துபாய்:துபாயில் உலக அமைதிக்கான முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் விருது என்ற அமைப்பின் சார்பில் 06.04.2012 வெள்ளிக்கிழமை மாலை துபாய் உலக வர்த்தக மையத்தில் இருந்து உலக அமைதிக்கான மாபெரும் பேரணி நடைபெற இருப்பதாக peace நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தனர்.
உலக அமைதியை ஏற்படுத்துவதற்கு ஒரு முயற்சியாக இந்த பேரணி நடைபெற இருக்கிறது. இப்பேரணியில் அமீரகத்தில் வாழ்ந்து வரும் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் இன, மத, மொழி, நாடு என்ற பேதமின்றி கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த அமைதிப் பேரணியையொட்டி வண்ணமயமான பலூன்கள் வான்வெளியில் பறக்க விடப்படும். பாராசூட், மோட்டார் பைக்குகள், அலங்கார வாகனங்கள் என பல்வேறு விதமான வாகனங்கள் இப்பேரணியில் அணிவகுக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் மனிதாபிமான சேவையினை மையமாகக் கொண்டு துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நோயாளிகளைச் சந்தித்து அன்பளிப்புகளும் வழங்கப்பட் இருக்கிறது.
மேலதிக விபரங்களுக்கு 04 6087 602 / 050 798 10 76 / 04 333 47 67 எனும் தொலைபேசி எண்களிலோ அல்லதுmedia@peaceconvention.com எனும் மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment