ஹவானா:போப் 16-வது பெனடிக்டின் கோரிக்கையை ஏற்று அடுத்தவாரம் கிறிஸ்தவர்கள் புனித தினமாக கருதப்படும் புனித வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக கியூபா அரசு அறிவித்துள்ளது.
ஹவானாவில் கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுடன் நடத்திய சந்திப்பில் புனித வெள்ளியை விடுமுறை தினமாக அறிவிக்குமாறு போப் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதேவேளையில், புனித வெள்ளிக்கு எல்லா ஆண்டுகளிலும் விடுமுறை அளிக்கப்படுமா? என்பது குறித்து அரசு பின்னர் தீர்மானிக்கும் என்று தேசிய பத்திரிகை கூறுகிறது.
ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமையில் 1959-ஆம் ஆண்டு நடந்த கியூபா புரட்சியை தொடர்ந்து மத ரீதியான கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த விடுமுறை தினங்கள் ரத்துச் செய்யப்பட்டன.
புனித வெள்ளியை விடுமுறையாக அறிவித்துள்ள கியூபா அரசின் முடிவை வாடிகன் வரவேற்றுள்ளது.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteமாஷா அல்லாஹ்
சகோ அருமையான கட்டுரைகள்.
பலரும் அறிய இத்தளத்தை தமிழ்மணம். தமிழ்10, இன்ட்லி போன்ற திரட்டிகளில் இணைக்கவும்.
இன்ஷா அல்லாஹ் மேலும் விபரம் வேண்டின் என் மெயிலுக்கு தொடர்புக்கொள்ளவும்
gulamdhasthakir@gmail.com