Facebook Twitter RSS

Sunday, April 01, 2012

Widgets

எகிப்து அதிபர் தேர்தல்:12 ஆண்டுகள் சிறையில் வாழ்க்கையை கழித்த கைராத் அல் ஷாதிர் இஃவானுல் முஸ்லிமீன் வேட்பாளர்!


Egypt's Muslim Brotherhood names Khairat al-Shater as presidential
கெய்ரோ:எகிப்தில் அதிபர் பதவிக்கு நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான வேட்பாளரை இஃவானுல் முஸ்லிமீன் அறிவித்துள்ளது. தொழிலதிபரும் இஃவானுல் முஸ்லிமீனின் துணைத் தலைவருமான கைராத் அல் ஷாதிர் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்கு பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக இஃவானுல் முஸ்லிமீனின் ஃப்ரீடம் அண்ட்ஜஸ்டிஸ் கட்சி மாறியது.
துவக்கத்தில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று இஃவானுல் முஸ்லிமீன் முடிவு எடுத்தது. ஆனால், ராணுவ அரசு இஃவானுல் முஸ்லிமீனை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள துவங்கியது.

ராணுவத்தின் எதேச்சதிகார போக்கை கண்டித்து தனது முடிவை மறுபரிசீலனைச் செய்த இஃவான், அதிபர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தப் போவதாக அறிவித்தது.
அதிபர் தேர்தலில் இஃவானுல் முஸ்லிமீன் சரியான நபரை தேர்வுச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார் என்ற காரணத்தால் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் அரசு 12 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைராத் அல் ஷாதிர் முபாரக்கின் வீழ்ச்சியைத் தொடர்ந்து விடுதலைச் செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets