதமான காய்கறி இது. காலிஃப்ளவருக்கு புற்று நோயை தடுக்கும் சக்தி உள்ளது. பூ வேகும்போது Isothiocyantes என்னும் ரசாயனம் வெளிவருகிறது. இது உடலினுள் சென்று உடல் தானாக உற்பத்தி செய்யும் phase II என்ற புற்றுநோய் தடுக்கும் பொருளை அதிகமாக சுரக்கச் செய்கிறது.

இது இடுப்பில் ஏற்படும் கருப்பு தழும்புகளை போக்கவல்லது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் இலங்கை தூதரகம் முன்பு இலங்கை புத்த பிட்சுகளை கண்டித்து தடையை மீறி ஆர்பாட்டம்-நூற்றுக்கணக்கானவர்கள் கைது!


கண்டன உரை நிகழ்த்தும் மாவட்ட தலைவர் ஜே. முஹம்மது நாஜிம்

 இலங்கை தம்புள்ளையில் அமைந்துள்ள மஸ்ஜிதே ஹைரிய்யா ஜூம்ஆ பள்ளிவாசல் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகலில் புத்த பிட்சுகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த‌ இனவெறி தாக்குதலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. சுமார் 500க்கும் மேற்பட்ட புத்த பிட்சுகள் பள்ளிவாசலை நோக்கி பேரணியாக வந்து, பின்னர் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.



சம்பவ இடத்தில் நின்றிருந்த காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப்படையினரும் புத்த பிட்சுகளை தாக்குதல் நடத்த விட்டு வேடிக்கை பார்த்துள்ளனர். இந்த இனவெறி தாக்குதலால் வழக்கமாக வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் ஜும்மா பிரசங்கமும், தொழுகையும் நடைபெறவில்லை. அதற்கான தயாரிப்பில் முஸ்லிம்கள் ஈடுபட்டு கொண்டிருந்த சமயம் இத்தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


காட்டு மிராண்டித்தனமாக முஸ்லிம்களின் இறையில்லத்தின் மீது தாக்குதல் நடத்திய இனவெறி பிடித்த புத்த பிட்சுகளை கண்டிக்கும் வகையில் சென்னையிலுள்ள இலங்கை தூதரகம் முன்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் ஏப்ரல் 23 மாலை 4மணியளவில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட தலைவர் ஜே. முஹம்மது நாஜிம் கலந்து கொண்டு கண்டன உரைநிகழ்த்தினார். பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.



10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்ய கோரி அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பாக கோவையில் பொதுக்கூட்டம்


10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்ய கோரி அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பாக கோவையில் பொதுக்கூட்டம்


ஷரீஅத் சட்டத்தில் மூக்கை நுழைக்காதே!- மத்திய அரசுக்கு முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் எச்சரிக்கை!


Members of the All India Muslim Personal Law Board during its working committee meeting in Lucknow
லக்னோ:முஸ்லிம்களின் ஷரீஅத் சட்டத்தில் மத்திய அரசு தலையிடுவதற்கு முஸ்லிம் தனியார் சட்டவாரியம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
மும்பையில் அனைத்து இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் 3 நாட்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் உரை நிகழ்த்திய முஸ்லிம் தனியார் சட்டவாரிய தலைவர்கள் பல்வேறு பிரச்சனைகளை குறித்து கருத்துக்களை வெளியிட்டனர்.
மத நிறுவனங்களை வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளித்து நேரடி வரிவிதிப்பு சட்டமசோதாவில் திருத்தங்களை கொண்டுவர வாரியம் மத்திய அரசை கேட்டுக்கொண்டது. கல்வி உரிமைச் சட்டத்தின் வரம்பில் இருந்து மதரசாக்களுக்கும்(முஸ்லிம் கல்வி நிறுவனங்கள்), மத நிறுவனங்களுக்கும் விலக்கு அளித்து திருத்தம் கொண்டுவர வேண்டும். திருமண பதிவு நடவடிக்கைகளை எளிதாக்கவேண்டும் என்றும் வாரியம் கோரிக்கை விடுத்தது.
கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் உறுதி அளித்தபோதும் அதனை கடைப்பிடிக்கவில்லை என்று வாரியம் குற்றம் சாட்டியது.
வக்ஃப் போர்ட் சட்டத் திருத்த மசோதாவை கொண்டுவரும் பொழுது முன்னர் முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் அளித்த சிபாரிசுகளின் அடிப்படையில் அமையவேண்டும்.
மருத்துவமனைகளில் பிறப்பு ஆவணங்களை பெறுவதைப் போல மஸ்ஜிதுகளில் அளிக்கும் நிக்காஹ்(திருமண ஒப்பந்த) பதிவு ஆவணங்களை ஏற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தவேண்டும்.
சில மஸ்ஜிதுகளில் தொழுகை நடத்த ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா(இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித்துறை) ஏற்படுத்திய தடையை நீக்கவேண்டும். முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தை இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின்(சிமி) துணை அமைப்பு என்று அவதூறு பரப்பும் உளவுத்துறைகளின் முயற்சி கண்டனத்திற்குரியது என்று முஸ்லிம் தனியார் சட்டவாரிய துணைப் பொதுச் செயலாளர் அப்துற்றஹீம் குரைஷி கூறினார்.
முஸ்லிம் இளைஞர்களை மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பிலும் இதர பொய் வழக்குகளிலும் சிக்கவைத்த அதே நிறுவனங்கள்தாம் முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் மீதும் கரியை பூசுவதாக குரைஷி குற்றம் சாட்டினார்.

Thursday, April 19, 2012

உறுதியான இறைநம்பிக்கை கொண்ட ஈரானின் ராணுவத்தை யாராலும் வெல்லமுடியாது: அஹ்மதி நிஜாத்


Iran’s President Mahmoud Ahmadinejad
தெஹ்ரான் ஈரானின் ராணுவம் இறை நம்பிக்கையை அடிப்படையாக கொண்டதால் அதனை யாராலும் வெல்லமுடியாது என்று ஈரான் அதிபர் நஜாத் தெஹ்ரானில் நடந்த தேசிய ராணுவ தினத்தில் உரையாற்றும் போது கூறினார்.
நேர்மையான ஆளுமை எல்லைகள் கொண்ட ஈரானை தற்காக்க எங்கள் ஆயுதம் ஏந்திய படை போரட்டத்திற்கு தயாராக இருக்கிறது என்று ஈரானின் அதிபர் தெரிவித்தார்.
மேலும் அரேபியா வளைகுடாவில் நிகழும் பாதுகாப்பு நிலையை தொடர்புபடுத்தி கூறும்பொழுது “பாதுகாப்பை நிலை நாட்ட அண்டை  நாடுகளும் அதனுடைய  அரசாங்கமும் ஒன்று சேர்ந்து பங்காற்றாமல் அயல்நாட்டின் தலையிடுதலால் கருத்துவேறுபாடு பாதுகாப்பின்மை  மற்றும் அழிவு ஏற்படுகிறது” என்றார்.
அஹ்மதி நிஜாத் மீண்டும் அரேபியா வளைகுடாவின் பாதுகாப்பு குறித்து கூறும்பொழுது “ஒரு முதன்மையான கொள்கை வகுத்து அதில் அனைத்து வளைகுடா நாடுகளும் உறுதியாக நின்றால் மிகவும் ஸ்திரமான பாதுகாப்பு மிக்க பகுதியாக வளைகுடாவை நிறுவ ஈரான் ஒத்துழைக்கும்” என்றார்.
“இஸ்லாமிய குடியரசு நாடான ஈரான் அறிவிப்பது என்னவென்றால் தங்களுடைய இதயமாக உள்ள ராணுவ பாதுகாப்பு கொள்கைகள் குற்றங்களை தடுத்து நிறுத்துவதற்காகவே அன்றி எந்த ஒரு நாட்டையும் அச்சுறுத்த இல்லை.” எனவும் அவர்  உரையாற்றினார்.

அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்கமுடியாது: உச்சநீதிமன்றம்!


உச்சநீதிமன்றம்
புதுடெல்லி:அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், அரசியல் கட்சிகளுக்கு தனிச் சின்னம் ஒதுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தேர்தலின்போது, தங்களுக்குத் தனிச் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தேமுதிக, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ், பிரஜா ராஜ்யம் (தற்போது காங்கிரஸூடன் இணைந்து விட்டது), பகுஜன் விகாஸ் அகாதி உள்பட 15 அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் 2008-ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தன. தனிச்சின்னம் ஒதுக்கப்பட்டால், குழப்பமின்றி தங்கள் கட்சிக்கு வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். ஆனால், விதிகளைக் காரணம் காட்டி தங்களுக்குத் தனிச் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது என்று 15 அரசியல் கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டன. இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தேர்தல் ஆணையம், சட்டப்பேரவைத் தேர்தலின்போது குறைந்தபட்சம் 2 இடங்கள் மற்றும் 6 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தால் மட்டுமே தனிச்சின்னம் ஒதுக்க முடியும் என்று கூறியது.
இவ்வழக்கின் விசாரணையின் இறுதியில் நீதிபதிகள் அல்தாமஸ் கபீர், எஸ்.எஸ். நிஜார், ஜஸ்தி செலமேஸ்வர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து அளித்த தீர்ப்பு விபரம்:
“பதிவு பெற்ற – ஆனால், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்குத் தனிச் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் சில விதிகளை வகுத்துள்ளது. வாக்காளர்களிடையே குழப்பத்தைத் தவிர்க்க பொதுச்சின்னம் வழங்கப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரினாலும், அதற்கு அந்தக் கட்சிகள் தகுதி பெற வேண்டும்.
சட்டப்பேரவைத் தேர்தலில் 2 இடங்களில் வெற்றி மற்றும் 6 சதவீத வாக்குகளை அவை பெற்றிருக்க வேண்டும்; அப்போதுதான் அவற்றுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கப்படும் என்பது தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதி. இது அனைத்து அம்சங்களையும் கருத்தில்கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. அதனால், தனிச்சின்னம் கோரும் அரசியல் கட்சிகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
மூன்று நீதிபதிகளில் ஜஸ்தி செலமேஸ்வர் மட்டும் தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள விதிகளுக்கு எதிராக தீர்ப்புக் கூறினார். அவர், “வாக்காளர்கள் குழப்பம் அடையாமல் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ‘தேர்தல் சின்னம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கீகரிக்கப்படாத கட்சி என்ற காரணத்துக்காக ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு சின்னத்தை ஒதுக்கினால் அது வாக்காளர்களிடம் குழப்பதையே ஏற்படுத்தும். இது அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவை மீறுவது போல் ஆகும்” என்று கூறியிருந்தார்.
ஆனால், மற்ற 2 நீதிபதிகள், “தேர்தல் ஆணையத்தின் விதிகள் சரியான கண்ணோட்டத்துடன்தான் வகுக்கப்பட்டுள்ளன. அதனால் அரசியல் கட்சிகளின் வழக்கை தள்ளுபடி செய்யலாம்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
பெரும்பான்மை அடிப்படையில், மூன்றுக்கு இரண்டு நீதிபதிகள் எழுதிய தீர்ப்பின்படி, அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றிப் பெ​ற்ற முஸ்லிம் கவுன்சிலர்கள் எண்ணிக்கை உயர்வு!



MCD
புதுடெல்லி:டெல்லியில் 3 மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் வெற்றிப் பெற்ற முஸ்லிம் கவுன்சிலர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த முறை 11 பேர்களே வெற்றிப் பெற்றனர். ஆனால், இம்முறை 15 பேர் வெற்றிப் பெற்றுள்ளனர்.
மேலும் வெற்றிப் பெற்றவர்களில் முஸ்லிம் பெண் கவுன்சிலர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த முறை 3 முஸ்லிம் பெண்கள் மட்டுமே வெற்றிப் பெற்றனர். இம்முறை 7 பேர் வெற்றிப் பெற்றுள்ளனர்.
வெற்றிப் பெற்ற கவுன்சிலர்களில் 8 பேர் காங்கிரஸ் கட்சி சார்பிலும், 3 பேர் ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பாகவும், 2 பேர் பகுஜன்சமாஜ் கட்சி சார்பாகவும், சமாஜ்வாதி கட்சி மற்றும் பா.ஜ.க சார்பாக தலா ஒருவர் வீதமும் வெற்றிப் பெற்றுள்ளனர்.
வெற்றிப்பெற்ற முஸ்லிம் கவுன்சிலர்களின் விபரம் வருமாறு:


குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ஜியாவுர் ரஹ்மான் குறைந்த வாக்குகளில் தோல்வி!


Abdur Rahman holding a campaign poster of his imprisoned son Ziaur Rahman
புதுடெல்லி:டெல்லி மற்றும் அஹ்மதாபாத் குண்டுவெடிப்பு வழக்குகளில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜியாவுர் ரஹ்மான் டெல்லி மாநகராட்சி வார்டு தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார்.
தெற்கு டெல்லி மாநகராட்சியில் அமைந்துள்ள ஸாக்கிர் நகர் வார்டில் ஜியாவுர் ரஹ்மான் சுயேட்சையாக போட்டியிட்டார். இவரை எதிர்த்து முக்கியமாக காங். கட்சி சார்பில் சோயப் டேனிஸ் போட்டியிட்டார். நேற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த வேளையில் சோயப், ஜியாவுர் ரஹ்மானை வெறும் 517 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். சோயப் டேனிஸ் 8194 வாக்குகளையும், ஜியாவுர் ரஹ்மான் 7677 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
டெல்லி மற்றும் அஹ்மதாபாத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக 2008-ஆம் ஆண்டு நடந்த பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டருக்கு பிறகு ஜியாவுர் ரஹ்மான் கைது செய்யப்பட்டார். இவர் தற்பொழுது சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜியாவுர் ரஹ்மானுக்காக அவரது தந்தை அப்துர் ரஹ்மான் மற்றும் உறவினர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
தேர்தல் முடிவு குறித்து ஜியாவுர் ரஹ்மானின் தந்தை அப்துர் ரஹ்மான் கூறுகையில், “இப்பகுதிகளில் நாங்கள் செல்லும் போது யாரும் எங்களிடம் வருவதில்லை. தற்பொழுது பெரும்பாலான மக்கள் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் எங்களுடன் உள்ளார்கள். அவர்களுக்கு பயமோ, சுயநலனோ இல்லை. பொதுவாகவே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சமுதாயம் அங்கீகாரம் அளிப்பதில்லை. இத்தேர்தல் நீதிக்கான ஒரு காலடிச் சுவடாகும். இதன் மூலம் பெரும்பாலான மக்களை தொடர்புகொள்ள முடிந்துள்ளது.” என்றார்.
உள்ளூர் சமுதாய தலைவர் முஷாரஃப் ஹுஸைன் கூறுகையில், “ஜியாவுர் ரஹ்மான் தேர்தலில் தோல்வியை தழுவியிருந்தாலும் அவர் முத்திரை பதித்துள்ளார். அவர் பெற்ற வாக்குகள் மூலம் மக்கள் அவர் நிரபராதி என்பதை நம்பியுள்ளனர். மேலும் அவருக்கு பெரும்பாலான மக்களின் ஆதரவும் உள்ளது.” என்றார்.
வெற்றிப்பெற்ற காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முஸ்லிம் வேட்பாளர் சோயப் டேனிஸ் கூறுகையில், “எனக்கு ஜியாவுர் ரஹ்மான் மீது அனுதாபம் உண்டு. மேலும் அவர் ஒரு நிரபராதி என்பதையும் நான் நம்புகிறேன். ஆனால், இப்பிரச்சனைக்கு இத்தேர்தல் தீர்வு ஆகாது” என தெரிவித்துள்ளார்.

