சென்னை:புதுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற ஜூன் மாதம் 12-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை தொகுதியின் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த முத்துக்குமரன், கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் தேதியை மத்திய தேர்தல் கமிஷன் நேற்று(செவ்வாய் கிழமை) அறிவித்தது.
தேர்தல் அட்டவணை பின்வருமாறு:
வேட்புமனு தாக்கல் 18.5.12 (வெள்ளிக்கிழமை)
வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் 25.5.12 (வெள்ளிக்கிழமை)
வேட்புமனு பரிசீலனை 26.5.12 (சனிக்கிழமை)
வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் 28.5.12 (திங்கள்கிழமை)
தேர்தல் நாள் 12.6.12 (செவ்வாய்க்கிழமை)
வாக்கு எண்ணிக்கை 15.6.12 (வெள்ளிக்கிழமை)
தேர்தல் நடைமுறைகள் நிறைவு 18.6.12 (திங்கள்கிழமை)
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment