புதுடெல்லி:கடந்த 2008-ம் ஆண்டு டெல்லியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இந்தியன் முஜாஹிதீன் என்று காவல்துறையால் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜியாவுர் ரஹ்மான் நிரபராதி என்று நிரூபிக்க டெல்லி மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடுகிறார்.
டெல்லி தொடர் குண்டு வெடிப்பிற்குப் பின்னர் நடந்த பாட்லா ஹவுஸ் போலி என்கௌண்டரில் டெல்லி காவல்துறையால் ஜியாவுர் ரஹ்மான் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது டெல்லி மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடுகிறார். மேலும் தற்போதைய கவுன்சிலரான ஷொயிப் தானிஷும் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
ரஹ்மானின் சார்பில் அவரின் 63 வயது தந்தை அப்துர் ரஹ்மான் மற்றும் அவரின் அம்மா, சகோதரிகள் ஆகியோர் பிராச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் ரஹ்மானுக்கு அப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஆசிப் முஹம்மத் காணும் மற்றும் சமூக ஆர்வலர் அமனதுல்லா காணும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
ஜியாவின் தந்தை அப்துர் ரஹ்மான் தனது மகனின் மீது பொய் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தாங்கள் வீடு வீடாக சென்று அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு ஆதரவு தருமாறு பிரச்சாரம் செய்வதாகவும் மக்கள் தனது மகனுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜியா தான் குற்றமற்றவர் என்றும் மேலும் தனது குடும்ப கௌரவத்தையும் காப்பாற்ற போராடி வருகிறார் என்று சமூக சேவகர் அமனதுல்லா தெரிவித்துள்ளார். மேலும் சட்டமன்ற உறுப்பினரான கானோ ஜியா தனது அநியாயமான கைதிற்கு விசாரணை கோரி காங்கிரஸ் அரசிற்கு அனுப்பும் செய்தியே இந்த தேர்தல் போட்டி என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment