கெய்ரோ:முபாரக்கின் ஆட்சியில் அங்கம் வகித்தவர்களை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை தடைச் செய்யும் சட்டத்திற்கு உயர் ராணுவ கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது. இம்மாத துவக்கத்தில் இச்சட்டத்தை பாராளுமன்றம் நிறைவேற்றியது.
முபாரக் ஆட்சியில் உளவுத்துறை தலைவராகவும், துணை அதிபராகவும் பதவி வகித்த உமர் சுலைமான் மற்றும் பிரதமர் அஹ்மத் ஷஃபீக் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் நோக்கத்தில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது என கூறப்பட்டது.
சட்டத்திற்கு அனுமதி வழங்குவதாக பாராளுமன்ற குழு அறிவித்துள்ளது. இதனை அல் அஹ்ராம் பத்திரிகை வெளியிட்டுள்ளது. ஆனால், வியாழக்கிழமைக்கு முன்பாக இச்சட்டம் அமலுக்கு வந்தால் மட்டுமே ஷஃபீக் போட்டியிட தடை ஏற்படும். உமர் சுலைமான் உள்பட 10 பிரபல வேட்பாளர்களை தேர்தல் கமிஷன் தகுதியிழக்கச் செய்தது. நாளை வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.
முபாரக்கின் ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் அடங்கியதுதான் தேர்தல் கமிஷன். மே 23, 24 மற்றும் ஜூன் 16,17 தேதிகளில் எகிப்தில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment