உலகின் முதலாவது விமாணப்பயண தொழுகை கணிப்பான்(calculator)
சிங்கபபூர் கம்பனியொன்றால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதனால்
விமானத்தில் பயணம் செய்யும் முஸ்லிம்கள் தமது தொழுகை
நேரங்களை இலகுவாக அறிந்துகொள்வதற்கான சந்தர்ப்பம்
கிடைக்கப்பெற்றுள்ளது.இக்கணிப்பானானது இணைய வழியில்
செயற்படக்கூடியது.இது குறித்த நாட்டின் நகரினது,விமானம்
சென்றடையும் நகரத்தினதும் நாட்டினதும் தொழுகை நேரங்களை
பதிவுசெய்து விமாணப்பயனத்தின் போதான சரியான தொழுகை
நேரங்களை கணிக்கின்றது.புவியில்ஒருவர் நிலைகொண்டுள்ள
எவ்விடத்திலும் இருந்து தெழுகைநேரங்களை அறிந்துகொள்ளவும்
இக்கணிப்பானை பாவிக்கமுடியுமாக இருப்பதுடன்,விமானப் பயணத்தில் தெழுகைநேரங்களில் பிரச்சினைகளைதீர்த்து சரியான தொழுகை நேரங்களை இதனால் அறிந்துகொள்ள முடியும்.ஒருவர் விமானத்தில் பயணம் செய்ய முன்னர் குறித்த இணையதளத்தில் உள்ள
இணையவழி தெழுகை கணிப்பானில் தாம் இருக்கும் இடத்தின்
தொழுகை நேரங்களையும்,விமானம் சென்றடையும் விமானநிலையம்
அமைந்துள்ள நகரையும்,விமானப்பயணநேரத்தையும் பதிவுசெய்வதன்
மூலம் விமானப் பயணத்தின் போதான தொழுகை நேரங்களை
பெற்றுக்கொள்ள முடியும்.
விமானத்தொழுகை கணிப்பானானது முஸ்லிம்பயணிகளினால்
வரவேற்கப்பட்டுள்ளது.விமானத்தில் வேறுபட்ட நேரவலயங்களை
ஊடறுத்துப் பயணம் செய்பவர்களுக்கு நீண்டகாலமாக தொழுகை
நேரங்கள் பற்றிய பிரச்சினை இருந்துவந்தது எனினும் விமானத்தொழுகை கணிப்பான் உருவாக்கத்தினால் தற்போது இப்பிரச்சினை நீக்கப்பட்டுள்ளதாக அபூதாபி இஸ்லாமிய வங்கியின் பிரதித்தலைவர் சிராஸ் ஸித்தீக் தெரிவித்துள்ளார்.கீழ்வரும் இணையதளத்தில் விமானப்பயன தொழுகைகணிப்பானின் மூலம் விமானப்பயண தொழுகை நேரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
http://www.crescentrating.com/en/air-travel-prayer-time-calculator.htm
Thursday, April 12, 2012
உலகின் முதலாவது விமானப்பயண தொழுகை கல்குலேடர் சிங்கப்பூர் கம்பனியால் அறிமுகம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment