பெர்லின்:ஈரானுக்கு எதிராக போர் மிரட்டல் விடுக்கும் இஸ்ரேலை கண்டித்து நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் இலக்கியவாதி குந்தர் கிராஸ் கவிதை எழுதியுள்ளார்.
ஜெர்மன் பத்திரிகையில் வெளியான வோட் மஸ்ட் பி ஸெட் என்ற பெயரிலான கவிதையில் க்ராஸ் இஸ்ரேலின் அராஜகத்தை விமர்சித்துள்ளார்.
அணு ஆயுத நாடான இஸ்ரேல் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் என்று சுட்டிக்காட்டும் க்ராஸ், நாசி ஜெர்மனி யூதர்களுக்கு எதிராக நடத்திய கொடூரங்கள் குறித்த அவமானத்தில் இவ்வளவு காலம் இஸ்ரேலுக்கு எதிராக எதிர்ப்பை தெரிவிக்காமல் இருந்துள்ளது என்று கூறுகிறார். ஆனால், இனியும் இவ்விவகாரத்தை காரணம் காட்டி மெளனமாக இருந்தால் அது பெரிய பாதகமாக மாறிவிடும் என்று க்ராஸ் தனது கவிதையின் மூலமாக வாசகர்களிடம் கூறுகிறார்.
இடதுசாரி ஆதரவான சிந்தனையை கொண்ட க்ராஸ், ஜெர்மனி அண்மையில் இஸ்ரேலுக்கு அளிக்கும் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் குறித்த ஒப்பந்தத்தை விமர்சித்துள்ளார்.
No comments:
Post a Comment