இஸ்லாமாபாத்:ஈரான்-பாகிஸ்தான் எரிவாயு குழாய் திட்டம் பூர்த்தியாகும் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் அழுத்தத்தைத் தொடர்ந்து எரிவாயு குழாய் திட்டத்தை பாகிஸ்தான் நிறுத்திவைக்கும் என்று செய்திகள் வெளியான சூழலில் வெளியுற அமைச்சக செய்தி தொடர்பாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதேவேளையில், ஈரானுடன் எரிவாயு குழாய் திட்டத்தை நிறுத்தினால் பாகிஸ்தான் எரிசக்தி தேவைகளை பரிசீலிப்போம் என்றும் சவூதிஅரேபியா இஸ்லாமாபாத்துக்கு
தெரிவித்துள்ளது. பொருளாதார, எரிசக்தி துறைகளில் நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு எண்ணெய் வளத்திற்கான வாய்ப்புகளை உருவாக்க கடனுதவி வழங்கப்படும் என்று சவூதி அரேபியா வாக்குறுதி அளித்துள்ளது.
எரிவாயு குழாய் திட்டத்தை பூர்த்திச்செய்ய நிதியுதவி அளிக்க ரஷ்யா தயார் என்று அறிவித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதிநிதி கூறுகிறார். 1.5 மில்லியன் டாலர் நிதியுதவியை ரஷ்ய நிறுவனம் வாக்களித்ததாக கடந்த மாதம் 28-ஆம் தேதி பாகிஸ்தான் பெட்ரோலிய செயலாளர் இஜாஸ் சவுதரி கூறியிருந்தார்.
பாகிஸ்தானின் எரிவாயு குழாய் திட்டத்திற்கு எதிராக அமெரிக்கா கடுமையான அழுத்தம் கொண்டிருக்கிறது. தினமும் 21.5 மில்லியன் க்யூபிக் மீட்டர் எரிவாயுவை ஈரானில் இருந்து பாகிஸ்தான் இறக்குமதிச் செய்யலாம் என்ற அடிப்படையில் திட்டம் அமைந்துள்ளது.
இந்தியாவும் இந்த திட்டத்தில் ஒரு பகுதியாக இடம் பெற்றிருந்தது. அமெரிக்காவின் எதிர்ப்பை தொடர்ந்து தற்பொழுது அந்த திட்டம் வேண்டாம் என்றது.
No comments:
Post a Comment