Facebook Twitter RSS

Sunday, April 01, 2012

Widgets

பாக்தாத் அரபு உச்சி மாநாடு:அமைதி திட்டத்தை சிரியா அங்கீகரிக்க வேண்டும் – குவைத் அமீர்!


Kuwait's Emir Sheikh Sabah al-Ahmad Al-Sabah
குவைத் சிற்றி:ஐக்கிய நாடுகள் சபையும், அரபு லீக்கும் முன்வைத்த சமாதான திட்டத்தை சிரியா அங்கீகரிக்க வேண்டும் என்று குவைத் அமீர் ஷேக் ஸபாஹ் அல் அஹ்மத் அஸ்ஸபாஹ் வலியுறுத்தியுள்ளார்.
இரத்தக்களரியை நிறுத்திவிட்டு அமைதி திட்டத்தை அங்கீகரிக்க தயாராவதே பஸ்ஸாருல் ஆஸாதின் முன்னாள் உள்ள ஒரே வழி என்று அவர் தெரிவித்தார்.
நேற்று ஈராக் தலைநகரான பாக்தாதில் துவங்கிய 23-வது அரபு லீக் உச்சிமாநாட்டை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார் ஷேல் ஸபாஹ். அரபுலகின் அரசியல் களத்தில் இருந்து பல ஆண்டுகளாக விலகி நின்ற ஈராக்கில் இம்முறை அரபு லீக்கின் உச்சிமாநாடு நடப்பதில் மகிழ்ச்சியை தெரிவித்து உரையை துவக்கிய ஷேக் ஸபாஹ் சிரியா, ஃபலஸ்தீன், ஈரான் ஆகிய விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளித்தார்.

அவர் கூறியது:
தற்போது பிராந்தியம் சந்திக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை சிரியா மக்களின் பாதுகாப்பு ஆகும். கடந்த சில மாதங்களாக அரபு மக்கள் மற்றும் உலகத்தின் கண்ணும் காதும் சிரியாவை நோக்கி திரும்பியுள்ளன. சிரியா பிரச்சனைக்கு தீர்வு காண அரபுலீக் நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அரபுலீக்கும், ஐ.நாவும் கூட்டாக தயாரித்த சமாதான திட்டத்திற்கு பஸ்ஸாருல் ஆஸாத் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். அதுதான் தற்போதைய சிரியா பிரச்சனைக்கு தீர்வாக அமையும். தனது சொந்த குடிமக்களை அடக்கி ஒடுக்கும் பஸ்ஸாருல் ஆஸாத் அதில் இருந்து பின்வாங்கியே தீரவேண்டும். சிரியா பிரச்சனையில் ஐக்கிய நாடுகள் சபை கூடுதல் ஆதரவு உணர்வுடனும், பொறுப்புணர்வுடனும் முடிவு எடுக்கவேண்டும்.
ஐ.நா தீர்மானங்களையும், சர்வதேச சட்டங்களையும் மதித்து சுதந்திர ஃபலஸ்தீன் நாட்டை உருவாக்காமல் பிரச்சனை ஃபலஸ்தீன் பிரச்சனை தீராது. ஃபலஸ்தீன் மக்களின் மனித உரிமைகளை பறித்து அவர்களின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் அற்பமாக கருதி இஸ்ரேல் அட்டூழியத்தை தொடருவது கண்டிக்கத்தக்கது. இஸ்ரேலின் கொடூரத்தின் முன்னால் உலக சமூகம் மெளனம் சாதிக்கிறது.
ஃபலஸ்தீன் பிரதேசங்களில் யூதக்குடியிருப்புகள் கட்டுவதை நிறுத்தவேண்டும். பிரிவினை மதிலை அகற்றவேண்டும். மஸ்ஜிதுல் அக்ஸா மற்றும் ஜெருசலத்தின் நிலைமையை மாற்றும் வகையிலான நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும். இவற்றை உடன் நடைமுறைப்படுத்த சர்வதேச சமூகம் வலியுறுத்தவேண்டும்.
ஈரான் சர்வதேச அணுசக்தி ஏஜன்சியுடன் ஒத்துழைத்து செயல்படவேண்டும். அமைதியான காரியங்களுக்கு அணுசக்தியை பயன்படுத்துவதற்கு ஈரானுக்கு சுதந்திரம் உண்டு. மேற்காசியா பிராந்தியத்தை அணு ஆயுதம் இல்லாத பகுதியாக மாற்றவேண்டுமெனில் அதில் இஸ்ரேலையும் உட்படுத்த சர்வதேச அணுசக்தி ஏஜன்சி தயாராக வேண்டும் இவ்வாறு குவைத் அமீர் ஸபாஹ் கூறினார்

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets