கெய்ரோ:புரட்சிக்கு பிந்தைய எகிப்தில் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்க நியமிக்கப்பட்ட நூறு உறுப்பினர்களை கொண்ட குழுவை கெய்ரோ ஆட்சி நிர்வாக நீதிமன்றம்(Administrative Court) கலைத்து உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் அரசியல் சாசன உருவாக்க குழுவில் பிரதிநிதித்துவம் இல்லை என்று குற்றம் சாட்டி ஒரு சில அமைப்புகள் சமர்ப்பித்த மனுவின் மீதான விசாரணையில் நீதிமன்றம் குழுவை கலைக்க உத்தரவிட்டது.
பெண்கள், இளைஞர்கள், சிறுபான்மை மத பிரிவினர் ஆகியோருக்கு அரசியல் சாசன உருவாக்க குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்று தீவிர மதசார்பற்ற வாதிகள் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தனர். இஃவானுல் முஸ்லிமீன், அந்நூர் ஆகிய இஸ்லாமிய கட்சிகளின் உறுப்பினர்கள் அதிகமாக அரசியல் சாசன உருவாக்க குழுவில் இடம்பெற்றது மதசார்பற்றவாதிகளுக்கு வயிற்றெரிச்சலை கிளப்பியது. இதனை சுட்டிக்காட்டி சில பிரதிநிதிகள் அரசியல் சாசன உருவாக்க குழுவில் இருந்து விலகினர்.
No comments:
Post a Comment