Sunday, April 15, 2012

மாயாவதியால் நிறுவப்பட்ட பூங்காக்கள் பள்ளிக்கூடங்களாக மாற்றப்படும்: அகிலேஷ் யாதவ் !


மாயாவதி ஆட்சியில் நிறுவப்பட்ட பூங்காக்கள் பள்ளிக்கூடங்களாக மாற்றப்படும்: அகிலேஷ் யாதவ்உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்தார். அந்த சந்திப்பின் போது உ.பி. மாநிலத்தின் மேம்பாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி மனு அளித்துள்ளார். அவருடன் சில உயர் அதிகாரிகளும் சென்றிருந்தனர்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உ.பி.யில் பல மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காக தீட்டப்பட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட தயாராக உள்ளது. பிந்தங்கிய நிலையில் உள்ள உ.பி.யின் வளர்ச்சியால் இந்தியாவும் வளர்ச்சி அடையும். ஆனால் போதுமான நிதி இல்லாததால் மத்திய அரசிடம் கூடுதல் நிதி உதவி அளித்திட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஈரான் எரிவாயு குழாய் திட்டம்: வெளிநாட்டு அழுத்தத்திற்கு கீழ்படிய மாட்டோம்: பாகிஸ்தான் !


Pakistan Resolved to Move Ahead on Iran Gas Pipelineஇஸ்லாமாபாத்:ஈரான்-பாகிஸ்தான் எரிவாயு குழாய் திட்டம் பூர்த்தியாகும் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் அழுத்தத்தைத் தொடர்ந்து எரிவாயு குழாய் திட்டத்தை பாகிஸ்தான் நிறுத்திவைக்கும் என்று செய்திகள் வெளியான சூழலில் வெளியுற அமைச்சக செய்தி தொடர்பாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதேவேளையில், ஈரானுடன் எரிவாயு குழாய் திட்டத்தை நிறுத்தினால் பாகிஸ்தான் எரிசக்தி தேவைகளை பரிசீலிப்போம் என்றும் சவூதிஅரேபியா இஸ்லாமாபாத்துக்கு
தெரிவித்துள்ளது. பொருளாதார, எரிசக்தி துறைகளில் நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு எண்ணெய் வளத்திற்கான வாய்ப்புகளை உருவாக்க கடனுதவி வழங்கப்படும் என்று சவூதி அரேபியா வாக்குறுதி அளித்துள்ளது.

முஸ்லிம் லீகருக்கு அமைச்சர் பதவி - பா ஜ க எதிர்த்து பந்த் !


BJP protest against muslim being ministerகேரள மாநிலத்தில் முஸ்லீம் லீக்கின் மஞ்சளம்குழி அலீ அமைச்சராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம் செய்துள்ளது.
கேரள மாநிலத்தில் ஐக்கிய  ஜனநாயக முன்னணி ஆட்சி நடத்திவருகிறது. காங்கிரஸ் தலைமையிலான அந்த ஆட்சியில் இரண்டாவது பெரிய கட்சியாக முஸ்லிம் லீக் உள்ளது.
முஸ்லிம் லீக கட்சிப் பிரமுகர்  மஞ்சளம்குழி அலீ என்பவருக்கு அமைச்சர் பதவி அளிக்க உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு
முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா கட்சி கேரளாவில் இன்று `கறுப்பு தினம்'  என்று அறிவித்தது. மாநிலமெங்கும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில்  கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தது. நடைப்பயணம், மாவட்ட த் தலைநகரங்களில் அரசு அலுவலகங்களின் முன் எதிர்ப்பு முழக்கங்களை பாரதிய ஜனதா தொண்டர்கள் எழுப்பினர்.

