Facebook Twitter RSS

Sunday, April 01, 2012

Widgets

இஸ்லாமிய வங்கியலை நடைமுறைப்படுத்த முடியாது: மத்திய அரசு-ஐ.சி.ஐ.எஃப் எதிர்ப்பு!


இஸ்லாமிய வங்கியலை நடைமுறைப்படுத்த முடியாது- மத்திய அரசு
புதுடெல்லி:வட்டியில்லா இஸ்லாமிய வங்கியியலை இந்தியாவில் நடைமுறைப்படுத்த இயலாது என்ற முடிவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மத்திய நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயணன் மீனா மாநிலங்களவையில் அளித்த பதிலில் வட்டியில்லா வங்கியியல் திட்டத்தை மத்திய அரசு தற்போது நடைமுறைப்படுத்தாது என்று அறிவித்தார்.
ரிசர்வ் வங்கியின் தற்போதைய கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்களின் அடிப்படையில் வட்டியில்லா வங்கியியல் சாத்தியமில்லை என்று அமைச்சர் கூறினார். இந்தியாவில் வட்டியில்லா வங்கியியல் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரும் இந்தியன் சென்டர் ஃபார் இஸ்லாமிக் ஃபினான்ஸ்(ஐ.சி.ஐ.எஃப்) இதனைக் குறித்து ஆராய்ந்தபொழுது ரிசர்வ் வங்கி அதற்கு சாத்தியமில்லை என்று பதில் அளித்ததாக மீனா தனது பதிலில் குறிப்பிட்டார்.

அதேவேளையில், மத்திய அரசின் முடிவிற்கு ஐ.சி.ஐ.எஃப் கண்டனம் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் அமைச்சர் அளித்த பதில் உண்மைக்கு புறம்பானது என்று ஐ.சி.ஐ.எஃபின் பொதுச்செயலாளர் அப்துற்றகீப் குற்றம் சாட்டினார். தற்போதைய சட்டங்களின் அடிப்படையில் இஸ்லாமிய வங்கியியல் சாத்தியமில்லை என்று ரிசர்வ் வங்கி கூறினால் அச்சட்டங்களை திருத்தவேண்டும்  என்று அப்துற்றகீப் கூறுகிறார்.
மேலும் அவர் கூறியது:ரகுராம் ராஜன் கமிட்டியின் சிபாரிசு அடிப்படையில் வங்கியியல் துறை இதுவரை சென்றடையாத பெரும்பான்மை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் வட்டியில்லாத இஸ்லாமிய வங்கியியல் திட்டத்தை மத்திய அரசின் முன்னால் வைத்தோம். பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து உலகம் முழுவதும் மாற்று பொருளாதார திட்டமாக இஸ்லாமிக் வங்கியியல் திட்டத்தை அமுல்படுத்தி வருகிறது. சர்வதேச வங்கியியலின் 15 சதவீதமும் தற்பொழுது இஸ்லாமிய வங்கியியலின் அடிப்படையிலாகும்.
முஸ்லிம் நாடுகள் மட்டுமல்ல, பிரிட்டன், பிரான்சு, ஜப்பான், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய இடங்களிலும் இஸ்லாமிய வங்கியியல் துவங்கியுள்ளது.
இந்திய பொருளாதார வளர்ச்சி சதவீதம் 9 க்கும் 9.5 சதவீதத்திற்கும் இடையே எட்டவேண்டும் என்றால் இந்தியாவுக்கு ஆயிரம் கோடி அமெரிக்க டாலரின் முதலீடு அடிப்படை வசதித்துறையில் அத்தியாவசியமாகும். பாரம்பரிய வழிகள் மூலமாக இது சாத்தியமில்லை என்பது நடப்பு திட்ட ஆண்டில் இது நிரூபணமானது. இஸ்லாமிய வங்கியல் துவங்கினால் மேற்காசியாவில் இருந்து மட்டும் 1500 கோடி அமெரிக்க டாலர் முதலீட்டை  ஈர்க்க இயலும் என்று அப்துற்றகீப் கூறினார்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets