தோஹா:கொலை குழுவிற்கு தலைமை தாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள ஈராக் துணை அதிபர் தாரிக் அல் ஹாஷிமி கத்தருக்கு வருகை தந்துள்ளார்.
ஈராக் அரசின் கைது வாரண்டை தொடர்ந்து சுயாட்சி பிரதேசமான குர்திஸ்தானில் அபயம் தேடிய தாரிக் அல் ஹாஷிமியின் கத்தர் வருகை அதிகாரப்பூர்வமானது என்று அவரது அலுவலகம் அறிவித்துள்ளது.
சன்னி முஸ்லிமான தாரிக் அல் ஹாஷிமி ஷியா முஸ்லிம்களை கொலைச்செய்ய போராளிக் குழுக்களுக்கு தலைமை தாங்கினார் என்பது ஈராக் உள்துறை அமைச்சகத்தின் குற்றச்சாட்டாகும். ஆனால், இக்குற்றச்சாட்டு அரசியல் தூண்டுதல் என்று ஹாஷிமி கூறுகிறார்.
கத்தர் அமீருடன் சந்திப்பை நடத்தும் ஹாஷிமி எப்பொழுது குர்திஸ்தானுக்கு செல்வார் என்பது தெரிவிக்கப்படவில்லை.
No comments:
Post a Comment