Saturday, April 14, 2012

பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா நடத்தும் முஸ்லிம்களின் இட ஓடிக்கிடு போராட்ட்டம் விளக்கப் பொதுகூட்டம்



அல்லாஹ்வின் திருப்பெயரால்

மத்திலும் தனி இட ஓடிக்கிடு                                                    மாநிலத்திலும் உரிய இட ஓடிக்கிடு


பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா நடத்தும்
முஸ்லிம்களின் இட ஓடிக்கிடு போராட்ட்டம்
விளக்கப் பொதுகூட்டம்

நாள்:15.04.2012 இரவு:8.30 மணியளவில்,இடம் :புதுதெரு,மஞ்சக்கொல்லை

தலைமை :சகோதரர் m .முஹம்மது தாஜுதீன் அவர்கள்
நாகை மாவட்ட தலைவர்
பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா

சிறப்புரை :சகோதரர் A .ஹாலீத் முஹம்மது அவர்கள்
மாநில பொது செயலாளர்
பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா
தலைப்பு:சமூக மாற்றத்தில் நமது பங்கு

சகோதரர் A.அஹமது பக்ருதீன் அவர்கள்
மாநில செயற்குழு  உறுப்பினர்
பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா
தலைப்பு:இந்தியாவில் முஸ்லிம்களின் நிலையும் ,இடஒடிகீடும்

நன்றிஉரை :சகோதரர் அக்பர் அலி அவர்கள்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்
பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா
குறிப்பு :பெண்களுக்கு தனி இடவசதி உண்டு
அழைக்கிறது
பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா
மஞ்சக்கொல்லை

உ.பி:எம்.எல்.சி பதவிக்கு இமாம் புகாரியின் மருமகன் மனு தாக்கல்!


Mulayam Placates Bukhari, Cleric's Son-In-Law To Get LC Seat
லக்னோ:டெல்லி ஜும்மா மஸ்ஜித் இமாம் ஸய்யித் புகாரியின் மருமகன் உமர் அலி கான் உத்தரபிரதேச சட்டமேலவை(எம்.எல்.சி) உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளார். சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளராக அவர் மனு தாக்கல் செய்தார். சட்ட மேலவையில் முஸ்லிம்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் உறுதி அளித்துள்ளார்.
ஸய்யித் புகாரிக்கும், சமாஜ்வாதி கட்சி தலைவர்களில் ஒருவரான ஆஸம்கானுக்கும் இடையே நிலவும் கருத்துவேறுபாடு குறித்து உமர் அலிகான் கூறுகையில், அவ்வாறான கருத்துவேறுபாடு எதுவும் இல்லை என்று பதில் அளித்தார்.

சிரியாவில் போர் நிறுத்தம்: ராணுவம் நகரங்களில் இருந்து வாபஸ் பெறவில்லை!


syria
டமாஸ்கஸ்:சர்வதேச தலையீட்டைத் தொடர்ந்து சிரியாவில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் நேற்று துவங்கியது. ஆனால், ராணுவம் தற்பொழுதும் நகரங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.
ஐ.நா-அரபு லீக் தூதர் கோஃபி அன்னனின் முயற்சியின் காரணமாக வியாழக்கிழமை முதல் போர் நிறுத்தத்தை பஸ்ஸாரின் அரசு அறிவித்தது. புதன்கிழமை நள்ளிரவிற்கு பிறகு துப்பாக்கிச்சூடு குறித்தோ, குண்டுவீச்சுக் குறித்தோ செய்திகள் வெளியாகவில்லை.

முபாரக் ஆதரவாளர்கள் அதிபர் தேர்தலில் போட்டியிட தடுக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!


Egypt parliament votes to sideline Mubarak figures
கெய்ரோ:எகிப்து அதிபர் தேர்தலில் முன்னாள் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியில் இடம்பெற்றிருந்த நபர்கள் போட்டியிட தடை விதிக்கும் மசோதாவுக்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முபாரக் ஆட்சியின் கடைசி நாட்களில் துணை அதிபர் பதவியை வகித்த முன்னாள் உளவுத்துறை தலைவர் உமர் சுலைமான் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக மனுத்தாக்கல் செய்ததை தொடர்ந்து பாராளுமன்றம் தலையிட்டுள்ளது. இச்சட்டம் அமுலுக்கு வருவதால் உமர்சுலைமான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
Blogger Wordpress Gadgets