டெஹ்ரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான அறிவும், விஞ்ஞான திறனும் தங்களுக்கு இருப்பதாகவும், ஆனால், அதற்கு தாங்கள் தயாரில்லை என்று ஈரான் எம்.பி கோலமஸ்ரா மிஸ்பாஹி கூறியுள்ளார்.
பெருமளவில் யுரேனியம் செறிவூட்ட ஈரானால் இயலும். அதனை உபயோகித்து அணு ஆயுதம் தயாரிக்க இயலும். ஆனால், அது ஈரானின் நோக்கமல்ல என்று செய்தி இணையதளம் ஒன்றிற்கு பேட்டி அளிக்கையில் மிஸ்பாஹி கூறினார்.
ஈரானில் உயர் அரசியல் தலைவர் இவ்வாறு கூறுவது முதன் முறையாகும். ஆனால், மிஸ்பாஹி அரசு பிரதிநிதி அல்ல.
எரிசக்தி தேவைக்காகவே எங்களது அணுசக்தி என்று ஈரான் தொடர்ந்து கூறியபோதிலும் அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம் சாட்டி தடைகளை விதித்து வருகின்றன.
எரிசக்தி தேவைக்காகவே எங்களது அணுசக்தி என்று ஈரான் தொடர்ந்து கூறியபோதிலும் அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம் சாட்டி தடைகளை விதித்து வருகின்றன.
அதேவேளையில், அணு ஆயுதம் தயாரிப்பது ஈரானின் நோக்கம் அல்ல என்று ஈரானின் உயர் ஆன்மீக தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னஈ கூறியுள்ளார். இவ்வாறு அணு ஆயுதம் தயாரிப்பது பாவமான, ஆபத்தான செயல் என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment